ஈரான் ஒப்பந்த விவரங்களை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்துக்கு பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லாததே காரணம் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட கத்தாருடன் இணைந்து உதவிய நாடு பாகிஸ்தான். இந்த இடைக்கால அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த 15-ம் தேதியே அறிவித்தார். எனினும், ஒப்பந்தத்தின் அதிகாரப்பூர்வ விவரங்கள் இரண்டு நாட்களுக்குப் பிறகே வெளியிடப்பட்டன. இந்நிலையில், இந்த...
பிரான்சில் அண்மையில் நடந்து முடிந்த ஜி7 உச்சிமாநாட்டில், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளுமாறு பலமுறை கெஞ்சினார் என்றும், இத்தாலியில் சரிந்து வரும் தனது அரசியல் செல்வாக்கை உயர்த்தவே அவர் இவ்வாறு செய்கிறார் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தார்.  ட்ரம்பின் இந்த விமர்சனங்களுக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக கடுமையான வார்த்தைகளால் பதிலடி கொடுத்துள்ளார். “அதிபர் ட்ரம்ப்...
சர்வதேச யோகா தினம் ஜூன் 21 அன்று உலகம் முழுவதும் கொண்​டாடப்​படு​கிறது. இந்​நிலை​யில் மூச்​சுப் பயிற்சி மற்​றும் யோகா பற்றி ஐ.நா. முன்னாள் அதி​காரி சித்​தார்த் சாட்​டர்ஜி எழு​திய “மை ஃபைவ் டு த்ரைவ்” என்ற நூலை சீனா சர்​வ​தேச வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு முகமை​யின் தலை​வர் லுவோ ஜாவோஹுய் பெய்​ஜிங்​கில் நேற்று முன்​தினம் வெளி​யிட்டு பேசி​ய​தாவது: சீனாவுக்கான ஐநா ஒருங்​கிணைப்​பாள​ராக இருந்த சாட்​டர்​ஜி, சீன அரசு, கல்​வித்​துறை மற்​றும்...
உல​களா​விய முன்​னேற்​றத்​திற்கு இந்தியா-பிரான்ஸ் கூட்டாண்மை முக்​கிய​மானது என பாரிஸ் வந்​தடைந்த பிரதமர் மோடி கூறி​னார். பிரதமர் நரேந்திர மோடி பிரான்​ஸ், ஸ்லோவேக்​கியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்​கொண்​டார். பிரான்ஸ் நாட்​டில் இரண்டாம் கட்ட பயணம் மேற்​கொண்ட மோடி, எவியன்​-லெஸ்​-பெய்ன்ஸ் நகரில் நடை​பெற்ற ஜி-7 உச்சி மாநாட்​டில் விருந்தினராக பங்​கேற்​றார். இங்கு பேசிய பிரதமர் மோடி, ‘‘ஜி7 நாடு​கள், இந்​தியா மற்​றும் தெற்கத்​திய நாடு​களின் பலத்தை ஒன்​றிணைப்​ப​தன் மூலம் இணைப்பு மற்​றும் வர்த்​தகத்தை...
அமெரிக்​கா - ஈரான் இடையே நேற்று அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. அமெரிக்க அதிபர் ட்ரம்​பும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனும் மின்​னணு முறை​யில் ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட்​டனர். இதன்​படி ஹார்​முஸ் ஜலசந்தி திறப்பு உட்பட 14 அம்ச திட்​டத்தை அமல்​படுத்த இருதரப்​பும் உறுதி அளித்து உள்​ளன. அமெரிக்​கா - ஈரான் இடையே கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல் போர் நடை​பெற்று வந்​தது. கடந்த ஏப்​ரல் 8-ம் தேதி இருதரப்​பும் இணைந்து...
கர்சர் என்​பது செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) கோடிங் தளமாகும். புரோகி​ராமர்​கள் தங்​களது திட்டங்களுக்கான குறி​யீடு​களை (code) ஏஐ மூலம் எழுத இந்​தத் தளத்​தைப் பயன்படுத்துகிறார்​கள். தொழில​திபர் எலான் மஸ்க்​கின் ஸ்பேஸ்​எக்ஸ் நிறு​வனம் இந்த ஆண்டு ஏப்​ரல் மாதத்​தில் கர்​சருடன் கூட்டு சேர்ந்​தது. தனது ஏஐ மாடல்​களுக்​குப் பயிற்சி அளிக்க கர்​சரின் கம்ப்​யூட்​டிங் வளங்களை ஸ்பேஸ் எக்ஸ் பயன்​படுத்​தி​யது. தற்​போது கர்​சரின் தாய் நிறு​வன​மான ‘எனிஸ்​பியரை’ 60 பில்​லியன் டாலருக்கு (ரூ.5 லட்​சம்...
ஸ்பேஸ் எக்ஸ் நிறு​வனம் சமீபத்தில் ஐபிஓ வெளியிட்டது. இதன்மூலம் (ஐபிஓ), அந்​நிறு​வனத்​தில் முன்பு வெல்ட​ராக பணி​யாற்​றிய​வரின் பங்கு மதிப்பு ரூ.10 கோடி​யாக உயர்ந்​துள்​ளது. தொழில​திபர் எலான் மஸ்க்​கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறு​வனத்​தில், ஜுவான் ஹெர்​னாண்​டஸ் என்​பவர் கடந்த 2015-ம் ஆண்​டில் வெல்ட​ராக பணி​யில் சேர்ந்​தார். பின்பு ராக்​கெட் ஏவுதள உள்கட்டமைப்​பு​களை உரு​வாக்​கு​வ​தில் உதவி​யாள​ராக பணியாற்​றி​னார். பின்பு மேற்​பார்​வை​யாள​ராக பதவி உயர்வு பெற்​றார். அப்​போது ஸ்பேஸ் எக்ஸ் நிறு​வனம் தனது ஊழியர்​களுக்கு நிறுவன...
 “வளர்ச்சி என்பது யாருக்காக? யாருடன் இணைந்து? எந்த திசையில் என்பதுதான் முக்கியமான கேள்வி” என்று ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். பிரான்ஸின் ஏவியான் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், அனைவருக்கும் சமச்சீரான, பகிரப்பட்ட, நிலையான பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுத்தல் என்ற தலைப்பிலான அமர்வில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அவர் தனது உரையில், “பிரான்ஸ் தலைமையிலான இந்த ஜி7 உச்சி மாநாடு, இந்த...
இந்​தி​யக் கடல்​சார் பணி​யாளர்​களின் பாது​காப்பு தொடர்​பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்​பிடம் பிரதமர் நரேந்​திர மோடி வலி​யுறுத்​தி​னார். ஜி7 அமைப்​பில் அமெரிக்​கா, பிரிட்​டன், பிரான்​ஸ், ஜெர்​மனி, இத்தாலி, கனடா, ஜப்​பான் ஆகிய நாடு​கள் உறுப்​பினர்​களாக உள்ளன. இந்த ஆண்​டுக்​கான ஜி7 உச்சி மாநாடு பிரான்​ஸின் ஏவியான் நகரில் கடந்த 15-ம் தேதி தொடங்​கியது. இதில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிரிட்​டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்​மர், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்​ரான்,...
ஈ​ரானுட​னான ஒப்​பந்​தம் இறு​தி​யானது அல்ல. ஒழுங்​காக நடந்துகொள்​ளா​விட்​டால் அந்த நாட்​டின் மீது மீண்​டும் குண்டு மழை பொழி​வோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்​பந்​தம் இறுதி செய்யப்பட்​டுள்​ளது. நாளை சுவிட்​சர்​லாந்​தின் ஜெனீவா நகரில் ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்நிலை​யில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடை​பெறும் ஜி7 உச்சிமாநாட்​டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பங்​கேற்​றுள்​ளார். பிரான்​சில் கால் பதித்​தது முதலே ஈரானுட​னான...