அரசு மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை சுதந்திர தினத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு அரசு மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் பல்வேறு சுகாதார குறியீடுகளில் தமிழக சுகாதாரத் துறை முன்னணியில் உள்ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 8-வது முறையாக சிறந்த மாநிலம் என்ற விருதை பெற்று தமிழகம்...
தமிழ்நாடு மணல் கழகம் அமைக்க கோரிய இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
admin - 0
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஆறுகள், அரசு நிலங்கள் மற்றும் ரயத்துவாரி நிலங்களில் சட்டவிரோதக் குவாரிகள் மூலம் விதிகளை மீறி உவர், சவடு, கிராவல் மணல் அள்ளப்படுகிறது. இதனால் இயற்கை வளம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
வைகை, காவிரி, பாலாற்றில் மணல் அள்ளியதால் இயற்கை நீரோட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாசனக் கண்மாய்களுக்கு தண்ணீர் சென்றடையவில்லை. நிலத்தடி...
சர்வாதிகார ஆட்சி நடத்த பாஜக அரசு திட்டம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் குற்றச்சாட்டு
admin - 0
சர்வாதிகார ஆட்சி நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் கூறினார். நாகூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மத்தியில் ஆளும் பாஜக அரசு அரசியல் சாசனத்துக்கு அப்பாற்பட்டு ஆட்சி செய்து வருகிறது.
வாக்காளர் பட்டியலை ஆண்டுக்கு 3 அல்லது 4 முறை மட்டுமே திருத்துவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு உரிமை உள்ளது. ஆனால், சட்டத்தில் இல்லாத சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல்...
பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்காத நிலையில் 10-வது நாளாக நேற்றும் ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு விட்டதை கண்டித்தும், பணி நிரந்தரம் கோரியும், ஏற்கெனவே என்யூஎல்எம் திட்டம் மூலம் வழங்கப்பட்ட தூய்மைப் பணியை தொடர வலியுறுத்தியும் தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு, இரவு, பகலாக அங்கேயே தங்கி, நேற்றும் 10வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதுவரை...
“தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பாஜக மாற்றிவிட்டது.” என்று சாடியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும், வாக்குத் திருட்டுக்கு எதிராக ராகுல் காந்தி முன்னெடுக்கும் போராட்டுத்துக்கு திமுக தோளோடு தோள் கொடுக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில், “தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பாஜக மாற்றிவிட்டது. பெங்களூரு மஹாதேவபுரா தொகுதியில் நடந்தது ஏதோ நிர்வாகத் தவறு அல்ல. அது, வாக்கு...
குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: திருவேற்காடு நகராட்சி ஆணையர் ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு
admin - 0
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிகளை மீறி குடியிருப்புப் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கில், திருவேற்காடு நகராட்சி ஆணையர் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவேற்காடு கோலடி கிராமத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் எம்.காமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா, நீதிபதி சுந்தர்...
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் கேம் டெவலப்பர், ஆர்டிஸ்ட் மற்றும் புரோகிராமர் திறன் பயிற்சிக்காக கூகுள், யூனிட்டி நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இடையே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘நான் முதல்வன்’ திட்டத்தில், ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் திறன்சார்ந்த பயிற்சிகள் பெற்று வருகின்றனர். மேலும் தமிழக மாணவர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில்...
திருநெல்வேலியில் ஐடி ஊழியர் சாதிய படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாளையங்கோட்டையில் ஐடி ஊழியர்கவின் சாதிய படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து விசிக தலைவர் திருமாவளவன் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த கொடூர சாதிய கொலைக்கு உடந்தையாக இருந்த பெண்ணின் பெற்றோரை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர்களை காவல் துறை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும்.
மேலும் இவ்வழக்கை...
நீதிபதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர துடிப்பது கண்டிக்கத்தக்கது: எழுத்தாளர் தர்மன் கருத்து
admin - 0
சுதந்திரமாகச் செயல்பட்டுவரும் நீதிபதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத் துடிப்பது கண்டிக்கத்தக்கது என்று எழுத்தாளர் சோ.தர்மன் கூறியுள்ளார்.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதற்காக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வு பரிந்துரை செய்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக எழுத்தாளர் சோ.தர்மன், அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்...
குற்றம்சாட்டப்பட்ட 2,000 பேரிடமும் விசாரித்தால் செந்தில் பாலாஜி மீதான விசாரணை வாழ்நாள் முழுவதும் முடிவுக்கு வராது: உச்ச நீதிமன்றம்
admin - 0
போக்குவரத்துத் துறையில் வேலைவாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வாழ்நாள் முழுவதும் இந்த விசாரணை முடிவுக்கு வராது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
போக்குவரத்து துறையில் வேலைக்கு பணம் பெற்ற விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஒய்.பாலாஜி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு...







