கிழக்கு லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கு பகுதியில் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவரும் உள்ளூர் தளபதியுமான ஷேக் முகமது அலி ஹமாடி நேற்று முன்தினம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து 'இஸ்ரேல் டைம்ஸ்' நேற்று வெளியிட்ட செய்தியில், மேற்கு பெக்கா மாவட்டத்தின் மச்காரா பகுதியில் ஹமாடி தனது வீட்டுக்கு அருகில் துப்பாக்கியால் 6 முறை சுடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதில் காயம் அடைந்த ஹமாடி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு...
அமெரிக்காவின் வளர்ச்சிக்கு மிகவும் திறமையான வெளிநாட்டினரின் பங்களிப்பு தேவை என்பதால் எச்1பி விசா நடைமுறையை நிறுத்த விரும்பவில்லை என்று புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 47-வது அதிபராக அண்மையில் பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், வெள்ளை மாளிகையில், ஆரக்கிள் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி லாரி எல்லிஸன், சாப்ட்பேங்க் சிஇஓ மசயோசி சன், ஓப்பன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் ஆகியோரை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார்....
இந்தியா உள்ளிட்ட ‘பிரிக்ஸ்’ நாடுகளுக்கு அதிபர் ட்ரம்ப் மிரட்டல்: முதல் நாளில் பல்வேறு உத்தரவுகளில் கையெழுத்து
admin - 0
டாலருக்கு பதில் புதிய கரன்சியை கொண்டுவர முயற்சித்தால் இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் பொருட்கள் மீது 100% வரி விதிக்கப்படும் என டொனால்டு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது: சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் முக்கியத்துவத்தைக் குறைப்பது குறித்து எந்த நாடாவது பரிசீலிக்குமானால், அந்த நாட்டு நிறுவனங்கள் இங்கு மேற்கொள்ளப்படும் வர்த்தகத்துக்கு கூடுதல்...
உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறும் முடிவை அமெரிக்கா மறுபரிசீலனை செய்யும் என்று அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானான் கேரியாசஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் நேற்று முன்தினம் பதவியேற்றார். அவர் பதவியேற்றதும், உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தார். இதுதொடர்பாக அமெரிக்க அரசு வெளியிட்ட அறிக்கையில், “சீனாவில் இருந்து உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவியது. ஆனால் கரோனா பெருந்தொற்றை...
பிறப்புரிமை அடிப்படையில் இனி தானாக அமெரிக்க குடியுரிமையை கோரமுடியாது என புதிய அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட டொனால்டு டிரம்ப் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவரின் இந்த அறிவிப்பு அமெரிக்காவில் தற்காலிகமாக தங்கி வேலை செய்யும் இந்தியர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுக் கொண்ட டிரம்ப், எரிசக்தி பயன்பாடு, குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு, அமெரிக்க குடியேற்ற கொள்கையில் மாற்றம் என பல்வேறு தடாலடியான அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில்...
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்கும் விழாவில் அவருக்குப் பிறகு துணை அதிபர் ஜே.டி.வான்ஸின் மனைவியும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான உஷா வான்ஸ் அதிக கவனம் ஈர்த்தார்.
அமெரிக்காவில் 47-வது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் நேற்று முன்தினம் பதவியேற்றார். அவருடன் துணை அதிபராக ஜே.டி. வான்ஸ் பதவியேற்றுக்கொண்டார். விழாவில் இவரது மனைவி உஷா வான்ஸ், குழந்தைகள் ஈவன், விவேக், மிராபெல் ஆகியோரும் பங்கேற்றனர். அதில் குழந்தைகளின் சில...
துருக்கியில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 66 பேர் உயிரிழந்தனர். 51 பேர் காயமடைந்தனர்.
துருக்கியின் வடமேற்கு பகுதியில் உள்ள போலு மாகாணத்தில் கிப்ரிஸிக் நகரில் கர்தால்கயா ஸ்கை ஓட்டல் உள்ளது. 12 தளங்களைக் கொண்ட இதில் உள்ள உணவக பகுதியில் நேற்று அதிகாலையில் தீப்பிடித்துள்ளது. பின்னர் அந்தக் கட்டிடம் முழுவதும் தீ மளமளவென பரவியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புப் படை...
“அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கட்டணத் திட்டங்கள் சர்வதேச பொருளாதார உறுதித்தன்மையை பாதிக்கும், செலவுகளை அதிகரிக்கும், அந்நிய முதலீடுகள் வருவதை மட்டுப்படுத்தும்” என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து அவர், டாலருக்கு பதில் புதிய கரன்சியை கொண்டுவர முயற்சித்தால் இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகள் மீது 100% வரி விதிக்கப்படும். எனவே, புதிய...
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்தி வரும் போரில் கேரளாவின் திருச்சூர் மாவட்டம் வடக்கஞ்சேரியை சேர்ந்த டி.பி.சுனில் என்பவர் உயிரிழந்தார். அவரது உறவினர் டி.கே.ஜெயின் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து இருவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.இந்த வழக்கில் திருச்சூரின் தையூரை சேர்ந்த சிபி ஓசெப், எர்ணாகுளத்தை சேர்ந்த சந்தீப் தாமஸ், சாலக்குடியை சேர்ந்த சுமேஷ் ஆன்டனி ஆகிய 3 பேரை போலீஸார் பல்வேறு...
கடந்த 1765 முதல் 1900 வரை காலனித்துவ இந்தியாவில் இருந்து இங்கிலாந்து 64.82 டிரில்லியன் டாலர் லாபம் பார்த்துள்ளதாக உரிமைகள் குழுவான ஆக்ஸ்பாம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உரிமைகள் குழுவான ஆக்ஸ்பாம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 1765 முதல் 1900 வரை காலனித்துவ இந்தியாவில் இருந்து இங்கிலாந்து 64.82 டிரில்லியர் டாலர் லாபம் பார்த்துள்ளது.
இந்த தொகையை கொண்டு பிரிட்டஷ் 50 பவுண்டு நோட்டுகள் மூலம் லண்டனில் கம்பளமாக விரித்தால் அந்த...










