ஐக்​கிய அரபு அமீகரத்​தில் புஜைரா நகரில் புஜைரா குளோபல் சூப்​பர் ஸ்டார்ஸ் செஸ் தொடர் நடை​பெற்​றது. இதில் உலக ஜூனியர் சாம்​பிய​னான இந்​தி​யா​வின் பிரணவ் வெங்​கடேஷ் 9-க்கு 7 புள்​ளி ​களை குவித்து முதலிடம் பிடித்து சாம்​பியன் பட்​டம் வென்​றார். பிரணவ் தனது கடைசி ஆட்​டத்​தில் ஸ்பெ​யின் கிராண்ட் மாஸ்​ட​ரான ஆலன் பிச்​சோட்​டுடன் மோதி​னார். வெள்ளை காய்​களு​டன் விளை​யாடிய பிரணவ் 54-வது நகர்த்​தலின் போது வெற்​றியை வசப்​படுத்​தி​னார். இந்​தத் தொடரில்...
ஆஷஸ் டெஸ்ட் தொடர், ஐபிஎல், இந்​தி​யா​வுக்கு எதி​ரான டெஸ்ட் தொடர், ஐசிசி ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை ஆகிய​வற்​றில் கவனம் செலுத்​தும் வகை​யில் சர்​வ​தேச டி 20 கிரிக்​கெட்​டில் இருந்து ஓய்வு பெறு​வ​தாக அறி​வித்​துள்​ளார் ஆஸ்​திரேலிய அணி​யின் முன்​னணி வேகப்​பந்து வீச்​சாள​ரான மிட்​செல் ஸ்டார்க். அபார வேகம், அற்​புத​மான ஸ்விங், பயமுறுத்​தும் யார்க்​கர்​கள், பவுன்​சர்​களுக்கு பெயர் பெற்ற மிட்​செல் ஸ்டார்க், டி 20 கிரிக்​கெட்​டில் 65 ஆட்​டங்​களில் விளை​யாடி 79...
புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் - ஜம்மு & காஷ்மீர் அணிகள் இடையிலான அரை இறுதி ஆட்டம் சிஎஸ்கே உயர் செயல் திறன் மையத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 180 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 503 ரன்கள் குவித்திருந்தது. நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன்...
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் அறிவித்துள்ளார். இதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுதி செய்துள்ளது. 35 வயதான ஸ்டார்க், கடந்த 2012-ல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் போட்டியில் விளையாடி இருந்தார். மொத்தம் 65 போட்டிகளில் விளையாடி, 79 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய...
தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், ஆறாவது முறையாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். 2006ல் முதன்முதலாக தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கிளார்க், தொடர் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதோடு தற்போது ஆறாவது முறையாக அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். 44 வயதாகும் அவர், இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் தளத்தில், “தோல் புற்றுநோய் பாதிப்பு ஆஸ்திரேலியாவில் அதிகம் உள்ளது. இன்று எனது மூக்கு பகுதியில் மற்றொரு...
2007-ல் டி20 உலகக் கோப்பை அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட எம்.எஸ்.தோனி. 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஐசிசி 50 ஒவர் உலகக் கோப்பை, பிறகு 2013 சாம்பியன்ஸ் டிராபி என்று மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாகத் திகழ்ந்தார். இன்று பணிச்சுமை பற்றி பேசுகிறோம். அப்போது கேப்டன்சி, பிரஸ் மீட், பயிற்சி, 3 வடிவங்களிலும் விக்கெட் கீப்பிங் என்று தோனி கடுமையான ஒரு ஷெட்யூலில் இருந்தார். ஐசிசி...
ஐபிஎல் தொடரை போன்று தென் ஆப்பிரிக்காவில் எஸ்ஏ20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 4-வது சீசன் வரும் டிசம்பர் 26-ல் தொடங்குகிறது. இந்நிலையில் இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சீசனில் கிரஹாம் ஃபோர்டு நீக்கப்பட்டு இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஜோனாதன் டிரோட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அணியின் செயல்திறனில் எதிர்பார்த்த...
மாநிலங்களுக்கு இடையேயான 64-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் தமிழகம் 11 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலப் பதக்கங்களுடன் 195 புள்ளிகளை குவித்து ஒட்டுமொத்த சாம்பியன் ஆனது. மேலும் ஆடவர் பிரிவில் 101 புள்ளிகளையும், மகளிர் பிரிவில் 90 புள்ளிகளையும் பெற்று அணிகள் பிரிவில் முதலிடம் பிடித்தது. 400 மீட்டர்...
கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான டிராப் பிரிவில் இந்தியாவின் நீரு தண்டா இறுதிப் போட்டியில் 43 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார். கத்தாரின் பாஸில் ரே 37 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், இந்தியாவின் ஆஷிமா அஹ்லாவத் 29 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் வென்றனர். மகளிருக்கான டிராப் அணிகள் பிரிவில் நீரு தண்டா, ஆஷிமா அஹ்லாவத், பிரீத்தி ரஜக் ஆகியோரை...
 ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான யுஎஸ் ஓபன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 7-ம் நிலை வீரரும் 4 முறை சாம்பியனுமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-1, 7-6 (7-3), 6-2 என்ற செட் கணக்கில் 19 வயதான அமெரிக்காவின் லர்னர் டியனை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 4-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர்...