Google search engine
சர்வதேச நீர்வரைவியல் அமைப்பு (ஐஎச்ஓ) கடல்கள் மற்றும் பெருங்கடல்களுக்கு பெயர் சூட்டுகிறது. ஏதாவது ஒரு கடல் பகுதியின் பெயரை மாற்ற சம்பந்தப்பட்ட நாடுகளின் ஒருமித்த கருத்து அவசியம். அதன் அடிப்படையில் மட்டுமே ஐஎச்ஓ அமைப்பு கடல் பகுதிகளின் பெயர்களை மாற்றும். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன்னிச்சையாக அமெரிக்க வளைகுடா என்று பெயரிட்டுள்ளார். இதை மெக்ஸிகோ அரசு ஏற்கவில்லை. இந்த சூழலில் சர்வதேச அளவில் 'மெக்ஸிகோ வளைகுடா' என்றும் அமெரிக்காவில் மட்டும் 'அமெரிக்க...
தென்மேற்கு பாகிஸ்தானில் நேற்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 10 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம், ஹர்னாய் மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள் நேற்று பொருட்கள் வாங்க கடைத்தெருவுக்கு சென்றுவிட்டு, தங்கள் பணியிடத்துக்கு ஒரு வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் வாகனம் சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டில் சிக்கியது. இதில் வாகனம் வெடித்து சிதறியதில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயம் அடைந்தனர். இந்த...
உக்ரைனின் செர்னோபில் அணு உலை மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டி உள்ளார். சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைனின் செர்னோபில் பகுதியில் கடந்த 1977-ம் ஆண்டில் அணு மின் நிலையம் திறக்கப்பட்டது. கடந்த 1986-ம் ஆண்டில் அந்த அணு மின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட கதிர்வீச்சால் 30 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சுமார்...
செர்னோபில் அணுமின்நிலையத்தில் உள்ள கைவிடப்பட்ட அணு உலையின் மீது ரஷ்யா ட்ரோன் மூலம் தாக்கியுள்ளதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். இந்தத் தாக்குதல், ஏற்கெனவே அழிக்கப்பட்ட அணுமின் நிலையத்தில் முன்பு செயலில் இருந்த நான்காவது அணு உலை மீது நேற்றிரவு நடத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு தீ விபத்து ஏற்பட்டது, அது அணைக்கப்பட்டு விட்டதாகவும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். நேற்றிரவு வெடிப்பு சம்பவம் நடந்த சில நிமிடங்களில் தீயணைப்பு வீரர்களும், வாகனங்களும்...
சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் அடுத்த மாதம் பூமிக்கு திரும்புவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 8 நாள் பயணமாக விண்வெளி சென்ற அவர், அங்கு 8 மாதங்களாக சிக்கியுள்ளார். தனியார் ஊடக நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், பூமி திரும்புவதை நாசாவின் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் உறுதி செய்துள்ளனர். மார்ச் 12-ம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் (க்ரூ-10) பூமியில்...
காஷ்மீர் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இந்தியாவும் பாகிஸ்தானும் முன்வர வேண்டும் என்று துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக பாகிஸ்தானுக்கு வருகை தந்த எர்டோகனை, நூர் கான் விமானப்படை தளத்தில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்-பும், அதிபர் ஆசிப் அலி சர்தாரியும் வரவேற்றனர். துருக்கி அதிபருடன் அவரது மனைவி எமின் எர்டோகன், முதலீட்டாளர்கள் மற்றும் வணிகத் தலைவர்கள் வந்துள்ளனர். பிரதமர் மாளிகையில் எர்டோகனுக்கு அணிவகுப்பு மரியாதை...
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்கவும், மிக நெருக்கமாக இணைந்து செயல்படவும் அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒப்புக்கொண்டுள்ளன. இது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று (புதன்கிழமை) தொலைபேசியில் உரையாடி உள்ளார். இதனை தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்த ட்ரம்ப், "நாங்கள் ஒவ்வொருவரும் அவரவர் நாடுகளின் பலங்களைப் பற்றியும், ஒன்றாகச் செயல்பட்டால் கிடைக்கும் பெரும் நன்மைகளைப் பற்றியும் பேசினோம். முதலில்,...
பிரதமர் நரேந்திர மோடியும் பிரான்ஸ் அதிபர் மெக்ரானும் நேற்று ஆலோசனை நடத்தினர். இதில் ஏஐ ஆராய்ச்சியில் இந்தியாவும் பிரான்ஸும் இணைந்து செயல்படுவது என முடிவு எடுக்கப்பட்டது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் செயற்கை நுண்ணறிவு மாநாடு கடந்த 10-ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 10-ம் தேதி பாரிஸ் சென்றார். நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது நாள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். இந்த மாநாட்டை தொடர்ந்து,...
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பிரதமர் நரேந்திர மோடியை கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி(சிஇஓ) சுந்தர் பிச்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பிரதமர் மோடி 2 நாடுகள் பயணமாக பிரான்ஸ் புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் பிரான்ஸில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு(ஏஐ) உச்சி மாநாட்டில் பங்கேற்று பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப துறையை சேர்ந்தவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். ஏஐ உச்சி மாநாட்டின் இடையே பிரதமர் மோடியை கூகுள் நிறுவன...
வெளிநாட்டு ஊழல் நடைமுறை சட்டத்தை நிறுத்தி வைக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். எப்சிபிஏ எனப்படும் வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டத்தை நிறுத்தி வைப்பதற்கான நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இது, அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதகமாக இருப்பதாகவும், புதிய சட்டத்தை உருவாக்கும்படியும் அட்டர்னி ஜெனரலுக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய...