அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் நேற்று பதவியேற்றார்.
அமெரிக்காவில் கடந்த 2024 நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் அமோக வெற்றி பெற்றார். அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் ஜனவரி 20-ம் தேதி பதவி ஏற்பது வழக்கம். அதன்படி, பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. வழக்கமாக, வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடமான கேபிடல் வளாகத்தின் திறந்தவெளியில்தான் பதவியேற்பு விழா நடைபெறும். அங்கு கடும்...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஊழல் வழக்கில் சிறப்பு நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் (72), தெஹ்ரிக் இ இன்சாப் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி தேர்தலில் வெற்றி பெற்றார். கடந்த 2022-ம் ஆண்டு தேர்தலில் இம்ரான் கான் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், ராணுவ நெருக்கடி மற்றும் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் அவரது ஆட்சி...
ஸ்டார்ஷிப் ராக்கெட் விண்ணில் வெடித்து சிதறியது: பூஸ்டர் வெற்றிகரமாக ஏவுதளத்துக்கு திரும்பியது
admin - 0
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மெகா ராக்கெட் விண்ணில் ஏவுப்பட்ட 8-வது நிமிடத்தில் வெடித்துச் சிதறியது. அதன் பூஸ்டர் வெற்றிகரமாக ஏவுதளம் திரும்பியது.
தொலைதூர கிரகங்களுக்கு விண்கலங்களை அனுப்ப ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ‘ஸ்டார்ஷிப் ’ என்ற மெகா ராக்கெட்டை விண்ணில் ஏவும் பரிசோதனையை மேற்கொண்டு வருகிறது. கடந்தாண்டு அக்டோபரில் மேற்கொள்ளப்பட்ட முதல் பரிசோதனை வெற்றி பெற்றது. நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை தோல்வியடைந்தது. இதன் 7-வது பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது....
காசா போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் பிணையக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், நாளை (ஞாயிறு) முதல் ஹமாஸ் தரப்பு பிணைக் கைதிகளை விடுவிப்பதும் அதற்கு மாற்றாக சிறைகளில் இருந்து பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிப்பதும் நிகழவிருக்கிறது. இருப்பினும் இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகவே அமைந்துள்ளது.
3 கட்டங்களாக.. போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததும் முதல் ஆறு...
ஏமனின் ஹவுதி படைகள் இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளன. இதனால் டெல் அவிவ் நகரம் மற்றும் மேற்குக் கரையில் உள்ள சில இஸ்ரேலிய குடியிருப்பு பகுதிகளில் சைரன்கள் எழுப்பப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் இதுவரை உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. எனினும் இந்த தாக்குதலில் ஜெருசலேமின் புறநகரில் உள்ள மேவோ பெய்டார் மற்றும் த்சூர் ஹடாசாவில் வீடுகள் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சேதத்தை...
ரஷ்ய ராணுவத்தில் பணியில் இருந்த கேரள மாநிலத்தை சேர்ந்தவர் யுத்த களத்தில் தாக்குதலில் உயிரிழந்த நிலையில் அங்கு ராணுவப் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியர்கள் அனைவரையும் விரைந்து விடுவிக்க வேண்டும் என இந்தியா மீண்டும் கோரிக்கை வைத்துள்ளது. இதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் உறுதி செய்துள்ளார்.
“ரஷ்ய நாட்டு ராணுவத்தில் பணியில் இருந்த கேரளவைச் சேர்ந்த இந்தியர் உயிரிழந்த தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. இது துரதிர்ஷ்டவசமானது....
காசா பகுதியில் போர்நிறுத்தம்; பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பான வரைவு ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொண்டுள்ளதாக இது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இரண்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒப்பந்தத்தை இறுதி செய்யும் கட்டத்தில் பேச்சுவார்த்தை இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
எகிப்து அதிகாரி மற்றும் ஹமாஸ் அதிகாரி என இருவர் இந்தத் தகவலினை உறுதி செய்துள்ளனர். பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் கூறினார். என்றாலும் ஒப்பந்தத்தின் விவரங்கள் இறுதி செய்யப்பட்டு வருகிறது....
நிறவெறிக்கு எதிராக காந்தியவழியில் அறப்போராட்டம் நடத்தி வரலாறு படைத்த மார்டின் லூதர் கிங்-ஜூனியர் பிறந்த தினம் இன்று (15 ஜனவரி). அவரது 95-வது பிறந்தநாளில் அவரைப் போற்றும் வகையில் அவருடைய சக்திவாய்ந்த, பிரபலமான மேற்கோள்கள் சிலவற்றை நினைவுகூர்கிறோம்.
உண்மையான சமாதானம் என்பது பிரச்சினைகள் இல்லாமை அல்ல; மாறாக நீதி நிலவுதலே உண்மையான சமாதானம்.
நமக்கான வாய்ப்புகள் மறுக்கப்படும்போது நாம் கையறு நிலையில், ஆடையற்று, நிற்கதியாக இருக்கச் செய்யப்படுகிறோம்.
மனம் அடிமைப்பட்டு கிடக்கும் வரை...
கலிபோர்னியாவில் பரவும் காட்டுத்தீயிலிருந்த தங்களது சொகுசு வீடுகளை பாதுகாக்க அங்குள்ள கோடீஸ்வரர்கள், லட்சக்கணக்கில் செலவழித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடர்ந்து காட்டுத்தீ பரவி வருகிறது. இந்த காட்டுத் தீயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது. ஈட்டன் பகுதியில் 11 பேரும், பாலிசேட்ஸ் பகுதியில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ள பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பதால் தீயை அணைப்பதில் சிக்கல் நீடிப்பதாக தெரியவந்துள்ளது....
சீனாவின் சான்சி மாகாணத்தில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரோனா பெருந்தொற்று காலம் முதல் சீன அதிபர் ஜி ஜின்பிங் மீதான நம்பிக்கையை அந்த நாட்டு மக்கள் இழந்துள்ளனர். பொருளாதார தேக்கநிலை, வேலையின்மை, சர்வாதிகாரம், மத சுதந்திரம் மறுப்பு உள்ளிட்ட காரணங்களால் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு எதிராக அவ்வப்போது பொதுமக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தற்போது பள்ளி மாணவரின் மர்ம மரணம் தொடர்பாக...










