விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸை முன்பே பூமிக்கு அழைத்துவரும் ஸ்பேஸ் எக்ஸின் கோரிக்கையை அப்போதைய அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் நிராகரித்ததாக எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார். விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக பூமிக்கு அழைத்துவரப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஸ்பேஸ் எஸ்க் சிஇஓ மஸ்க் இத்திட்டத்துக்கு முன்னுரிமை அளித்ததற்காக இப்போதைய அதிபர் ட்ரம்புக்கு நன்றி தெரிவித்துள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒன்பது மாதங்களுக்கு மேலாக தங்கி இருந்த விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும்...
இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் பேரி வில்மோர் உள்ளிட்டோர் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு திரும்பினர். இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 3.27 மணிக்கு புளோரிடா கடலில் டிராகன் ஸ்பிளாஷ் டவுன் ஆனது. சுனிதா மற்றும் வில்மோருடன் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் இருவரும் டிராகன் விண்கலம் மூலம் பூமி திரும்பினர். உலகம்...
பாகிஸ்தானில் போலீஸார் ரெய்டு நடத்திய மோசடி கால் சென்ட்டரில் இருந்த கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் பர்னிச்சர்களை பொது மக்கள் கொள்ளையடித்துச் சென்றனர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்தில் சீனாவைச் சேர்ந்த சிலர் கால் சென்ட்டர் நடத்தினர். இதில் வெளிநாடு மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த நபர்கள் பணியாற்றினர். இந்த கால் சென்ட்டர், உலக முழுவதும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தது தெரியவந்தது. இது குறித்து பாகிஸ்தான் அரசுக்கு புகார் அளிக்கப்பட்டதும், அந்த கால் சென்ட்ரில்...
30 நாட்களுக்கு உக்ரைன் பகுதியில் உள்ள எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த ட்ரம்ப்பிடம் உறுதியளித்துள்ளார். மூன்றாடுகளாக நீடித்துவரும் உக்ரைன் - ரஷ்யப் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையின் விளைவாக 30 நாட்களுக்கு உக்ரைன் பகுதியில் உள்ள எரிசக்தி கட்டமைப்புகள்...
காசா மீதான இஸ்ரேலின் 'கொடிய' வான்வழித் தாக்குதல்களுக்கு அமெரிக்காவின் வரம்பற்ற அரசியல் மற்றும் ராணுவ ஆதரவே காரணம் என்று ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்தத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 413 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவதை ஹமாஸ் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறது என்றும், இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் பிற மத்தியஸ்தர்களின் ஆலோசனைகளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்றும் குற்றம் சாட்டிய இஸ்ரேல், போர் நிறுத்தத்தத்தை...
உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இருவரும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்திய நேரப்படி இரவு 8 மணியளவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதினை தொலைபேசி வாயிலாக அழைத்தார். இந்த அழைப்பில் உக்ரைன் - ரஷ்ய போர் நிறுத்தம் குறித்து இருவரும் பேசி வருகின்றனர். கடந்த 2 மணி நேரமாக...
உக்ரைன் போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம் என ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார் என போலந்து அமைச்சர் தெரிவித்துள்ளார். போலந்து நாட்டின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் விலாடிஸ்லா டோபில் பார்டோஸெவ்ஸ்கி தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: ரஷ்யா, உக்ரைன் போர் தொடங்கியபோது பிரதமர் மோடி போலந்தின் வார்சா நகருக்கு வந்திருந்தார். உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம் என...
அமெரிக்​காவைச் சேர்ந்த பிட்​கா​யின் முதலீட்​டாளரை ஏமாற்றி அவர் கணக்​கில் இருந்த 4,100 பிட்​கா​யின்​களை சிங்​கப்​பூரை சேர்ந்​த மெலோனி லாம் (20) மற்​றும் அவரது நண்​ப​ரான ஜீன்​டீல் செரானோ ஆகியோரது சொந்த கணக்​கிற்கு மாற்​றி​யுள்​ளனர். அதன் இன்​றைய மதிப்பு 450 மில்​லியன் டால​ராகும். இந்த பணத்​தில் அவர்​கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்​துள்​ளனர். மெலோனி லாம், கைது செய்​யப்​படு​வதற்கு அதாவது 2024-ம் ஆண்டு செப்​டம்​பருக்கு முன்​பாக மியாமி, லாஸ்​ஏஞ்​சல்ஸ் இரவு கேளிக்கை விடு​தி​களில்...
உக்ரைன் மீதான போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இன்று தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த தகவலை ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. கடந்த 2022 பிப்ரவரி மாதம் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்ததுடன், ஆயுத உதவியும் வழங்கின. இதற்கிடையே, இந்த போரை நிறுத்த பிரதமர்...
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 100 பேர் உயிரிழந்திருப்பதாகத் தெரிகிறது. இஸ்ரேல் - காசா இடையே கடந்த ஜனவரி 19-ம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்குவந்த நிலையில் நடந்துள்ள மிகப்பெரிய தாக்குதலாக இது அமைந்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிணைக் கைதிகளை விடுவிப்பதில் ஹமாஸ் தொடர்ச்சியாக சுணக்கம் காட்டி வருகிறது. அதேபோல் இவ்விவகாரத்தில் அமெரிக்க அதிபரின்...