சீனாவின் துறைமுக நகரான தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 2 நாள் உச்சி மாநாடு நிறைவடைந்த நிலையில், இந்தியா - ரஷ்யா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதமர் மோடியும் புதினும் ஒரே காரில் பயணித்து கூட்டம் நடைபெறும் அரங்குக்கு சென்றுள்ளனர்.
ரஷ்ய அதிபரின் இந்த சொகுசு காரின் பெயர் அவுரஸ் செனட் என்று அழைக்கப்படுகிறது. அதிநவீன சொகுசு காரான இந்த அவுரஸ் செனட் காரை, விளாடிமிர் புதின்...
சீனாவில் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட மேற்கத்திய சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. உள்நாட்டை சேர்ந்த வெய்போ சமூக வலைதளம் மட்டுமே பயன்பாட்டில் இருக்கிறது.
எஸ்சிஓ மாநாட்டில் சுமார் 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற நிலையில் வெய்போ சமூக வலைதளத்தில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார்.
இதுகுறித்து சீன அரசியல் நோக்கர்கள் கூறியதாவது: சீனாவில் கூகுள் பயன்பாட்டில் இல்லை. உள்நாட்டை சேர்ந்த பைடு என்ற இணைய தேடுதளமே பயன்பாட்டில்...
ஆப்கானிஸ்தானில் இரவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாகி உள்ளன. மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் குணார் மாகாணம் ஜலாலாபாத் அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஆப்கனின் கிராமங்கள், பல மாடி கட்டிடங்கள் சரிந்து விழுந்தன.
ஜலாலாபாத்துக்கு கிழக்கே 27 கி.மீ. தூரத்தில் 8 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக...
அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்துள்ளனர்.
மினசோட்டா மாகாணத்தில் உள்ள மினியாபோலிஸ் நகரில் இயங்கி வரும் ஒரு கத்தாலிக்க பள்ளியில் இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. 395 குழந்தைகள் படிக்கும் இந்த பள்ளியில் நுழைந்த மர்ம நபர் ஒருவர், பள்ளியில் உள்ள தேவாலயத்தில் குழந்தைகள் பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஜன்னல்...
‘ரஷ்யா யுத்தம் செய்ய இந்தியா நிதியுதவி’ – 50% வரி விதிப்பு குறித்து ட்ரம்ப்பின் ஆலோசகர் கருத்து
admin - 0
தொடர்ச்சியாக தள்ளுபடி விலையில் ரஷ்யாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதுதான் உக்ரைன் மீதான உக்கிர தாக்குதலுக்கு காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறியுள்ளார்.
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு புதன்கிழமை (ஆக.27) அமலுக்கு வந்தது. ஏற்கெனவே விதித்த 25 சதவீத வரியோடு இந்த கூடுதல் 25 சதவீதமும் சேர்ந்துள்ள நிலையில், 50 சதவீத...
காசாவில் திங்கட்கிழமை அன்று இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சுமார் 20 பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. உயிரிழந்தவர்களில் 5 பத்திரிகையாளர்களும் அடங்குவர். இதற்கு சர்வதேச ஊடக அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அங்குள்ள நஸர் மருத்துவமனையில் இன்று (ஆக.25) மட்டும் இரண்டு முறை தாக்குதல் நடந்துள்ளதாக காசாவில் செயல்பட்டு வரும் பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது. முதலில் சக்திவாய்ந்த வெடிபொருட்களை கொண்டு ட்ரோன் தாக்குதலும், பின்னர் ஏவுகணை தாக்குதலும் நடத்தப்பட்டதாக தகவல்.
“முதலில்...
காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்: பத்திரிகையாளர்கள் 5 பேர் உட்பட 20 பேர் உயிரிழப்பு
admin - 0
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையில் மோதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று வான் வழி தாக்குதல் நடத்தியது.
இதில் 5 பத்திரிகையாளர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்ததாக காசா பொதுமக்கள் பாதுகாப்பு முகமையின் செய்தித் தொடர்பாளர் மமுத் பசல் தெரிவித்துள்ளார். மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல்...
மேற்கத்திய நாடுகள் குடியேற்ற விதிகளை கடுமையாக்கிய நிலையில் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ரஷ்யா
admin - 0
அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் வெளிநாட்டினருக்கான குடியேற்ற விதிமுறைகளை கடுமையாக்கி வருகின்றன. இந்த சூழ்நிலையில், இந்தியர்களை அதிக அளவில் வேலையில் சேர்க்க ரஷ்ய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
இதுகுறித்து ரஷ்யாவுக்கான இந்திய தூதர் வினய் குமார் டாஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ரஷ்யாவில் மனித வளம் தேவைப்படுகிறது. இந்தியாவில் திறமையான மனிதவளம் உள்ளது. எனவே, ரஷ்ய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு அந்நாட்டு...
ஆப்கனிஸ்தானின் ஹிராட் மாகாணத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 19 குழந்தைகள் உட்பட 79 பேர் உயிரிழந்தனர்.
ஈரானில் இருந்து ஆப்கனிஸ்தானுக்கு திரும்பியவர்கள் பயணித்த பேருந்து ஒன்று அந்நாட்டின் வடமேற்கில் உள்ள ஹிராட் மாகாணத்தில் நேற்றிரவு (உள்ளூர் நேரப்படி இரவு 8.30) விபத்துக்குள்ளானது. லாரி மற்றம் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் பேருந்து தீ பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்தில் 19 குழந்தைகள் உட்பட 79 ஆப்கனியர்கள் உயிரிழந்துள்ளனர்....
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விலையில் 5% தள்ளுபடி: ரஷ்ய துணை வர்த்தக பிரதிநிதி எவ்ஜெனி அறிவிப்பு
admin - 0
அமெரிக்காவிடமிருந்து பல்வேறு கட்ட அழுத்தம் மற்றும் தடைகள் இருந்தபோதிலும், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் 5 சதவீத தள்ளுபடியில் தொடரும் என்று இந்தியாவுக்கான ரஷ்ய துணை வர்த்தக பிரதிநிதி எவ்ஜெனி கிரிவா தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக நிதி அளிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதனால், ரஷ்யாவிலிருந்து தொடர்ச்சியாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத...










