Google search engine
கம்போடியா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக தாய்லாந்து ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. முன்னதாக, இரு நாடுகளும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு நேற்று ஒப்புக்கொண்டன. எல்லை தொடர்பான சிக்கல்களால், கடந்த வியாழக்கிழமை (ஜூலை 24) எல்லையில் ஏற்பட்ட கண்ணிவெடி தாக்குதலில் 5 தாய்லாந்து வீரர்கள் காயமடைந்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த போரில் நேற்று வரை இருதரப்பிலும் சேர்த்து 38 பேர் உயிரிழந்தனர். இரு தரப்பிலும் 3,00,000-க்கும்...
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள சாடுசக் பகுதியில் மிகப்பெரிய காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த காய்கறி சந்தையில் மக்கள் வழக்கம்போல் நேற்று காலையில் பரபரப்பாகப் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த பாதுகாவலர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பாதுகாவலர்களும், ஒரு பெண்ணும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் பின்னர் கொலையாளி தன்னைத்...
ஏமன் நாட்டில் கேரள மாநில செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை கேரளா​வின் இஸ்​லாமிய மதத் தலை​வர் அபுபக்​கர் முஸ்​லி​யாரின் ‘கிராண்ட் முப்தி’ அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. செவிலியர் நிமிஷா பிரியா விவகாரத்தில் அபுபக்​கர் முஸ்​லி​யார் மத்​தி​யஸ்​தம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில், இந்திய அரசு தரப்பில் நிமிஷாவின் விவகாரத்தை கவனித்து வரும் அதிகாரிகள், மரண தண்டனை ரத்து குறித்து இன்னும் உறுதி...
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காவல் அதிகாரி ஒருவர் உட்பட சுமார் 5 பேர் உயிரிழந்தனர். பலர் இதில் காயமடைந்த நிலையில் இந்த தாக்குதலை நடத்திய நபர் தன்னைத்தானே சுட்டு கொண்டதாக தகவல். நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள 44 மாடிகள் கொண்ட அலுவலக கட்டிடத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. பல்வேறு முக்கிய நிறுவனங்கள் இயங்கும் அந்த கட்டிடத்தில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்த மாலை நேரமான...
அடுத்த 10 முதல் 12 நாட்களுக்குள் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்த வேண்டுமென அந்நாட்டு அதிபர் புதினுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கெடு விதித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு உக்ரைன் உடனான போரை நிறுத்த புதினுக்கு 50 நாட்கள் காலக்கெடு விதித்திருந்தார் ட்ரம்ப். தற்போது அதை அவர் குறைத்துள்ளார். ஒரே இரவில் 300-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள், 4+ ஏவுகணைகளை கொண்டு உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்...
உலக தலைவர்களில் நம்பிக்கையான தலைவர் யார் என்று சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் ஒவ்வொரு நாட்டு தலைவரும் எப்படி நடந்து கொள்கின்றனர் என்றும் ஆய்வு செய்யப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த புலனாய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வின்போது, உலகத் தலைவர்களுக்கு அவர்களது சொந்த நாட்டில் எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்றும் பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதோடு உலக நாடுகளில் எந்த...
தாய்லாந்து, கம்போடியா இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. இந்த போரில் இருதரப்பில் இதுவரை 33 பேர் உயிரிழந்து உள்ளனர். தென்கிழக்கு ஆசியாவில் தாய்லாந்து அமைந்துள்ளது. இதன் அண்டை நாடு கம்போடியா இரு நாடுகளும் 817 கி.மீ. தொலைவு எல்லையை பகிர்ந்து கொள்கிறது. பண்டைய காலத்தில் முதலாம் ராமா மன்னரால் தோற்றுவிக்கப் பட்ட ரத்தனகோசின் பேரரசு தாய்லாந்தை ஆட்சி செய்தது. இதே போல இரண்டாம் ஜெயவர்மன் மன்னரால் தோற்றுவிக்கப்பட்ட கெமர் பேரரசு...
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்தவர் யாஹ்யா சின்வர். இவருக்கும் சமர் முகமது அபு ஜாமருக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சின்வர் உயிரிழந்தார். சின்வரின் மனைவி சமர் தனது குழந்தைகளுடன் வேறு ஒரு பெண்ணின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி ரபா எல்லை வழியாக எகிப்துக்கு தப்பிச் சென்றுள்ளார். அங்கிருந்து துருக்கியில் வசித்து...
அரசுமுறை பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, லண்டனில் அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்தார். அப்போது, அவர்களது முன்னிலையில் இரு நாடுகள் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரதமர் மோடி 2 நாள் பயணமாக கடந்த 23-ம் தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்றார். அங்கு அந்த நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை நேற்று சந்தித்து பேசினார். அப்போது, இரு நாடுகள் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்...
கம்போடியாவில் சைபர் மோசடி தொடர்பாக 15 நாட்களில் 138 இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் 3,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில், 105 இந்தியர்களும், 606 பெண்களும் அடங்குவர். இந்தியர் களைத் தவிர, 1,028 சீன குடிமக்கள், 693 வியட்நாமியர்கள், 366 இந்தோனேசியர்கள், 101 வங்கதேசத்தவர், 31 பாகிஸ்தானியர்களும். 82 தாய்லாந்து நாட்டவரும் கைதாகியுள்ளனர். இந்த சோதனைகளின் போது கணினிகள், மடிக்கணினிகள், மொபைல் போன்கள். இந்திய மற்றும் சீன...