Google search engine
கத்​தா​ரில் உள்ள தோகா நகரில் வரும் 14-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை வளர்ந்து வரும் வீரர்​களுக்​கான ஆசிய கோப்பை கிரிக்​கெட் தொடர் நடை​பெறுகிறது. இதில் இந்​தியா ‘ஏ’ உள்​ளிட்ட 8 அணி​கள் கலந்து கொள்​கின்​றன. இவை 2 பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளன. ‘ஏ’ பிரி​வில் இந்​தியா ‘ஏ’, பாகிஸ்​தான் ‘ஏ’, ஐக்​கிய அரபு அமீரகம் ‘ஏ’, ஓமன் ‘ஏ’ ஆகிய அணி​கள் இடம் பெற்​றுள்​ளன. இந்​தியா ‘ஏ’ அணி...
உலகக் கோப்பை தொடரில் ஆல்​ர​வுண்​ட​ரான இந்தியாவின் தீப்தி சர்​மா, பேட்​டிங்​கில் 215 ரன்​களும் பந்​து​வீச்​சில் 22 விக்​கெட்​களை​யும் வேட்​டை​யாடி இருந்​தார். இதனால் அவர், தொடர் நாயகி​யாக தேர்வு செய்​யப்​பட்​டார். தீப்தி சர்மா கூறும்போது, ‘‘உண்​மை​யைச் சொல்ல வேண்​டும் என்​றால் இது இன்​னும் எனக்கு ஒரு கனவு போலவே தோன்​றுகிறது. உலகக் கோப்பை இறு​திப் போட்​டி​யில் பங்​களிப்​ப​தில் நான் மிக​வும் மகிழ்ச்​சி​யடைகிறேன். சவால்​மிகுந்த ஆட்​டங்​களை எனக்​குப் பிடித்​த​மானவை. சூழ்​நிலைக்கு ஏற்ப விளை​யாட வேண்​டும்...
ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடரின் இறு​திப் போட்​டி​யில் 52 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்​பிரிக்க அணியை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்று வரலாற்று சாதனை படைத்​துள்​ளது இந்​திய அணி. இந்திய வெற்றி குறித்து இந்திய அணி வீராங்கனைகள் தெரிவித்தது: ஸ்மிருதி மந்தனா: இந்த தருணத்தை மறக்கவே முடியாது. இன்னும் 45 நாட்களுக்கு எனக்கு இந்த நினைவுகள் இருக்கும். 45 நாள் வரை ஒவ்வொரு இரவும் தூங்காமலேயே இந்த...
நடப்பு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணி. இந்நிலையில், அவர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் மிதாலி ராஜ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சச்சின் டெண்டுல்கர்: 1983 உலகக் கோப்பை ஒரு முழு தலைமுறையை பெரிய கனவுகளை காணவும், அந்த கனவுகளைத் துரத்தவும் தூண்டியது. தற்போது, நமது மகளிர் கிரிக்கெட் அணி உண்மையிலேயே சிறப்பான ஒன்றைச்...
நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய கிரிக்கெட் அணி. இந்தப் போட்டியில் 58 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார் இந்தியாவின் தீப்தி சர்மா. நவி மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 299 ரன்கள் என்ற இலக்கை தென் ஆப்பிரிக்க அணி விரட்டியது....
நவி மும்பையில் நடந்த மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலக சாம்பியன் ஆகியிருக்கிறது இந்திய அணி. இதில் முக்கியப் பங்களிப்பாக பேட்டிங்கில் தொடக்க வீரராக இறங்கி ஷெஃபாலி வர்மா அடித்த 87 ரன்களும், பிறகு அவர் சுழற்பந்து வீச்சில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதும் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனையடுத்து ‘இது ஷெஃபாலியின் நாள் என்று எனக்குத் தெரியும்’ என்று...
தென் ஆப்​பிரிக்க ஏ அணி​யுட​னான முதலா​வது டெஸ்ட் போட்​டி​யில் இந்​திய ஏ அணி 3 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. பெங்​களூரு​வில் நடை​பெற்று வரும் இந்த போட்​டி​யில் முதல் இன்​னிங்​ஸில் தென் ஆப்​பிரிக்க ஏ அணி 309 ரன்​களும், இந்​திய ஏ அணி 234 ரன்​களும் எடுத்து ஆட்​ட​மிழந்​தன. இதைத் தொடர்ந்து 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய தென் ஆப்​பிரிக்க ஏ அணி 199 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. இதைத் தொடர்ந்து இந்​திய...
ஜெர்மனியின் சார்புரூக்கன் நகரில் நடைபெற்று வரும் ஹைலோ ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா தோல்வி கண்டு வெளியேறினார். நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் பிரிவு ஒற்றையர் அரை இறுதிப் போட்டியில் இந்தோனேசியாவின் புத்ரி குஸுமா வர்தானி 21-7, 21-13 என்ற நேர் செட்களில் இந்தியாவின் உன்னதி ஹூடாவை வீழ்த்தினார்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடனான சர்வதேச டி20 தொடரில் பங்கேற்கும் நியூஸிலாந்து கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டி20 தொடர் வரும் 5-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. நியூஸிலாந்து அணி விவரம்: மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவன் கான்வே, ஜேக்கப் டஃப்பி, ஜாக் பவுல்க்ஸ், கைல் ஜேமிசன், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், ரச்சின் ரவீந்திரா, டிம் ராபின்சன், டிம்...
தமிழக அணிக்​கெ​தி​ரான ரஞ்சி டிராபி கிரிக்​கெட் லீக் ஆட்​டத்​தில் விதர்பா அணி முதல் இன்​னிங்​ஸில் 2 விக்​கெட் இழப்​புக்கு 211 ரன்​கள் எடுத்​துள்​ளது. இந்​தப் போட்டி கோயம்​புத்​தூரில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்​டத்​தில் தமிழக அணி 4 விக்​கெட் இழப்​புக்கு 252 ரன்​கள் எடுத்​திருந்​தது. இந்​நிலை​யில் நேற்று நடை​பெற்ற 2-ம் நாள் ஆட்​டத்​தில் தமிழக வீரர்​கள் ஷாருக் கான் 0, பாபா இந்​திரஜித் 94 ரன்​களு​டன் தொடங்​கினர். இந்​திரஜித் 96...