Google search engine
டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்றுமுன்தினம் கோவையில் நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த கோவை அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பாலசுப்பிரமணியம் சச்சின் 38 பந்துகளில், 6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 51 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஷாருக்கான் 25, ஆந்த்ரே சித்தார்த் 25 ரன்கள் சேர்த்தனர். திண்டுக்கல் அணி தரப்பில் சந்தீப் வாரியர்,...
இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நார்த்தம்டனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்தியா ஏ அணி பேட்டிங்கை தொடங்கிய நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 17, கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன் 11 ரன்களில் கிறிஸ்வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய கருண் நாயருடன் இணைந்து கே.எல்.ராகுல் பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார். நிதானமாக விளையாடிய கருண் நாயர்...
நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டியில் தனது இறுதிச் சுற்றில் உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான பேபியானோ கருனாவிடம் தோல்வியை தழுவினார். இதனால் இந்தத் தொடரில் பட்டம் வெல்லும் வாய்ப்பை குகேஷ் இழந்தார். தோல்விக்கு பிறகு மேஜை மீது தன் தலையை சாய்த்துக் கொண்டு குகேஷ் வாடினார். அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் இந்த தொடர் நடைபெற்றது. 6 வீரர்கள் கலந்து கொண்ட இந்தத் தொடர் இரட்டை...
பெங்களூருவில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு(ஆர்சிபி) அணி வெற்றி கொண்டாட்ட நிகழ்வின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த வழக்கில், போலீஸார் ஆர்சிபி அணியின் நிர்வாகி நிகோல் சோசலே, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த டிஎன்ஏ நிறுவனத்தின் துணை தலைவர் சுனில் மேத்யூ உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி அணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் 4-ம் தேதி வெற்றி...
டெல்லியில் சகோதர தாதாக்களான, ரங்கராய சக்திவேல் (கமலஹாசன்) மற்றும் மாணிக்கம் (நாசர்) மீது போலீஸ் என்கவுன்டர் முயற்சி நடக்கிறது. இதில் சம்பந்தமில்லாத அமரனின் (சிம்பு) தந்தை இறந்துவிடுகிறார். அமரனை அழைத்து வந்து சக்திவேல் வளர்த்து ஆளாக்குகிறார். திடீரென ரங்கராய சக்திவேல் மீது நடக்கும் கொலை முயற்சியில் அமரனை, சந்தேகிக்கிறார் சக்திவேல். இதைப் பயன்படுத்தி ரங்கராய சக்திவேலுக்கும் அமரனுக்கும் இடையே கொம்பு சீவி விடுகிறார்கள். அப்போது ஓர் உண்மை, அமரனுக்குத் தெரிய...
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்தத் போட்டிகள் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-2027-ம் ஆண்டு சுழற்சியில் இந்தியாவுக்கு முதல் தொடராக அமைந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான 14 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட்...
யுடிடி சீசன் 6-ல் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் - யு மும்பா அணிகள் மோதின. இதில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் 8-7 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணியின் கனக் ஜா (அமெரிக்கா), யு மும்பா அணியின் லிலியன் பார்டெட்டை 2-1 (11-6, 7-11, 11-9) என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். 2-வது நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் ஜெய்ப்பூர்...
ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி, இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு 5 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாட உள்​ளது. இதற்​காக இந்​திய அணி இன்று இங்​கிலாந்து புறப்​பட்​டுச் செல்​கிறது. இதையொட்டி மும்​பை​யில் நேற்று கேப்​டன் ஷுப்​மன் கில்​லும், பயிற்​சி​யாளர் கவுதம் கம்​பீரும் பத்​திரி​கை​யாளர்​களை சந்​தித்​தனர். அப்​போது ஷுப்​மன் கில் கூறிய​தாவது: நான் கேப்​ட​னாக நியமிக்​கப்​பட்​ட​போது மிக​வும் மகிழ்ச்​சி​யடைந்​தேன். பேட்​டிங் வரிசையை நாங்​கள் இன்​னும் முடிவு செய்​ய​வில்​லை. எங்​கள்...
நடப்பு யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் கால்பந்து அணியை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஸ்பெயின் அணி. அந்த அணியின் இளம் வீரர் யமால், 2 கோல்களை பதிவு செய்து அசத்தினார். இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் முதல் 4 கோல்களை 59 நிமிடங்களுக்குள் ஸ்பெயின் பதிவு செய்துவிட்டது. அதுவரை பிரான்ஸ் அணி ஒரு கோல் கூட...
நடப்பு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 ரன்களில் ஆர்சிபி வாகை சூடியது. இந்தச் சூழலில் நடப்பு சீசன் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு விருது கொடுத்து அங்கீகரித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் மற்றும் சிறந்த கள செயல்பாடு என பல்வேறு பிரிவுகளில் இந்த விருதுகள் அடங்கும். வளர்ந்து வரும்...