வங்​கதேசத்​தில் மாணவர் சங்க தலை​வர் ஷெரீப் உஸ்​மான் ஹாடி கொலை வழக்​கில், சந்​தேக நபர்​கள் இரு​வர் வங்​கதேசத்தை விட்டு தப்பி சென்​று​விட்​ட​தாக​வும், அவர்​கள் இந்​தி​யா​வில் இருக்​கலாம் என நம்​பப்​படு​கிறது என அந்​நாட்டு போலீ​ஸார் தெரி​வித்​துள்​ளனர். வங்​கதேச மாணவர் சங்க தலை​வர் ஷெரீப் உஸ்​மான் ஹாடி (32) தலைநகர் டாக்​கா​வில் கடந்த 12-ம் தேதி தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​ட​போது, துப்​பாக்​கி​யால் சுடப்​பட்​டார். சிகிச்​சைக்​காக அவர் சிங்​கப்​பூர் கொண்டு செல்​லப்​பட்​டார். அங்கு அவர்...
மியான்​மரில் ஆங் சான் சூகி அரசை நீக்கிவிட்டு 2021 முதல் ராணுவப் புரட்சி மூலம் ராணுவ தளபதி ஜெனரல் மின் ஆங் ஹ்லாங் ஆட்சி புரிந்து வரு​கிறார். தற்போது ஆங் சான் சூகி வீட்​டு சிறை​யில் வைக்கப்​பட்டுள்​ளார் இந்நிலையில், ராணுவ ஆட்​சி​யாளர்​களுக்கு எதி​ராக உள்​நாட்​டுப் போர் நடை​பெற்று வரு​கிறது. நாட்​டின் பல பகு​தி​கள் கிளர்ச்சியாளர்​கள் கட்​டுப்​பாட்​டில்​ உள்​ளன. இந்த சூழலில் நாடாளு​மன்ற பொதுத் தேர்​தல் 3 கட்​ட​மாக நடைபெறும் என அறிவிக்​கப்​பட்​டது....
கனடாவின் டொராண்டோ ஸ்கார்பரோ பல்கலைக்கழக வளாகத்துக்கு அருகே 20 வயது இந்திய முனைவர் பட்டப்படிப்பு மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டொராண்டோ ஸ்கார்பரோ பல்கலைக்கழக வளாகத்துக்கு அருகே செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில், தரையில் காயமடைந்த நிலையில் ஒருவர் கிடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், ஹைலேண்ட் க்ரீக் டிரெயில் மற்றும் ஓல்ட் கிங்ஸ்டன் சாலைப் பகுதிக்கு காவல் துறையினர் சென்றனர். அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தபோது,...
சிரியாவின் ஹோம்ஸ் நகரில் பெரும்பான்மையாக அலவைட் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் உள்ள இமாம் அலி பின் அபி தாலிப் மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகையில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் எட்டு பேர் கொல்லப்பட்டனர், 18 பேர் காயமடைந்தனர். ஹோம்ஸ் நகரத்தின் இமாம் அலி பின் அபி தாலிப் மசூதிக்குள் இன்று வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இந்த மசூதி, சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் உள்ள வாடி அல்-தஹாப் சுற்றுப்புறத்தில்,...
டிசம்பர் 25 அன்று உலகம் அழியும் என்றும், தன்னால் கட்டப்பட்ட ‘நோவா பேழை’ மட்டுமே மக்களைக் காப்பாற்றும் என்றும் அறிவித்திருந்த கானா நாட்டு நபர் தற்போது அந்த தேதியை கடவுள் தள்ளிவைத்துவிட்டதாக அறிவித்துள்ளார். கானாவைச் சேர்ந்த எபோ நோவா என்ற நபர், பைபிளில் கூறப்பட்டுள்ளதைப் போன்ற ஒரு பிரம்மாண்டமான பேழையை கடந்த சில ஆண்டுகளாகக் கட்டி வந்தார். 2025ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று உலகம் முழுவதும் பெரும் வெள்ளம் ஏற்படும்...
 வங்​கதேச முன்​னாள் பிரதமர் கலீதா ஜியா​வின் மகனும், வங்​கதேச தேசி​ய​வாத கட்​சி​யின் (பிஎன்​பி) செயல் தலை​வருமான தாரிக் ரஹ்​மான் 17 ஆண்​டு​களுக்கு பிறகு நேற்று ​நா​டு திரும்பி​னார். கட்சித் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வங்கதேசத்தில் மாணவர்​களின் போராட்​டத்​தால் பிரதமர் பதவியை ராஜி​னாமா செய்த ஷேக் ஹசீனா இந்​தி​யா​வில் தஞ்​சமடைந்​தார். வங்கதேசத்தில் தற்​போது முகமது யூனுஸ் தலைமையி​லான இடைக்​கால அரசுஉள்ளது. அங்கு பிப்​.12-ம் தேதி தேர்​தல் நடை​பெற உள்​ளது....
ஓமன் தலைநகர் மஸ்கட்டில் பிரதமர் மோடி முன்​னிலை​யில் இந்தியா - ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்​தம் நேற்று கையெழுத்​தானது. இதன்மூலம் இந்தியா ஏற்றுமதி செய்யும் 99 சதவீத பொருட்களுக்கு அந்நாட்டில் வரிரத்தாகிறது. அங்கிருந்து இறக்குமதியாகும் 95 சதவீத பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. எத்​தி​யோப்​பியா பயணத்தை முடித்​துக் கொண்டு பிரதமர் மோடி நேற்று முன்​தினம் ஓமன் சென்​றார். அவரது முன்​னிலை​யில் இந்தியா - ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம்...
ஜோர்​டான் நாட்​டைச் சேர்ந்த முன்​னணி தொழில் நிறு​வனங்​கள் இந்​தி​யா​வில் முதலீடு செய்​வதற்கு முன்​வர​வேண்​டும் என்று பிரதமர் நரேந்​திர மோடி அழைப்பு விடுத்​துள்​ளார். பிரதமர் நரேந்​திர மோடி 2 நாள் அரசு முறைப் பயண​மாக, ஜோர்​டான் நாட்​டுக்கு நேற்று முன்​தினம் சென்​றடைந்​தார். ஜோர்​டான் மன்​னர் இரண்​டாம் அப்​துல்​லா​வின் அழைப்பை ஏற்று இந்​தப் பயணத்தை அவர் மேற்​கொண்​டார். இதனைத் தொடர்ந்​து, இந்​தியா - ஜோர்​டான் தொழில்​முனை​வோர் கூட்​டத்​தில் நேற்று பங்​கேற்ற பிரதமர் மோடி, இந்​தி​யா​வில்...
போரை முடிவுக்​குக் கொண்டுவருவது தொடர்பான அமை​தித்​திட்​டம் இன்​னும் சில நாட்​களில் ரஷ்​யா​விடம்சமர்ப்​பிக்​கப்​படும் என்று உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி தெரி​வித்​துள்​ளார். ரஷ்யா மற்​றும் உக்​ரைன் இடையி​லான போர் 3 ஆண்​டு​களுக்​கும் மேலாக தொடர்ந்து நீடித்து வரு​கிறது. இந்​நிலை​யில், இரு நாடு​களுக்​கும் இடையே அமைதி ஒப்​பந்​தம் ஏற்​படுத்த அமெரிக்கா தீவிர முயற்​சிகளை மேற்​கொண்டு வரு​கிறது. இதற்​காக 28 அம்ச பொது அமை​தித்​ திட்​டத்​தை​ அமெரிக்கா உரு​வாக்​கியது. இந்த சூழலில், உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி அண்​மை​யில்...
பிரதமர் நரேந்திர மோடி சென்ற காரை ஜோர்​டான் நாட்​டின் பட்​டத்து இளவரசர் அல்​-ஹுசைன் பின் அப்​துல்​லா-2 ஓட்​டியது பரவலாக பாராட்​டுகளைப் பெற்று வரு​கிறது. ஜோர்​டான் நாட்​டுக்கு 2 நாள் அரசு​முறை பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்​தினம் சென்​றடைந்​தார். அவருக்கு அங்கு உற்​சாக வரவேற்​பளிக்​கப்​பட்​டது. அங்​குள்ள ஒரு ஓட்​டலில் இந்​திய வம்​சாவளி​யினரை பிரதமர் மோடி சந்​தித்​துப் பேசி​னார். இரு நாடு​கள் இடையே ராஜீய உறவு​கள் ஏற்​பட்டு 75 ஆண்​டு​கள் நிறைவடைவதை...