மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 20,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று மாலை 13,332 கனஅடியாக நீர்வரத்து இருந்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 18,000 கனஅடியிலிருந்து 20,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் நேற்று 112.71 அடியாகவும், நீர் இருப்பு 82.31 டிஎம்சியாகவும் இருந்தது.
அதேபோல், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை...
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்றபோது அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ தரப்பில் சாட்சியங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி குற்றம்சாட்டப்பட்ட 15 பேரையும் விடுவித்து திண்டிவனம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
2006-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், திமுக கூட்டணியில் பாமக சார்பில் கருணாநிதி ஆகியோர் போட்டியிட்டனர். 08-05-2006 அன்று வாக்குப்பதிவு முடிந்ததும், திண்டிவனம்...
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கும்பாபிஷேக பணிக்கு வந்த அர்ச்சகர்கள் 4 பேர் மது அருந்திவிட்டு ஆபாச நடனமாடிய வீடியோ வெளியானது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட அர்ச்சகர்கள் மீது அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் வரும் ஜூலை 2-ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 16-ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு, கும்பாபிஷேகப்...
கண்காணிப்பு வளையத்துக்குள் சினிமா பிரபலங்கள்: போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் தீவிர விசாரணை
admin - 0
போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொரு நடிகரான கிருஷ்ணாவிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுஒருபுறம் இருக்க கண்காணிப்பு வளையத்துக்குள் சினிமா பிரபலங்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 23-ம் தேதி இரவு நுங்கம்பாக்கம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் 10 மணி நேர விசாரணைக்கு பிறகு எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் தயாளன் முன்னிலையில் ஆஜர்படுத்தி,...
கடந்த இரண்டு தேர்தல்களாக கிட்டத்தட்ட கோவை மாவட்டத்தின் அனைத்துத் தொகுதிகளையும் தன்வசப்படுத்தி வைத்திருக்கிறது அதிமுக கூட்டணி. அதை உடைக்க இம்முறை பலகணக்குகளைப் போட்டு வருகிறது திமுக. 2021-ல் கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியைக்கூட பெறமுடியாத திமுக கூட்டணி, மக்களவைத் தேர்தலிலும் உள்ளாட்சி தேர்தலிலும் கிட்டத்தட்ட நூற்றுக்கு நூறு வெற்றியை அள்ளியது. அதற்கும் காரணம், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தேர்தல் வியூகங்கள் எனச் சொல்லப்பட்டது. ஆனால், அதுமட்டுமே காரணமாக இருந்தால்...
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனக்கு தொடர்ச்சியாக இரண்டு தேர்தல்களில் வெற்றியைத் தேடித்தந்த சிவகாசி தொகுதியை விட்டுவிட்டு கடந்த முறை ராஜபாளையத்துக்கு மாறி தோற்றுப் போனார். இதையடுத்து, இந்தப் பழம் புளிக்கும் கதையாக இப்போது ராஜபாளையத்தை விட்டுவிட்டு மீண்டும் சிவகாசியில் போட்டியிட ஆயத்தமாகி வருகிறார்.
அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்து தன்னை விருதுநகர் மாவட்ட அதிமுக-வின் அடையாளமாக மாற்றிக் கொண்டவர்...
சென்னையில் நேற்று நடைபெற்ற விசிகவின் விருதுகள் வழங்கும் விழாவில், முன்னாள் துணைவேந்தர் கே.எஸ். சலம், நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட 7 பேருக்கு விசிக தலைவர் திருமாவளவன் விருதுகளை வழங்கி கவுரவித்தார். ஆண்டுதோறும் சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, சமூகம், அரசியல் உள்ளிட்ட தளங்களில் சிறப்பாக பணியாற்றிய ஆளுமைகளுக்கு விசிக சார்பில் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை, கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு,...
முருக பக்தர் மாநாட்டு தீர்மானத்துக்கும் அதிமுகவுக்கும் தொடர்பு கிடையாது: ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டம்
admin - 0
முருக பக்தர் மாநாட்டின் தீர்மானங்களுக்கும், அதிமுகவுக்கும் தொடர்பு இல்லை என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி.உதயகுமார் கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: முருக பக்தர்கள் மாநாட்டுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு ஏற்று, அதில் நாங்கள் கலந்து கொண்டோம். இதில் அரசியல் இல்லை. நீதிமன்றம் உறுதியாகன தீர்ப்பு வழங்கியது. எனவே, இந்த மாநாட்டில் அரசியல் இருக்காது என்ற நம்பிக்கையோடுதான் நாங்கள் கலந்துகொண்டோம். ஆனால், பெரியார், அண்ணா குறித்து அவதூறு...
திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்தின்போது தமிழில் மந்திரங்கள் ஓதப்படும்: நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
admin - 0
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தின்போது தமிழில் மந்திரங்கள் ஓதப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த வியனரசு, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 7-ம் தேதி நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தின்போது யாகசாலை, கருவறை, கோபுர விமான பூஜையில் தமிழில் மந்திரங்கள் ஓதுமாறு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள்...
வீரப்பனை பிடிக்க அதிரடிப்படைக்கு வழிகாட்டியாக சென்று கண்ணிவெடியில் சிக்கி இறந்தவர்களின் குடும்பம் வறுமையில் தவிப்பு
admin - 0
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்காக, அதிரடிப்படையினருடன் எஸ்பி. கோபாலகிருஷ்ணன், மேட்டூரை அடுத்த பாலாறு வனப்பகுதிக்கு 1993-ம் ஆண்டு ஏப். 9-ம் தேதி சென்றார். தங்களுக்கு வழிகாட்டுவதற்காக, இன்ஃபார்மர்களாக மேட்டூர் கிராமங்களைச் சேர்ந்த 16 பேர், தனது உதவியாளர் மேட்டூர் கிளமென்ஸ் உள்ளிட்டோரையும் எஸ்பி. கோபாலகிருஷ்ணன் உடன் அழைத்துச் சென்றார். அதிரடிப்படையினர் சென்ற வேன், பாலாறு அருகே சுரைக்காய் மடுவு என்ற இடத்தில் வீரப்பன் வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி வெடித்துசிதறியது.
இளம்...










