ஹாக்கி இந்தியா அமைப்பு சார்பில் நடத்தப்படும் ஹாக்கி இந்தியா லீக்கின் 6-வது சீசன் போட்டிகள் வருகிற 28-ம் தேதி தொடங்குகிறது. 2025-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி வரை ஒடிசாவில் உள்ள ரூர்கேலா மற்றும் ராஞ்சியில் நடைபெறும் இந்தத் தொடரில் ஆடவர் பிரிவில் 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் சென்னையை மையமாக கொண்ட தமிழ்நாடு டிராகன்ஸ் அணி முதல் முறையாக பங்கேற்கிறது. இந்த அணியை சார்லஸ் குரூப்...
ஜூனியர் சூப்பர் கிங்ஸ் (ஜேஎஸ்கே) பள்ளிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடரின் 9-வது சீசன் வரும் டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியை ஈக்விடாஸ் நிறுவனம் மற்றும் சூப்பர் கிங்ஸ் அகாடமி இணைந்து நடத்துகின்றன. இந்தப் போட்டியில் தமிழகம் மற்றும் கோவா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 23 மாவட்டங்களில் இருந்து 108 பள்ளிகள் பங்கேற்கின்றன.
ஜேஎஸ்கே டி20 தொடர் இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்ட...
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
38 வயதான அஸ்வின், 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது வீரர் என்ற பெருமையுடன் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார். இந்த வகையில் அனில் கும்ப்ளே (619 விக்கெட்டுகள்) முதலிடத்தில் உள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 2011-ம் ஆண்டு...
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் இந்திய கிராண்ட் மாஸ்டரான தமிழகத்தைச் சேர்ந்த 18 வயதான டி.குகேஷ். இதன் மூலம் அவர், இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். மேலும் விஸ்வநாதன் ஆனந்த்துக்கு பிறகு உலக சாம்பியன் பட்டத்தை வென்ற 2-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார்.
உலக...
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி வீரர் ஷுப்மன் கில் ஆசியாவுக்கு வெளியே கடுமையாக சொதப்பி வருகிறார்.
ஒன் டவுன் அல்லது 3-ம் நிலையில் இறங்கும் பேட்டர் ஒரு முக்கியமான இணைவுப் புள்ளியாவார். ஒரு அணி 200 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தாலும், அடுத்து வரும் பேட்டர் அவுட்டானால், பெரிய சரிவு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. அதே போல் 0/1 என்று இருந்தாலும் ஒன் டவுன் பேட்டர் பொறுப்புடன் இன்னிங்ஸை கட்டமைக்க...
நியூஸிலாந்து - இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி 347 ரன்களும், இங்கிலாந்து 143 ரன்களும் எடுத்தன. 204 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 101.4 ஓவர்களில் 453 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 204 பந்துகளில்,...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸின் மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 51 ரன்களைச் சேர்த்துள்ளது. மழை குறுக்கிட்டதால் முன்கூட்டிய மூன்றாவது நாள் ஆட்டம் முடித்து வைக்கப்பட்டது.
இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் 2-வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று...
“செஸ் மிகவும் அழகான விளையாட்டு. அதை அழுத்தம் இல்லாமல் அணுக வேண்டும். இந்த வெற்றியோடு எதுவும் முடிந்துவிடவில்லை. இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. நீண்ட காலம் செஸ் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது” என்று உலக செஸ் சாம்பியன் டி.குகேஷ் கூறியுள்ளார்.
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் இன்று (டிச.16) சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு...
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று சென்னை திரும்பிய குகேஷுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் குகேஷுக்கு பாராட்டு விழா நடைபெறவுள்ளது.
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் இன்று (டிச.16) சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா...
பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் ஸ்மித், ஹெட் சதம்: ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 405 ரன்கள் குவிப்பு
admin - 0
இந்தியாவுக்கு எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 405 ரன்கள் குவித்துள்ளது. ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட் ஆகியோர் அபாரமாக விளையாடி சதம் விளாசினர். இந்திய அணியின் சார்பில் பும்ரா 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் 2-வது போட்டியில்...










