வங்​கதேசத்​தில் மர்ம கும்பல் தாக்கியதில் இந்து மதத்தை சேர்ந்த 3-வது நபர் நேற்று உயி​ரிழந்​தார். வங்​கதேசத்​தில் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்​கப்​பட்​டு, முகமது யூனுஸ் தலை​மை​யில் இடைக்​கால நிர்​வாகம் பொறுப்​பேற்​றது. அதன்​பிறகு கடந்த மாதம் மாணவர்​கள் மீண்​டும் நடத்​திய போராட்​டத்​தில் வன்​முறை ஏற்​பட்​டது. இதையடுத்து இந்​துக்​கள் மீதான தாக்​குதல் தொடங்​கியது. கடந்த மாதம் மட்​டும் 2 இந்​துக்​கள் படு​கொலை செய்​யப்​பட்​டனர். இதற்கு இந்​தியா கடும் கண்​டனம் தெரி​வித்​தது. கடந்த டிசம்​பர் 18-ம்...
மீன் சாப்பிடுவதில் இருக்கும் மிகப் பெரிய பிரச்சினை அதில் இருக்கும் முள்தான். அதனால் மீனை சாப்பிடும் போது அதிக கவனம் தேவைப்படும். இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக மரமணு மாற்றம் மூலம் முள் இல்லாத மீன் வகையை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ‘கிபல் கார்ப்’ என்ற நன்னீர் மீன் வகையை சீன விஞ்ஞானிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். இதில் வழக்கமாக ஆங்கில எழுத்து ‘ஒய்’ வடிவில் 80 சிறிய முள்கள் இருக்கும்....
சீ​னா​வின் டேங்க் மேன் போன்று ஈரான் ராணுவத்தை தனி ஒரு​வ​னாக எதிர்த்த ஜென் இசட் இளைஞரின் வீடியோ, புகைப்​படம் உலகம் முழு​வதும் வைரலாக பரவி வரு​கிறது. சீன கம்​யூனிஸ்ட் அரசுக்கு எதி​ராக கடந்த 1989-ம் ஆண்​டில் மாணவர்​கள், தொழிலா​ளர்​கள், கல்​வி​யாளர்​கள் மிகப்​பெரிய போராட்​டங்​களை நடத்​தினர். கடந்த 1989 ஜூனில் சீன தலைநகர் பெய்​ஜிங்​கில் உள்ள தியானன்​மென் சதுக்​கத்​தில் குவிந்த மாணவர்​களை சீன ராணுவம் ஈவு இரக்​கமின்றி கொன்று குவித்​தது. இதில்...
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்-கை இடைக்கால அதிபராக பொறுப்பேற்க அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலுக்கு தலைமை தாங்குவதாகவும், அங்கிருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள் ஏராளமாக நுழைவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். வெனிசுலாவுக்கு பொருளாதார தடை விதித்தார். மேலும், போதைப் பொருள்...
வெனிசுலா​வில் இருந்து அழைத்​துச் செல்​லப்​பட்ட அந்நாட்டு அதிபர் நிக்​கோலஸ் மதுரோ நியூ​யார்க் நகரில் சிறை வைக்​கப்​பட்​டுள்​ளார். அவர் மீது போதைப்​ பொருள் கடத்தியதாகவும், சட்​ட​விரோத​மாக ஆயுதம் வைத்​திருந்​த​தாக​வும் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. வெனிசுலா தலைநகர் கராகஸ் நகரின் மீது அமெரிக்க ராணுவத்தின் சிறப்​புப் படை​யினர் நேற்று முன்​தினம் அதிகாலையில் தாக்​குதல் நடத்​தினர். பின்​னர் அந்​நாட்டு அதிபர் நிக்​கோலஸ் மதுரோ (63) மற்​றும் அவரது மனை​வியை அமெரிக்க படை​யினர் சிறைபிடித்​தனர். பின்​னர்,...
அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக இஸ்லாமியர் ஒருவர் நியூயார்க் நகர மேயரானார் என்ற வரலாறு படைத்த ஜோரான் மம்தானி, இன்று குர்ஆன் சாட்சியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டு சரித்திரத்தில் இன்னொரு புதிய பக்கத்தை சேர்த்துள்ளார். யார் இந்த ஜோரான் மம்தானி? - நீங்கள் ‘சலாம் பாம்பே’, ‘மான்சூன் வெட்டிங்’ போன்ற திரைப்படங்கள், ‘ஸோ ஃபார் ஃப்ரம் இந்தியா’ போன்ற ஆவணப்படம் பற்றி அறிந்திருந்திருந்தால், அதனை இயக்கிய மீரா நாயரையும் தெரிந்திருக்கும். அந்த பிரபல இயக்குநர்...
சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பார் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விபத்துக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. சுவிட்சர்லாந்து தலைநகரான பெர்னில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பனிச்சறுக்கு நகரமான கிரான்ஸ்-மொன்டானாவில் உள்ள கான்ஸ்டெல்லேஷன் என்ற பாரில் நள்ளிரவு 1.30 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கு 100-க்கும் மேற்பட்டோர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்துள்ளனர். பட்டாசு...
“எனது தாய் எவ்வாறு நாட்டு மக்களுக்காக பாடுபட்டாரோ நானும், அவர் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து மக்களுக்கான எனது பணியை தொடங்குவேன் என்று வங்கதேசத்தின் மறைந்த தலைவர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரும், வங்கதேச தேசிய கட்சியின் தலைவராக இருந்தவருமான கலீதா ஜியா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல், அவரது கணவரான ஜியாவுர் ரஹ்மானின் நினைவிடத்துக்கு...
இந்​தி​யா, பாகிஸ்​தானில் செயல்​படும் அணு மின் நிலை​யங்​களின் பட்​டியலை இரு நாடு​களும் நேற்று பரி​மாறிக் கொண்​டன. அணு மின் நிலை​யங்​கள் தொடர்​பாக கடந்த 1988-ம் ஆண்டு இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. இதன்​படி ஒரு​வரின் அணு மின் நிலை​யங்​களை மற்​றவர் தாக்​கக்​கூ​டாது. மேலும் ஒவ்​வொரு ஆண்​டும் ஜனவரி 1-ம் தேதி இரு நாடு​களும் அணு மின் நிலை​யங்​கள் தொடர்​பான பட்​டியலை பரி​மாறிக் கொள்ள வேண்​டும். இந்த ஒப்​பந்​தத்​தின்​படி கடந்த 1992-ம்...
சுவிட்​சர்​லாந்​தில் நடை​பெற்ற புத்​தாண்டு கொண்டாட்டத்​தின்​போது ஏற்​பட்ட வெடி விபத்​தில் சிக்கி 40 பேர் பரி​தாப​மாக உயிரிழந்​தனர். புத்தாண்டு தினம் நேற்று உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சுவிட்சர்லாந்தில் நடந்த கொண்டாட்டத்தின்போது வெடிகுண்டு தாக்குதல் நடந்ததாக தகவல் பரவியது. இதனால் மக்கள் பீதியடைந்தனர். இதுகுறித்து சுவிட்​சர்​லாந்து அதி​காரி​கள் கூறிய​தாவது: கிரேன்​ஸ்​- மோன்​டனா நகராட்​சிக்கு உட்​பட்ட ஸ்கை ரிசார்ட்​டில் உள்ள லீகான்​ஸ்​டெல்​லேஷன் மது​பான மற்​றும் ஓய்வு விடு​தி​யில் புத்தாண்டை கொண்​டாடு​வதற்​காக 150-க்​கும் மேற்​பட்​டோர் கூடியிருந்​தனர். இசைக்...