Google search engine
சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘நான் முதல்வன்’ திட்ட பயிற்சி முகாமில் பல்லி விழுந்த பயறு வழங்கியதாக பேராசிரியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த 6 நாள் பயிற்சி...
சந்தை போட்டியை சமாளிக்க முடியாமல் நெருக்கடியை சந்திக்கும் டிஎன்பிஎல் நிறுவனத்தை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விடுத்த அறிக்கை: உலகெங்கிலும் உள்ள கரும்புச் சக்கை அடிப்படையிலான காகித ஆலை உற்பத்தி நிறுவனங்களில் கரூர் மாவட்டம், புகளூரில் உள்ள தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் (டிஎன்பிஎல்) நிறுவனம்...
சிறுவன் கடத்தப்பட்ட விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ஏடிஜிபியை நீதிமன்றம் கைது செய்ய உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது, இப்படியொரு அதிகாரம் இருப்பதாக தங்களுக்குத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏடிஜிபியின் இடைநீக்கத்தை ரத்து செய்வது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்குமாறு உத்தரவி்ட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு களாம்பாக்கத்தைச் சேர்ந்த தனுஷ்(23), தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ(21) ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த பெண்...
முருகனின் அறுபடை வீடுகளில் பூஜை செய்து எடுத்து வரப்பட்ட வேல் மதுரையில் அமைக்கப் பட்டுள்ள மாதிரி அறுபடை வீடுகளில் பிரதிஷ்டை செய்யப் பட்டது. மதுரை பாண்டிகோயில் அருகே அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி மாநாட்டு வளாகத்தில் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் அமைக்கப்பட்டுள் ளன. இங்கு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. நீண்ட வரிசையில் காத்திருப்பு: மதுரையில்...
தாயுடன் பள்ளிக்குச் சென்ற, பள்ளி மாணவி ஸ்கூட்டரிலிருந்து தவறி விழுந்து, லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். கொளத்தூர், பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்தவர் யாமினி. இவரது 10 வயது மகள் சவுமியா புரசைவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். தனியார் நிறுவனத்தில் பணி செய்துவரும் யாமினி, வேலைக்கு போகும்போது ஸ்கூட்டரில் மகளை பள்ளியில் விட்டு செல்வது வழக்கம். நேற்று காலை பணிக்கு புறப்பட்ட யாமினி,...
 ‘முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ராக்கெட் வேகத்தில் இயங்கி வருகிறது. இது கம்பராமாயணம் போல கட்டுக்கதை அல்ல, நிதர்சனம்’ என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார். நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பாப்பாகோவில், குறிச்சி, பிரதாபராமபுரம், திருக்குவளை உள்ளிட்ட 7 ஊராட்சிகளில், மக்களுடன் முதல்வர் திட்ட 3-ம் கட்ட முகாம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை வகித்தார். உயர் கல்வித் துறை...
பாமகவின் சேலம், தருமபுரி மாவட்ட கூட்டங்களை அன்புமணி இன்று நடத்தவுள்ள நிலையில், அக்கட்சியின் எம்எல்ஏக்கள் ஜி.கே.மணி, இரா.அருள் ஆகியோர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் இருவரிடமும் சமாதானம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இருவருக்கும் இடையே இன்னும் சமரசம் ஏற்படவில்லை. இதற்கிடையில், அன்புமணிக்கு ஆதரவாக செயல்படும் கட்சி நிர்வாகிகளை, கட்சியில் இருந்து...
சாலையோரங்கள், பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடிக்கம்பங்களை ஜூலை 2-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்றும், அவ்வாறு அகற்றாத மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை கொடிக்குளத்தைச் சேர்ந்த அமாவாசை என்பவர் விளாங்குடி உள்ளிட்ட 2 இடங்களில் அதிமுக கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், பொது...
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், சரிந்தும் காணப்படுகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 5,825 கனஅடியாக இருந்த நீர் வரத்து, நேற்று 6,040 கனஅடியாக அதிகரித்தது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவானது நேற்று விநாடிக்கு 10,000 கன அடியிலிருந்து 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது....
தமிழ்​நாடு மற்​றும் புதுச்​சேரி​யில் 10 மற்​றும் 12ம் வகுப்பு தேர்​வில் தொகுதி வாரி​யாக சிறந்த மதிப்​பெண்​கள் பெற்று தேர்ச்​சி​யடைந்த மாணவ, மாணவி​களுக்​கு, தமிழக வெற்​றிக் கழகத்​தின் சார்​பில், கல்வி விருது வழங்​கும் விழா, இறுதி கட்​ட​மாக மாமல்​லபுரம் அருகே பூஞ்​சேரி​யில் உள்ள தனி​யார் நட்​சத்​திர விடு​தி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில், சிறந்த மதிப்​பெண்​கள் பெற்ற மாணவ, மாணவி​கள் தங்​களின் பெற்​றோர்​களு​டன் பங்​கேற்​றனர். நிகழ்ச்​சி​யில் தவெக.தலை​வர் விஜய் பங்​கேற்​றார். விழாவில், சேலம்...