இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று காலை 5 மணிக்கு தொடங்கியது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுபப்யணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட ஆலன் பார்டர் - கவாஸ்கர் டிராபிக்கான டெஸ்ட் தொடரில் 4 ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் இந்திய 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. பெர்த்தில் நடைபெற்ற முதல்...
இலங்கை கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளிடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் கடைசி ஆட்டம் நெல்சன் நகரிலுள்ள சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. குசல் பெரேரா அபாரமாக விளையாடி 46 பந்துகளில் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 4 சிக்ஸர்களும்,...
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் நடைபெற்றது. இதில் மகளிர் பிரிவில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.வைஷாலி வெண்கலப் பதக்கம் வென்றார். கால் இறுதி சுற்றில் வைஷாலி 2.5-1.5 என்ற கணக்கில் சீனாவின் சூ ஜினரை தோற்கடித்தார். இதையடுத்து நடைபெற்ற அரை இறுதி சுற்றில் மற்றொரு சீன வீராங்கனையான ஜு வென்ஜுனுடன் மோதினார் வைஷாலி.
இதில் வைஷாலி 0.5-2.5 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். அரை இறுதி...
டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா 907 புள்ளிகளை குவித்து முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார். இந்திய பந்துவீச்சாளர்களில் இதற்கு முன்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பரில் 904 புள்ளிகளை பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது. இதனை தற்போது பும்ரா முறியடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்பர்னில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக 904 புள்ளிகள் சேர்த்து அஸ்வினின்...
மான்செஸ்டர் கிளப் போட்டியை காண மங்கோலியாவில் இருந்து பிரிட்டனுக்கு சைக்கிளில் பயணித்த கால்பந்து ரசிகர்
admin - 0
இங்கிலாந்தில் நடைபெறும் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து போட்டிக்கு உலகளாவிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த போட்டிகளை காண வரும் ஆதரவாளர்கள் தங்களது அணிகளையும், நட்சத்திர வீரர்களையும் ஆதரிக்கும் விதமாக மைதான கேலரிகளில் பாடல்கள் மற்றும் கோஷங்களுடன் கலகலப்பான சூழ்நிலையை உருவாக்குவார்கள்.
போட்டி இல்லாத நாட்களில் கூட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிரீமியர் லீக் குறித்தும், கிளப்கள் இடையிலான வீரர்கள் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொள்வது வாடிக்கையாக...
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுபப்யணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட ஆலன் பார்டர் - கவாஸ்கர் டிராபிக்கான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை (3-ம் தேதி) தொடங்குகிறது.
இந்நிலையில் இந்தத் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து...
சென்னையை அடுத்த கவரைப்பேட்டை ஆர்எம்கே பள்ளியில் 30-வது தேசிய சப் ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் நடைபெற்றது. 27 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் ஆடவர் பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தமிழக அணி, கேரளாவை எதிர்த்து விளையாடியது. இதில் தமிழக அணி 29-18 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. அதிகபட்சமாக முகமது வஹித் 18 கோல்கள் செலுத்தினார்.
3-வது இடத்துக்கான ஆட்டத்தில் தெலங்கானா...
சென்னையை அடுத்த கவரைப்பேட்டை ஆர்எம்கே பள்ளியில் 30-வது தேசிய சப் ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் மகளிர் பிரிவில் தமிழக அணி, சத்தீஸ்கரை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் தமிழக அணி 25-22 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அரை இறுதி ஆட்டத்தில் தமிழக மகளிர் அணி, கேரளாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. ஆடவருக்கான கால் இறுதி ஆட்டத்தில் தமிழக அணி 32-29...
குஜராத் மாநிலம் சூரத்தில் ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சப்-ஜூனியர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த அரியானா ஓபராய், பேலன்ஸ் பீம் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதேவளையில் ஜூனியருக்கான பேலன்ஸ் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த ஓசியானா தாமஸ் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். இவர்களின் செயல் திறனால் இந்த தொடரில் தமிழக அணி பதக்க பட்டியலில் 8-வது இடத்துக்கு முன்னேறியது.
ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருதுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஜோ ரூட், ஹாரி புரூக் மற்றும் இலங்கையின் குஷால் மெண்டிஸ் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். பும்ரா இந்த காலண்டர் ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 71 விக்கெட்களை வேட்டையாடி உள்ளார்.
ஜோ ரூட் 17 டெஸ்டில் விளையாடி 55.57 சராசரியுடன் 1,556 ரன்கள் குவித்துள்ளார். இதில் 6 சதங்கள், 5...









