Google search engine
 ​பாகிஸ்​தானுக்கு எதி​ராக இந்​தியா மேற்​கொண்ட ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின்​போது போலாரி தளத்​தில் நிறுத்​தப்​பட்​டிருந்த கண்​காணிப்பு விமானம் அழிக்​கப்​பட்​டதை பாகிஸ்​தானின் முன்​னாள் ஏர் மார்​ஷல் மசூத் அக்​தர் உறு​திப்​படுத்​தி​யுள்​ளார். பஹல்​காமில் தீவிர​வா​தி​கள் நடத்திய தாக்​குதலில் 26 பேர் உயி​ரிழந்​தனர். இந்த சம்​பவத்​தின் பின்​னணி​யில் பாகிஸ்​தான் இருப்​பது தெரிய​வந்​ததையடுத்து அந்த நாட்​டின் மீது ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கையை இந்​தியா தொடங்​கியது. அதன் பின்​னர் புரிந்​துணர்வு அடிப்​படை​யில் இந்​தி​யா-​பாகிஸ்​தான் போர் நிறுத்​தப்​பட்​டது. ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின்​போது...
காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து சர்ச்சைக்குரிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காண இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரும், துணை பிரதமருமான இஷாக் தர் விருப்பம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் செனட் உறுப்பினர்களிடையே உரையாற்றிய இஷாக் தர் இதுகுறித்து மேலும் கூறுகையில், “ இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து பிரச்சினைகளையும் பேசி தீர்க்க அரசியல் செயல்முறை...
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அரபு நாடுகளுக்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தில் சிரியாவின் இடைக்கால அதிபர் அஹ்மத் அல்-ஷராவை அதிபர் ட்ரம்ப் சந்தித்திருப்பது சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியிருப்பதற்கான பின்னணியை சற்று விரிவாக பார்க்கலாம். அதிபர் ட்ரம்பின் இந்த அரபு நாடுகளுக்கான பயணத்தில் அவர் சிரியாவின் இடைக்கால அதிபர் அஹ்மத் அல்-ஷராவை சவுதி தலைநகர் ரியாத்தில் சந்தித்தார். கடந்த 25 ஆண்டுகளில் (கால் நூற்றாண்டுகள்) இந்த...
துருக்கியில் வியாழக்கிழமை நடக்கும் உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தையில் ரஷ்ய அதிபர் புதின் கலந்து கொள்ளவில்லை என்று ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். இதனிடையே பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் குழுவினர்களின் பெயர்களை ரஷ்யா வெளியிட்டுள்ளது. விளாடிமிர் மெடின்ஸ்கி தலைமையில் துணை வெளியுறவு அமைச்சர் மிகேல் கலுசின், துணை பாதுகாப்பு அமைச்சர் அலெக்சாண்டர் போமின்,ரஷ்ய பாதுகாப்பு படைகளின் இயக்குநர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். உக்ரைன் உடனான அமைதி பேச்சுவார்த்தை துருக்கி...
பாகிஸ்தானில் உள்ள எந்த ஓர் அணு உலையில் இருந்தும் கதிர்வீச்சு கசிவு இல்லை என்று உலகளாவிய அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) உறுதிபட தெரிவித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து கடந்த 7-ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியது. இதில், 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம்...
ஈரானின் அணுசக்தி திட்டத்தைப் பொறுத்தவரை, புத்திசாலித்தனமான தீர்வு வேண்டுமா அல்லது கொடூரத் தாக்குதல் வேண்டுமா என்பதை அந்நாடு முடிவு செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. அணு ஆயுத உற்பத்தியை நிறுத்த வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் அமெரிக்கா தொடர்ந்து ஈரானை எச்சரித்து வருகிறது. இந்நிலையில், கத்தார் தலைநகர்...
பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) கண்காணிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ஷஃப்கத் அலி கான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தக் கருத்து பொறுப்பற்றது. இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான பாகிஸ்தானின் பாரம்பரிய பாதுகாப்பு வழிமுறைகள் மீது இந்தியாவுக்கு உள்ள ஆழ்ந்த விரக்தியையே இது...
அமெரிக்காவில் நிகழ்ந்த மலையேற்ற விபத்தில் இந்திய வம்சாவளி தொழில்நுட்ப வல்லுநர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். வடமேற்கு அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் காஸ்கேட்ஸ் மலைத்தொடர் உள்ளது. இந்நிலையில் சியாட்டில் நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளி தொழில்நுட்ப வல்லுநரான விஷ்ணு இரிகிரெட்டி (48) கடந்த சனிக்கிழமை தனது 3 அமெரிக்க நண்பர்களுடன் இந்த மலைத்தொடரின் 'நார்த் இயர்லி வின்ட்டர் ஸ்பயர்' பகுதியில் ஏறினார். அப்போது புயல் வருவதை கவனித்த மலேயற்ற குழு பின்வாங்கத்...
இந்திய பாதுகாப்புப் படையினர் கடந்த 7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது வான் வழியாக துல்லிய தாக்குதல் நடத்தினர். இதில், பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ் இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைமையகம் தரைமட்டமானது. அந்த வளாகத்தில் தங்கியிருந்த அந்த அமைப்பின் தலைவரும் ஐ.நா.வின் சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் இடம்பெற்றிருப்பவருமான மசூத் அசாரின் மூத்த சகோதரி, 5 குழந்தைகள் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14...
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது பணியாளர்களில் 3 சதவீதத்தை, அதாவது 6,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உலக அளவில் சுமார் 2,28,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். அதே போல் 10,000 ஊழியர்களை கடந்த 2023 ஆம் ஆண்டு வேலையை விட்டு அனுப்பியிருந்தது. இந்நிலையில், தற்போது, மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது பணியாளர்களில் 3 சதவீதத்தை, அதாவது 6,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி...