Google search engine
வெளிநாட்டு ஆய்வு கப்பல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அடுத்தாண்டு முதல் விலக்கிக்கொள்ள இலங்கை முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன ஆய்வுக் கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த2022-ம் ஆண்டு சீனாவின் ஆய்வுகப்பல் யான் வாங் 5 இலங்கையில் உள்ள ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் நின்று சென்றது. கடந்த 2023-ம் ஆண்டில் சீனாவின் யான் வாங் 6 ஆய்வு கப்பல் இலங்கை வந்து சென்றது....
பிரான்ஸ் நாட்டில் ஜூன் 30 மற்றும் ஜூலை 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின் படி இடதுசாரி கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. இந்த முறை அங்கு வலதுசாரி கூட்டணி கட்சியான நேஷனல் ரேலி தலைமையில் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இடதுசாரி கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் முன்னிலை பெற்று இருந்தாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை அந்தக்...
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று (திங்கட்கிழமை) ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்தியா - ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்கும் அவர், அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த சூழலில் பிரதமர் மோடியின் வருகையை மேற்கத்திய நாடுகள் பொறாமையுடன் பார்ப்பதாக மாஸ்கோவின் செய்தித் தொடர்பாளர் பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். “மேற்கத்திய நாடுகள் இந்திய பிரதமர் மோடி, ரஷ்யாவுக்கு வருகை தருவதை...
பிரிட்டனில் நேற்று நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் வாக்களித்தனர். வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கியது. பிரிட்டனில் கடந்த 14 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. எனினும், இந்த காலகட்டத்தில் பிரதமர்கள் மாறிக் கொண்டே வந்துள்ளனர். இப்போது 5-வது நபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் (44) பிரதமராக பதவி வகிக்கிறார். இந்நிலையில், அங்கு...
பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் லேபர் கட்சி வேட்பாளர் கீர் ஸ்டார்மர் முன்னிலை வகிக்கிறார். அவர் பிரதமராகும் சூழல் கணிந்துள்ளது. பிரதமராக இருந்த கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் ரிஷி சுனக் படுமோசமாக பின்தங்கியுள்ளார். கீர் ஸ்டார்மர் அவர் போட்டியிட்ட லண்டன் தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில், “நீங்கள் வாக்களித்துவிட்டீர்கள்; இனி நாங்கள் பணியாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது” என வாக்காளர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். 350+...
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் அனைத்து சமூக வலைதள சேவையும் சுமார் ஆறு நாட்களுக்கு தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 13 முதல் 18-ம் தேதி வரையில் அங்கு இந்த தடை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம் குறித்து பார்ப்போம். பஞ்சாப் மாகாண முதல்வர் மர்யம் நவாஸ் தலைமையிலான அரசு இதனை அறிவித்துள்ளது. இது தொடர்பான பரிந்துரையை ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு, மத்திய அரசிடம்...
 பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளது கன்சர்வேட்டிவ் கட்சி. இந்நிலையில், இந்த தோல்விக்கு முழு பொறுப்பேற்கிறேன் என அக்கட்சியை சேர்ந்தவரும், பிரதமருமான ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். அந்த நாட்டில் லேபர் கட்சி ஆட்சி அமைக்கிறது. தோல்வி குறித்து ரிஷி சுனக், “தேர்தலில் லேபர் கட்சி வெற்றி பெற்றுள்ளது. நான் கீர் ஸ்டார்மரை தொடர்பு கொண்டு பேசினேன். அவருக்கு எனது வாழ்த்தினை தெரிவித்தேன். இன்று ஆட்சி அதிகாரம் அமைதியான முறையில் கைமாறியுள்ளது....
அமெரிக்க அதிபர் தேர்தல் 2024-க்கான முதல் நேரடி விவாதத்தில் அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் பங்கேற்றனர். இந்த விவாதம் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் பைடன் செயல்பட்ட விதம் விமர்சனத்துக்குள் ஆனது. இந்தச் சூழலில் அதற்கான விளக்கத்தை அவர் கொடுத்துள்ளார். கடந்த வாரம் நடந்த விவாதத்தில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும் நேரடி...
மேற்கு கரையில் தேடுதல் வேட்டையின்போது காயமடைந்த பாலஸ்தீனரை இஸ்ரேலிய ராணுவம் ஜீப்பில் கட்டி இழுத்துச் சென்றசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மனித உரிமை மீறல் என சர்வதேச அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. ஹமாஸ் ஆயுதக் குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், பலர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் விதமாக ஹமாஸ் ஆயுதக் குழுக்கள் மீது...
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லாரன்ஸ் வான் என்ற பெண் கடந்த1993-ம் ஆண்டு டெலிகாம் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.பகுதி பக்கவாதம் மற்றும் வலிப்புநோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு ஏற்ற பணி தொடக்கத்தில் வழங்கப்பட்டது. கடந்த 2002-ம் ஆண்டு, வேறுபகுதிக்கு பணியிடம் மாற்றம் பெற்று சென்றார். அங்கு அவருக்குஏற்ப வேலை வழங்கவில்லை. இதனிடையே 2013-ல் இந்நிறுவனம் ஆரஞ்ச் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. லாரன்ஸ்வானுக்கு எந்த பணியையும் வழங்கவில்லை. இது தொடர்பாக வாசன்ஹோவ் நீதிமன்றத்தில்...