ஓசிசிஆர்பி அமைப்புடன் இணைந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படவில்லை: பாஜகவின் புகாருக்கு அமெரிக்கா மறுப்பு
admin - 0
ஓசிசிஆர்பி அமைப்புடன் இணைந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படவில்லை என பாஜகவின் புகாருக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.
திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் ஊழல் அறிக்கையிடல் திட்டம் (ஓசிசிஆர்பி) என்பது புலனாய்வு பத்திரிகையாளர்களை உள்ளடக்கிய சர்வதேச ஆகும். இந்த அமைப்பு திட்டமிட்ட குற்றம் மற்றும் ஊழல் தொடர்பான கட்டுரைகளை ஊடகங்களில் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், ஓசிசிஆர்பி அமைப்புக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையே ரகசிய தொடர்பு இருப்பதாக பிரான்ஸ் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது. மேலும்...
தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சி படை கைப்பற்றியது: சிரியா அதிபர் ஆசாத் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம் – நடந்தது என்ன?
admin - 0
மத்திய கிழக்கு நாடான சிரியாவை எச்டிஎஸ் கிளர்ச்சி படை கைப்பற்றியது. நாட்டில் பதற்றம் அதிகரித்ததால், அதிபர் ஆசாத் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார்.
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் கடந்த 1971-ல் ராணுவ மூத்த தளபதியாக இருந்த ஹபீஸ் அல் ஆசாத் ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றினார். 29 ஆண்டுகள் சிரியா அதிபராக இருந்த அவர் 2000-ம் ஆண்டில் காலமானார். அவரது மகன் பஷார் அல் ஆசாத் கடந்த 2000 ஜூலை...
ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் முதல் முறையாக தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டது.
ஜெர்மனியில் உள்ள தமிழர்கள் திரளாகக் கலந்து கொண்ட விழாவை பிராங்க்பர்ட்டில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம், ஐரோப்பியத் தமிழர்கள் கூட்டமைப்பு. ஜெர்மனி தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்தின. முக்கிய விருந்தினராக தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்ரபாணி, வணிக முதலீடு மற்றும் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சக்ரபாணி பேசுகையில், “எங்கள் முதல்வர் பதவி...
மத்திய கிழக்கு நாடான சிரியாவை எச்டிஎஸ் கிளர்ச்சி படை கைப்பற்றியதைத் தொடர்ந்து அதிபர் பஷார் அல் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு அளித்துள்ளதாக ரஷ்ய தரப்பு தெரிவித்துள்ளது.
ரஷ்ய அதிபர் புதினின் வசிப்பிடமான க்ரெம்ளின் மாளிகை வட்டாரத் தகவலை சுட்டிக்காட்டி இத்தகவலை ரஷ்யாவின் இன்டர்ஃபேக்ஸ், டாஸ், ரியா நோவோஸ்டி பத்திரிகைகள் உறுதிப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளன.
பைடன் வரவேற்பு: இதற்கிடையில் சிரியா விவகாரம் குறித்து...
வங்கதேச கரன்சி நோட்டுகளில் தேசத் தந்தை முஜிபுர் ரஹ்மானின் படம் நீக்கப்படுகிறது. அவரது படத்துக்கு பதிலாக மத வழிபாட்டு தலங்கள், வங்க கலாச்சாரம், மாணவர் போராட்டங்கள் தொடர்பான படங்கள் அடங்கிய புதிய கரன்சிகள் அச்சிடப்பட்டு வருகின்றன.
வங்கதேசத்தில் இடஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்து கடந்த ஜூன், ஜூலையில் மாணவர் சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தின. இதன்காரணமாக அந்த நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி பதவியை ராஜினாமா...
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் யுனைடட் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ப்ரையன் தாம்ப்ஸன் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருக்கு வயது 50. இந்நிலையில் சந்தேக நபரின் சிசிடிவு புகைப்படங்களை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
நியூயார்க் நகரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த ப்ரையன் தாம்ப்ஸன் அங்கிருந்து யுனைடெட் ஹெல்த் குழுமத்தின் முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுச் சென்றுள்ளார். அப்போது கையில் துப்பாக்கியுடன் வந்த மர்ம...
அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்ட் ட்ரம்ப் உடனான நட்புறவினை பயன்படுத்தி தன் போட்டி நிறுவனங்கள் மீது அரசு அதிகாரத்தை எலான் மஸ்க் துஷ்பிரயோகம் செய்யமாட்டார் என தான் நம்புவதாக ஓபன் ஏஐ நிறுவன சிஇஓ சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.
தொழிலதிபர்கள் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் செயல்திறன் துறையை தலைமை தாங்கி வழிநடத்துவார்கள் என கடந்த மாதம் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில், நியூயார்க் டைம்ஸ் டீல்புக்...
ஸ்மார்ட்போன் அடிக்ஷன் வேடிக்கையான விஷயம் அல்ல. அதனை உணர்ந்த ஸ்பெயின், தேசத்தில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு போனிலும் ஹெல்த் எச்சரிக்கை வாசகத்தை இடம்பெற செய்ய முடிவு செய்துள்ளது. அரசுக் குழுவின் பரிந்துரைப்படி விரைவில் இந்த வாசகம் போன்களில் இடம்பெறும் என தகவல்.
ஸ்மார்ட்போன் அடிக்ஷன் மனநலன், உடல்நலன், தூக்கம், உறவு முறை என அனைத்தையும் வயது வித்தியாசமின்றி பாழ்படுத்துகிறது. இதை கருத்தில் எடுத்து கொண்ட ஐரோப்பிய தேசமான ஸ்பெயின் இந்த...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.0 ஆக பதிவானது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும் அது சற்று நேரத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது.
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வடக்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கலிபோர்னியாவின் கடலோர பகுதியான கேப் மெண்டோசினா பகுதியில் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் சற்று அதிகமாக உணரப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், மக்கள் பீதி அடைந்தனர்....
மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் உள்ள உணவு விநியோக மையம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். காசாவில் உள்ள குடும்பங்கள் தொடர்ந்து ‘மோசமான’ நிலைமைகளை எதிர்கொள்கின்றன என ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டில் சுமார் 1,200 பேரை படுகொலை செய்து, 200-க்கும் மேற்பட்டவர்களை பிணைக் கைதிகளாக ஹமாஸ்...










