Google search engine
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் புகழ்பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 6-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 22-ம் நிலை வீரரான இத்தாலியின் ஃபிளாவியோ கோபோலியுடன் மோதினார். 3 மணி நேரம் 11 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-7 (6-8), 6-2, 7-5, 6-4 என்ற செட் கணக்கில்...
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் உருவப் படம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் நேற்று திறக்கப்பட்டது. 18 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட இந்த படம். ஓவியர் ஸ்டூவர்ட் பியர்சன் ரைட் என்பவரால் வரையப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதி வரை அருங்காட்சியகத்தில் இருக்கும் இந்த படம் அதன் பின்னர் பெவிலியனுக்கு மாற்றப்படும். ஓவியர் ஸ்டூவர்ட் பியர்சன் ரைட் இதற்கு முன்னர் கபில் தேவ், பிஷன் சிங் பேடி,...
இங்கிலாந்து அணிக்கு எதிராக முதன்முறையாக டி20 கிரிக்கெட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது இந்திய மகளிர் அணி. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் இரவு மான்செஸ்டரில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் சோபியா...
சர்வதேச கால்பந்து தரவரிசை பட்டியலை ஃபிபா வெளியிட்டுள்ளது. இதில் இந்திய ஆடவர் கால்பந்து அணி 6 இடங்களை இழந்து 133-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான சரிவை இந்திய அணி சந்தித்துள்ளது. இதற்கு காரணம் ஜூன் மாதத்தில் நடைபெற்ற 2 ஆட்டங்களில் இந்திய அணி தோல்விகளை சந்தித்ததுதான். கடந்த ஜூன் 4-ம் தேதி தாய்லாந்து அணிக்கு எதிரான நட்பு ரீதியிலான கால்பந்து...
 நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பிஎஸ்ஜி. இதன் மூலம் அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் உள்ள ஈஸ்ட் ரூதர்போர்ட் நகர வட்டத்தில் இந்த அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே பிஎஸ்ஜி அணி துல்லியமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் முதல் 25 நிமிடங்களுக்குள் 3...
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (10-ம் தேதி) தொடங்குகிறது. ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் லீட்ஸில் நடை பெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து எட்ஜ்பாஸ்டனில்...
டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இங்கிலாந்து அணிக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 269 ரன்களும் 2-வது இன்னிங்ஸில் 161 ரன்களும் விளாசிய இந்திய அணியின் கேப்டனான ஷுப்மன் கில் 15 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார். தரவரிசையில் ஷுப்மன் கில் டாப் 10-க்குள் இடம் பெறுவது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்னர் அவர், அதிகபட்சமாக 2023-ம் ஆண்டு செப்டம்பரில் 14-வது...
டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் திண்டுக்கலில் நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த திருப்பூர் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது. துஷார் ரஹேஜா 46 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 77 ரன்களும், அதித் சாத்விக் 34 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 65 ரன்களும் விளாசினர். 222 ரன்​கள் இலக்​குடன்...
விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் 35-ம் நிலை வீராங்கனையான சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிக், 17-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் கேத்ரினா அலெக்ஸாட்ரோவாவுடன் மோதினார். இதில் பெலின்டா பென்சிக் 7-6 (7-4), 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் 24-ம் நிலை வீரரான...
 இங்கிலாந்து - இந்தியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி வரும் 10-ம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் சேர்க்கப்பட்டுள்ளார். கஸ் அட்கின்சன் கடந்த மே மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது தொடை பகுதியில் காயம் அடைந்தார். தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ளதால் மீண்டும் அணிக்குள்...