Google search engine
எக்ஸ் சமூகவலைதள முடக்கத்தின் பின்னணியில் உக்ரைன் நாட்டின் சதி இருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ளார் அதன் தலைவர் எலான் மஸ்க். உலகம் முழுவதும் எக்ஸ் தளம் (ட்விட்டர்) நேற்று (மார்ச் 10) ஒரே நாளில் மூன்று முறை முடங்கியதால் பயனர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். சமூக வலைதளங்கள், இணையதளங்களின் முடக்கங்களை கண்காணிக்கும் Downdetector.com தரவுகளின் படி நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் முதல்முறையாக எக்ஸ் தளம் முடங்கியது. சில மணி நேரங்களில்...
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் அந்த நாட்டின் பாதுகாப்புப் படையினர் மற்றும் முன்னாள் அதிபர் அல் ஆசாத் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இரு தினங்களில் மட்டும் பொதுமக்கள் உள்பட 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் நாட்டில் அமைதியை நிலைநாட்ட அனைவரும் முற்படுவோம் என்று அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். “நாம் ஒரு சிக்கலான சூழலில் நின்று கொண்டிருக்கிறோம். புதிய ஆபத்தை எதிர்கொண்டுள்ளோம். முன்னாள் ஆட்சியாளர்கள், அவர்களுக்கு ஆதரவு தரும்...
நிதி மோசடி வழக்கில் சிக்கி வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ள லலித் மோடியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வனுவாட்டு தேச பிரதமர் ஜோதம் நபத் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணியை உடனடியாக மேற்கொள்ள அந்த நாட்டு குடியுரிமை ஆணையத்திடம் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. “வனுவாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பது என்பது ஒருவிதமான சுதந்திரம் ஆகும். ஆனால் அது உரிமை அல்ல. விண்ணப்பதாரர்கள் நியாயமான காரணங்களுக்காக குடியுரிமை...
இந்தியா உடனான உறவை மீண்டும் கட்டியெழுப்ப வாய்ப்புகள் உள்ளது என்றும், அதனை தான் எதிர்நோக்குவதாகவும் கனடாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ள மார்க் கார்னி தெரிவித்துள்ளார். இதன்மூலம், இந்தியா - கனடா உறவுகளில் தூதரக ரீதியில் பெரிய மாற்றம் ஏற்பட உள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கனடாவின் ஆளும் லிபரல் கட்சியின் புதிய தலைவரும், கனடாவின் அடுத்த பிரதமராக வரவிருப்பவருமான மார்க் கார்னி, இந்தியா உடனான கனடாவின் வர்த்தக உறவை பன்முகப்படுத்த...
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவை கடத்திய பாகிஸ்தான் மதத் தலைவர் முப்தி ஷா மிர், மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ், பணி ஓய்வுக்குப் பிறகு ஈரான் நாட்டில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தார். தலிபான் தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் மதத் தலைவர் முப்தி ஷா மிர் ஆகியோரின் உதவியுடன் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச்சில் அவரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. பாகிஸ்தானில்...
கலி​போர்​னி​யா​வில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயண் மந்​திர் மீது மர்ம நபர்​கள் நேற்று தாக்​குதல் நடத்தி உள்​ளனர். அமெரிக்​கா​வின் கலி​போர்​னியா மாகாணம் சினோ ஹில்ஸ் பகு​தி​யில் இந்து கோயி​லான பாப்ஸ் ஸ்ரீ சுவாமி நாராயண் மந்​திர் மீது மர்ம நபர்​கள் சிலர் நேற்​று​முன்​தினம் தாக்​குதல் நடத்​தினர். இதில் கோயில் சேதம் அடைந்​துள்​ளது. இதுகுறித்து மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்சக இணை​யதளத்​தில் வெளி​யான பதி​வில் செய்​தித் தொடர்​பாளர் ரந்​திர் ஜெய்​ஸ்​வால் கூறும்​போது,...
கனடா நாட்டின் லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும், அந்நாட்டின் 24வது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கனடா வங்கியின் முன்னாள் தலைவரான அவர் பிரதமராவது அந்நாட்டின் தற்போதைய நிதி சவால் சூழலில் கவனம் பெறுகிறது. மார்க் கார்னி கடந்த 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை கனடா வங்கியின் 8-வது ஆளுநராக பணியாற்றியுள்ளார். மேலும், 2011 முதல் 2018-ம் ஆண்டு வரை நிதி நிலைத்தன்மை வாரிய தலைவராக...
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் அந்த நாட்டின் பாதுகாப்புப் படையினர் மற்றும் முன்னாள் அதிபர் ஆசாத் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இரு தினங்களில் மட்டும் பொதுமக்கள் உள்பட 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது அந்த நாட்டு வரலாற்றில் மோசமான உள்நாட்டு வன்முறை சம்பவங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. முன்னாள் அதிபர் ஆசாதுக்கு ஆதரவாக இருந்த அலவைட் சிறுபான்மை பிரிவினருக்கு எதிராக கடந்த வியாழக்கிழமை அன்று அந்த நாட்டின் தற்போதைய...
‘உக்ரைனுக்கான அனைத்து உதவிகளையும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிறுத்தியிருப்பது, எங்களை ரஷ்யாவின் நிபந்தனைகளை ஏற்க வைக்க அவர் முயற்சிப்பதாகவே தோன்றுகிறது’ என்று உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து உக்ரைனின் நாடாளுமன்ற வெளியுறவு விவகாரக் குழு தலைவர் ஒலெக்சாண்டர் மெரேஷ்கோ கூறுகையில், “இப்போது உதவிகளை நிறுத்துவது என்பது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு உதவுவதேயாகும். மேலோட்டமாக பார்த்தாலே இது மோசமானது. அவர் எங்களைச் சரணடைவதை நோக்கித்...
சீனா, கனடா, மெக்சிகோ நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற போது அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்த வரி விதிப்பு கடந்த பிப்ரவரி மாதமே அமல்படுத்த திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், போதைப் பொருள் அமெரிக்காவுக்குள் வருவதை தடுக்க அந்த நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, இந்த கூடுதல் வரி விதிப்பு திட்டம் 30 நாட்களுக்கு நிறுத்திவைக்கப்படுவதாக ட்ரம்ப்...