Google search engine
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 339 ரன்கள் குவித்தது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, யஷஸ்வி...
சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணிக்கு எதிராக நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் மஹ்முத் அபாரமாக பந்து வீசினார். அவர், இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா (6), ஷுப்மன் கில் (0), விராட் கோலி (6), ரிஷப் பந்த் (39) ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்து அசத்தினார். 24 வயதான ஹசன் மஹ்முத், தனது 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார்.சேப்பாக்கம்...
சேப்பாக்கம் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் 112 பந்துகளில், 10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 102 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 91.07 ஆகும். இந்திய அணி 144 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தவித்த நிலையில் ஜடேஜாவுடன் இணைந்து தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டு இந்திய அணியை சரிவில் இருந்து வலுவான நிலைக்கு கொண்டு வந்தார். முதல் நாள்...
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி உள்ளது ஆப்கானிஸ்தான் அணி. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற போட்டியில் அபார பந்து வீச்சின் மூலம் தென் ஆப்பிரிக்காவை 106 ரன்களில் ஆல் அவுட் செய்தது. ஷார்ஜாவில் உள்ள ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 33.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும்...
நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதம் விளாசி அணியை சரிவிலிருந்து மீட்டுள்ளார் இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ். 173 பந்துகளில் 114 ரன்களை எடுத்து அவர் அசத்தினார். நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று (புதன்கிழமை) கல்லே நகரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி...
95-வது அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டி சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நாளை (19-ம் தேதி) தொடங்குகிறது. வரும் 29-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியன் ரயில்வே, இந்திய ராணுவம், பாரத் பெட்ரோலியம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி‘ பிரிவில் கர்நாடகா,...
8-வது தெற்காசிய அட்யா பட்யா சாம்பியன்ஷிப் பூட்டானில் கடந்த செப்டம்பர் 13 முதல் 15-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா, பூட்டான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம், மியான்மர் ஆகிய 7 நாடுகள் பங்கேற்றன. இதில் ஆடவருக்கான இறுதிப் போட்டியில் இந்திய அணி 29-13,16-10 என்ற செட் கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அதேவேளையில் மகளிர் பிரிவில் இந்திய அணி 17-14, 15-9 என்ற செட்...
டைமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு 2-வது இடம் கிடைத்தது. முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டைமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி பெல்ஜியம் தலைநகரான பிரஸ்ஸல்ஸில் நேற்று முன்தினம் தொடங்கியது. உலகம் முழுவதும் 14 சுற்றாக நடத்தப்பட்ட போட்டியின் இறுதி சுற்று தற்போது பிரஸ்ஸல்ஸில் நடைபெற்று வருகிறது. இறுதிச்சுற்றுக்கு 2 இந்திய வீரர்கள் தகுதி பெற்றிருந்தனர். 3 ஆயிரம்...
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி யின் 4-வது சுற்றிலும் இந்திய ஆடவர் அணியினர் வெற்றி கண்டனர். 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ஆடவர் அணி நேற்று நடைபெற்ற 4-வது சுற்றில் செர்பியாவை எதிர் கொண்டது. முதல் ஆட்டத்தில் இந்திய வீரர் டி.குகேஷ் 85-வது காய் நகர்த்தலின் போது பிரட்கே அலெக்சாண்டரை வீழ்த்தினார். 2-வது ஆட்டத்தில் பிரக்ஞானந்தா, செர்பியா வீரர்...
இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் தொடரை வெல்வோம் என்று வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ நம்பிக்கை தெரிவித்தார்.இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி வரும் 19-ம் தேதி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக நேற்று வங்கதேச அணி வீரர்கள் சென்னை வந்தடைந்தனர்.முன்னதாக வங்கதேசத்திலிருந்து புறப்படும்போது டாக்காவில் செய்தியாளர்களிடம் வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஷான்டோ கூறியதாவது: இந்தியாவுக்கு...