பரந்தூர் பசுமை வெளி விமான நிலையத்துக்கு நிலம் எடுக்கும் பணி தொடங்கியதைத் தொடர்ந்து 13 கிராம மக்கள் ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.
பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் எடுக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது. 19 பேரின் நிலங்கள் பரந்தூர் விமான நிலையத்துக்காக வழங்கப்பட்டுள்ளன. இந்த விமான நிலையத்துக்கான பணிகள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து,...
ஆளுநர் மாளிகை விழாவில் வழங்கிய கேடயங்களில் தவறான திருக்குறள்: திருத்தம் செய்ய அறிவுறுத்தல்
admin - 0
மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட கேடயங்களில் திருக்குறளை தவறாக அச்சிடப்பட்டதால் அவற்றை திரும்பப்பெற்று, திருத்தம் செய்து வழங்க ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கடந்த 13-ம் தேதி தேசிய மருத்துவர் தின விழா நடந்தது. சிறப்பாக சேவையாற்றிய 50 மருத்துவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கேடயங்களை வழங்கி கவுரவித்தார். அந்த கேடயங்களில் திருக்குறள் அச்சிடப்பட்டிருந்தது. அதுதான் தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
கேடயத்தில் இடம் பெற்றிருப்பது திருக்குறளே இல்லை என்று தமிழ்...
சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பிரிக்கவே விஜய்யை பாஜக களமிறக்குகிறது என்று சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு கூறினார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: நடிகர் விஜய்யின் தாயார் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர். இதனால், சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பிரிக்கவே விஜய்யை பாஜககளமிறக்குகிறது. விஜய் வீட்டில் நடைபெற்ற வருமான வரிசோதனை குறித்து இதுவரை சரியான தகவல்கள் வெளியிடவில்லை.
வருமான வரித்துறை அதிகாரியாக இருந்த அருண்ராஜுக்கு, தவெக கட்சியில் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் சம்பவத்தில்...
காரைக்குடி திமுக மேயர் முத்துத்துரைக்கு எதிராக திமுக துணை மேயரே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர கடிதம் கொடுத்திருப்பதால் சிவகங்கை மாவட்ட திமுக-வும் கிறுகிறுத்துக் கிடக்கிறது.
அண்மையில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட காரைக்குடி மாநகராட்சியில் திமுக-வைச் சேர்ந்த முத்துத்துரை மேயராகவும், மாநகர திமுக செயலாளர் குணசேகரன் துணை மேயராகவும் இருக்கிறார்கள். ஏற்கெனவே, சேர்மனாக இருந்த அனுபவம் கொண்டவர் என்பதால் முத்துத்துரை யாருக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை ‘கணக்காக’ செய்து...
மகனால் தான் மா.செ பதவியை பறிகொடுத்தாரா கல்யாணசுந்தரம்? – தஞ்சை வடக்கு மாவட்ட திமுக சலசலப்பு!
admin - 0
மக்களைத் தேடி கழகத்தினரைப் போகச் சொல்லிவிட்டு இன்னொரு பக்கம், கட்சிக்கும் ஆட்சிக்கும் தொல்லையாக இருக்கும் நிர்வாகிகளை களையெடுக்கும் வேலைகளையும் வேகப்படுத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அப்படித்தான் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த மாநிலங்களவை எம்பி-யான கல்யாணசுந்தரத்தை கழற்றிவிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
அண்மைக்காலமாக பொது இடங்களில், ‘பொன்முடி ஸ்டைலில்’ எடக்கு மடக்காக பேசி எரிச்சலை உண்டாக்கினார் பெரியவர் கல்யாணசுந்தரம். இது சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையான நிலையில், கல்யாணசுந்தரத்தால் அழுத்திவைக்கப்பட்ட...
திருப்பரங்குன்றம் வழக்கில் 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியிருப்பதால் 3-வது நீதிபதியின் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக ஆர்.விஜயகுமார் நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதி ஆர்.விஜயகுமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, “2 நீதிபதிகளும் தள்ளு படி செய்த மனுக்களும், ஒரே மாதிரியான உத்தரவு பிறப்பித்த மனுக்களும் விசாரணைக்கு எடுக்கப்படாது. 2 நீதிபதிகளும் முரண்பட்டு தீர்ப்பளித்த (சோலைக்கண்ணன், ராமலிங்கம்,...
சென்னையில் 6 இடங்களில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் இன்று நடைபெறுகின்றன. தமிழகத்தில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கும் வகையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (15-ம் தேதி) தொடங்கி வைக்கிறார்.
இதையொட்டி, தமிழகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள 10 ஆயிரம் முகாம்களையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின்...
நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், மாநில சமரச தீர்வு மையம் சார்பில் உயர் நீதிமன்ற வளாகத்தில் பிரச்சார விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு சமரச தீர்வு மையம் செயல்படுகிறது.
உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை வீண் தாமதம், வீண் செலவுகள் இல்லாமல் சுமுகமாக தீர்க்க இந்த மையம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் செயல்பாடுகள் குறித்து மக்கள்...
‘அரசியலில் அப்பா - மகன் உறவு மிக முக்கியம், அப்பா பேச்சை கேட்காத மகன் என்கிற பெயரை வாங்கி விடக்கூடாது’ என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
திருச்சி திருவெறும்பூர் திமுக முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன் இல்ல திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது: இந்த திருமணத்தில் மணமகளுக்கு இரண்டு முடிச்சுதான் போட வேண்டும் என தாய் கூறியதைக் கேட்காமல் மணமகன் மூன்று முடிச்சு...
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், முதல்வராக காமராஜர் பள்ளிகளில் அறிமுகம் செய்த மதிய உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் போற்றியுள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், “அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்!
நல்லவேளை, “பள்ளியில் கல்விதான் கொடுக்க வேண்டும்; சோறு போட அது என்ன ஹோட்டலா?” என்று அதிமேதாவியாய்ப் பேசும் அறிவுக்கொழுந்துகள் இல்லை...







