Google search engine
நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் தனது தந்தையின் தாய்நாடான இந்தியாவுக்கு பயணம் செய்து தனது அனுபவங்களை இந்தியர்களுடன் பகிர்ந்துகொள்வேன் என்றார். இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். கடந்த ஆண்டு ஜூலையில் சக விண்வெளி வீரர் புட்ச் வில்மோருடன் வெறும் 8 நாள் பயணமாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றார். ஆனால் எதிர்பாராத வகையில் 9 மாதங்களுக்கு மேல் அவர் அங்கு தங்க நேரிட்டது....
சீனாவும் இந்தியாவும் இன்னும் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் சீன அதிபர் ஜி ஜின்பிங் விருப்பம் தெரிவித்தார். இந்தியாவும் சீனாவும் தங்களுக்கு இடையில் ராஜதந்திர உறவுகளை கடந்த 1950-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி ஏற்படுத்திக் கொண்டன. இதன் 75-ம் ஆண்டு தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் நேற்று வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். அப்போது திரவுபதி...
இந்தியாவின் விவசாய பொருட்கள் மீது 100% வரை வரி விதிப்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. டிரம்ப் நிர்வாகம் ஏப்ரல் 2-ம் தேதி முதல் பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விவசாய பொருட்களின் மீதும் 100 சதவீத வரிகளை விதிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து வெள்ளை மாளிகை...
சீனாவின் ஹுபெய் பகுதியை சேர்ந்தவர் யாங் (18). இவர் தற்போது ஹூனான் மாகாணம், ஜூஜோவ் நகரில் உள்ள பர்னிச்சர் கடையில் பணியாற்றி வருகிறார். அவரது மாதம் வருமானம் ரூ.31,776 ஆகும். ஜூஜோவ் நகரில் ஒரு வீட்டின் வாடகை ரூ.9,500 முதல் ரூ.21,000 வரை உள்ளது. யாங் பெறும் ஊதியத்தில் பாதியை அவரது பெற்றோருக்கு அனுப்புகிறார். மீதமுள்ள ஊதியத்தில் அவரால் வீட்டு வாடகை கொடுப்பது கடினம். இந்த சூழலில் பர்னிச்சர் கடையின்...
தாய்லாந்தின் பாங்காக் நகரில் கட்டிய 30 மாடி கட்டிடம் நிலநடுக்கத்தால் தரைமட்டமானது தொடர்பாக சீன கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். தாய்லாந்தில் கடந்த 28-ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது அந்த நாட்டின் தலைநகர் பாங்காக்கில் 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. பாங்காக்கில் பல்வேறு உயரமான கட்டிடங்கள் உள்ளன. நிலநடுக்கத்தின்போது சுமார் 95 சதவீத உயரமான கட்டிடங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் 30 மாடி...
அனைத்து உலக நாடு​களின் பொருட்​கள் மீதான இறக்​கும​திக்​கும் கூடு​தல் வரி விதிக்​கப்​படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார். அமெரிக்​கா​வின் அதிப​ராக 2-வது முறை​யாக பொறுப்​பேற்ற டொனால்டு ட்ரம்ப், தங்​கள் நாட்​டின் பொருட்​களுக்கு இந்​தியா உள்​ளிட்ட பல நாடு​கள் அதிக வரி விதிப்​ப​தாக குற்​றம்​சாட்​டி​னார். இதற்கு பதிலடி​யாக, அமெரிக்​கா​வில் இறக்​கும​தி​யாகும் பிற நாடு​களின் பொருட்​களுக்​கு, சம்​பந்​தப்​பட்ட நாடு​கள் விதிக்​கும் அதே அளவுக்கு (பரஸ்பர வரி) ஏப்​ரல் 2-ம் தேதி...
விண்வெளியில் இருந்து பார்க்கும்போது இந்தியா எப்படி இருந்தது? என்ற கேள்விக்கு சுனிதா வில்லியம்ஸ் அளித்த சுவாரஸ்ய பதில் கவனம் பெற்றுள்ளது. விண்வெளியில் அதிக நாட்களை கழித்த 2-வது அமெரிக்க வீரர் என்ற சாதனையை சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார். சுனிதா வில்லியம்ஸும் பேரி வில்மோரும் விண்வெளியில் 286 நாட்களை கழித்துள்ளனர். அங்கு 12,13,47,491 மைல் தூரம் பயணித்துள்ளனர். 4,576 முறை பூமியை சுற்றி வந்துள்ளனர். சுனிதா 62 மணி நேரம் 6...
வெனிசுலாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த ஜனவரியில் டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அப்போது முதல், பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு புதிய வரி விதிப்புகளை விதித்து வருகிறார் ட்ரம்ப். இந்நிலையில் வெனிசுலா மீது அமெரிக்கா 2-வது தவணையாக கூடுதல் வரி...
உலகம் முழுவதும் செயல்படும் அமெரிக்க தூதரகங்களில் கடந்த ஆண்டு 41 சதவீத மாணவர் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. கடந்த 2024-ம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி அமெரிக்காவில் சுமார் 11 லட்சம் வெளிநாட்டு மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். மிக அதிகபட்சமாக 3.31 லட்சம் இந்திய மாணவர்கள் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் கல்வி பயில்கின்றனர். இதற்கு அடுத்து 2.77 லட்சம் சீன மாணவர்கள். 43,149 தென்கொரிய மாணவர்கள் அமெரிக்காவில் பயில்கின்றனர்....
நியூஸிலாந்து நாட்டின் தெற்கு தீவு பகுதியில் இன்று (மார்ச் 25) காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.7 ஆக பதிவானது. இதையடுத்து நிலநடுக்கம் உணரப்பட்ட சவுத்லாந்து மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை தரப்பட்டது. அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கடற்கரை மற்றும் கடலோர பகுதிகளை தவிர்க்க வேண்டும் என அந்நாட்டின் தேசிய அவசரநிலை மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது. இருப்பினும் சுனாமி பேரலை அபாயம் நியூஸிலாந்துக்கு...