ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் அவசியம்: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது என்ன?
admin - 0
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 17-வது உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் உலக அமைதி, பாதுகாப்பு குறித்த சிறப்பு கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். பின்னர் சர்வதேச சீர்திருத்தம், செயற்கை நுண்ணறிவு தொடர்பான சிறப்பு கூட்டங்களிலும்...
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, தொழிலதிபர் எலான் மஸ்க் மீண்டும் சீண்டியுள்ளார். கைது விவகாரம் என்ற பெயரில் ஒரு பதிவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் மஸ்க்.
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் தொழிலதிபர் எலான் மஸ்க். கடந்த ஜனவரியில் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதும் எலான் மஸ்க்கை அரசின் செயல்திறன் துறையின் தலைவராக நியமித்தார். அரசின் தேவையற்ற செலவுகளை குறைப்பதே இத்துறையின் நோக்கம் என்றும்...
ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு 25 சதவீத விதிக்கப்படுவதாக அறிவித்த சில மணி நேரங்களில், மேலும் 12 நாடுகளுக்கு வரிகளை உயர்த்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பட்டியலிட்டுள்ளார். மியான்மர், தென்னாப்பிரிக்கா, மலேசியா, வங்கதேசம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு வரிகளை அவர் உயர்த்தியுள்ளார். அந்த நாடுகளுக்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பட்டியல்:
தென் கொரியா - 25% வரிஜப்பான்...
குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி பெல்ஜியம் குடியுரிமை பெற்றவர். இந்தியாவில் வைர வியாபாரம் செய்த நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில், தனது பங்குதாரர்கள் மற்றும் தனது மாமா மெகுல் ஷோக்ஸி ஆகியோருடன் இணைந்து ரூ.28,000 கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்தார்.
இந்த பணத்தை போலி நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்ப இவரது தம்பி நெஹல் மோடி உதவினார். இருவர் மீதும் அமலாக்கத்துறை மற்றும்...
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே கடந்த மாதம் கருத்து முரண் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை தற்போது எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.
“அமெரிக்க மக்களுக்கு மீண்டும் சுதந்திரத்தை கொடுப்பதற்காக அமெரிக்கா கட்சியை இன்று தொடங்கி உள்ளோம். நமது தேசத்தை வீண் செலவு மற்றும் ஊழல் மூலம் திவால் செய்கின்றனர். இதை பார்க்கும்போது நாம் ஜனநாயக ஆட்சி முறையின் கீழ்...
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடியை உலக நாடுகளின் தலைவர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். முன்னதாக, விமான நிலையத்தில் ஏராளமான இந்தியர்கள் திரண்டு மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரிக்ஸ் கூட்டமைப்பு 2009-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய நாடுகள்...
உலக பெரும் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளவரும், டெஸ்லா,ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ளார்.
2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியவர் எலான் மஸ்க். இதையடுத்து, ட்ரம்ப் நிர்வாகத்தில் அரசு செயல் திறன்துறை (டிஓஜிஇ) தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், உள்நாட்டு செலவினம், வரி குறைப்பு தொடர்பான மசோதாவை ட்ரம்ப் கொண்டு வந்ததால்,இருவருக்கும்...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. கனமழை வெள்ளத்தால் இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் தென் மத்திய பகுதியில் டெக்சாஸ் மாகாணம் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்த மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 4ம் தேதி சில மணி நேரத்தில் 280 மிமீ மழை பெய்தது. இதன் காரணமாக குவாடலூப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரத்தில் நதியின் நீர்மட்டம்...
திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று (ஜூலை 4) இந்தியாவுக்கான முக்கிய செய்தியை வெளியிட்டுள்ள சீன வெளியுறவு அமைச்சகம், “உள்நாட்டு விவகாரங்களில் தலையிட திபெத் பிரச்சினையைப் பயன்படுத்துவதை இந்தியா நிறுத்தும் என்று சீனா நம்புகிறது. மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துவதை இந்தியா தவிர்க்கும் என்றும் நம்புகிறது.” என்று தெரிவித்துள்ளது.
திபெத்திய புத்த மதத் தலைவரான...
பவுத்த மதத் தலைவர் என்றவுடன் சாமானிய இந்தியர்களின் மனங்களில் சட்டென நினைவுக்கு வருபவராக திபெத்திய பவுத்த மதத் தலைவரான தலாய் லாமா இருக்கிறார். தீவிர சீன எதிர்ப்பாளரான அவர், இந்தியாவின் தர்மாசாலாவில் தஞ்சமடைந்திலிருந்தே எழுப்பும் திபெத் விடுதலைக்கான குரல் உலகெங்கும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆன்மிகம், அரசியல் என்று சமமாகப் பேசும் அவரது வீச்சு, அவர் மீதான ஊடக வெளிச்சம் எப்போதும் குறைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளும்.
அவரது ஆன்மிக சொற்பொழிவுகளைக்...









