ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் சண்டிகரில் உள்ள முலான்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிகள் மோதுகின்றன.
5 முறை சாம்பியனான சிஎஸ்கே நடப்பு ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த சீசனை மும்பை அணிக்கு எதிராக வெற்றியுடன் தொடங்கிய சிஎஸ்கே அதன் பின்னர் நடைபெற்ற 3 ஆட்டங்களிலும் தோல்வியடைந்தது. இந்த 3 ஆட்டங்களிலுமே...
டி 20 கிரிக்கெட்டில் 13 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார் விராட் கோலி. ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணியில் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி, தேவ்தத் படிக்கலுடன் இணைந்து அதிரடியாக விளையாடினார்.
விராட் கோலி 17...
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோதுகிறது.
அஜிங்க்ய ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்விகளுடன் 4 புள்ளிகளை பெற்றுள்ளது. ரிஷப் பந்த் தலைமயிலான லக்னோ அணியும் 4 ஆட்டங்களில் விளையாடி...
இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, டி 20 அணியின் கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் மோசமாக செயல்பட்டதை தொடர்ந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜாஸ் பட்லர் விலகினார். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, டி 20 அணியின் கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.
26 வயதான ஹாரி புரூக் 2022-ம் ஆண்டு ஜனவரியில் குறுகிய வடிவிலான போட்டிகளில்...
புத்துயிர் கொடுக்க அணியில் இணைந்தார் பும்ரா: பெங்களூரு அணியை வீழ்த்துமா மும்பை இந்தியன்ஸ்?
admin - 0
ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள் மோதவுள்ளன.
மும்பை வான்கடே மைதானத்தில் இந்த ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, 3 தோல்விகளைப் பெற்று மோசமான நிலையில் உள்ளது.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே அந்த அணி வெற்றி பெற்றது. மற்ற ஆட்டங்களிலும்...
ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து 8 ஆட்டங்களில் கேப்டனாக வெற்றி பெற்று பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் சாதனை புரிந்துள்ளார்.
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் கவுதம் கம்பீர் (10 போட்டிகள்-2014-15-ம் ஆண்டு), 2-வது இடத்தில் ஷேன் வார்னே (8 போட்டிகள்-2008-ம் ஆண்டு) உள்ளனர். 3-வது இடத்தில் ஸ்ரேயஸ் ஐயரும் (8 போட்டிகள்-2024-25-ம் ஆண்டு), 4-வது இடத்தில் சிஎஸ்கே முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியும் (7 போட்டிகள்-2013-ம் ஆண்டு) உள்ளனர்.
ராஜஸ்தானுக்கு எதிரான...
முழு திறமையையும் வெளிப்படுத்தினார் ஜோப்ரா ஆர்ச்சர்: ராஜஸ்தான் வீரர் சந்தீப் சர்மா புகழாரம்
admin - 0
பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோப்ரா ஆர்ச்சருக்கு சக அணி வீரர் சந்தீப் சர்மா புகழாரம் சூட்டியுள்ளார்.
முலான்பூரில் நேற்று முன்தினம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியின்போது அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்கள் பந்துவீசி 25 ரன்கள்...
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே) தொடர்ச்சியாக 3-வது தோல்வியைச் சந்தித்து மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை கோப்பையை வென்ற சாம்பியன் அணிகளில் ஒன்று (5 முறை-மற்றொன்று மும்பை இந்தியன்ஸ்), அதிக முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய அணி, இளம் வீரர்களை சிறப்பாக வழிநடத்தி அவர்களை சாம்பியன்களாக உருமாற்றிய அணி போன்ற பெருமைகளைப் பெற்ற சிஎஸ்கே அணி இந்த...
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் தவறு எங்கு நடந்தது என்று தெரியவில்லை என்று பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்தார்.
முலான்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. இதில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்...
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காக அதிக வெற்றி தேடித்தந்த கேப்டன் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் பெற்றுள்ளார்.
ஐபிஎல்-2025 சீசனின் 18-வது ஆட்டம் நியூ சண்டிகரில் உள்ள முலான்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இதையடுத்து, ஐபிஎல் கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் அணி 32-வது வெற்றியைப் பெற்றுள்ளது.
இதன் மூலம் ராஜஸ்தான் அணிக்கு...










