தேவாலயத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் தேசிய கீதம் மெட்டில் கிறிஸ்தவ பாடல் ஒலிபரப்பு? – குமரி போலீஸார் தீவிர விசாரணை
admin - 0
தேசிய கீதம் மெட்டில் கிறிஸ்தவ மதப் பிரச்சாரப் பாடல் ஒலிபரப்பானதாக வெளியான வீடியோ தொடர்பாக அதன் உண்மைத் தன்மை குறித்து குமரி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சுதந்திரதினம், குடியரசு தினத்தன்று தேசியக் கொடி ஏற்றுவது வழக்கம். அவற்றில் சிஎஸ்ஐ உட்பட சில பிரிவு ஆலயங்களில் தேசியகீதத்துக்குப் பதிலாக, அதே மெட்டில் கிறிஸ்தவப் பாடலை பாடுவது, ஒலிபரப்புவதாகக் கூறப்படுகிறது.
அண்மையில்...
முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாள் விழா செப். 15-ம் தேதி காஞ்சிபுரத்தில் மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலைமையில் நடைபெற உள்ளது. இவ்விழா தொடர்பாக சென்னை மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம், நேற்று திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கு, கட்சி நிர்வாகிகள் சால்வை, வீரவாள் வழங்கினர். இந்த...
துணை ஜனாதிபதி தேர்தலில், என்டிஏ கூட்டணி வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிவித்திருப்பதன் மூலம் திமுக-வுக்கும் அக்னிப் பரீட்சை வைத்திருக்கிறது பாஜக.
பாஜக உடன் கூட்டணி வைக்கவே மாட்டோம் என முறுக்கிக் கொண்டு நின்ற அதிமுக-வை அதிரடியாக ‘வழிக்கு’ கொண்டு வந்து, முதல் கோல் அடித்தார் மத்திய அமைச்சர் அமித் ஷா. இந்த இணைப்புக்காக, துடிப்பான தங்களது மாநிலத் தலைவர் அண்ணாமலையைக் கூட பதவியை விட்டு...
வந்தவர்கள் வளமாக… வளர்த்தவர்கள் ஓரமாக! – கோவை திமுகவில் கோஷ்டி சேர்க்கிறாரா செந்தில் பாலாஜி?
admin - 0
2021 தேர்தலில் தென் மாவட்டங்களில் திமுக கூட்டணி சுழற்றியதைப் போல கொங்கு மண்டலத்தின் பெருவாரியான தொகுதிகளை அதிமுக கூட்டணி வளைத்தது. அதிலும் கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளையும் வென்றெடுத்தது. ஆனால், இந்த முறை அப்படி விட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் முதல்வர் ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே கோவையை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
கோவைக்கென சிறப்புத் திட்டங்களை அறிவித்த முதல்வர், கோவை...
ஒரு சூரியன், ஒரு சந்திரன் என்பது போல ஒரு எம்ஜிஆர், ஒரு ஜெயலலிதா, ஒரு கருணாநிதி, ஒரு விஜயகாந்த் தான் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார். தேமுதிக பொருளாளரும், பிரேமலதாவின் சகோதரருமான எல்.கே.சுதீஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் பிரேமலதா இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை தொடர்ந்து அதிமுக கூட்டணிக்கு தேமுதிக செல்லப் போகிறதா என்ற விவாதங்கள் எழுந்தன. இந்நிலையில், முன்னாள்...
‘திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என அழைக்க என்ன ஆதாரம் உள்ளது?’ என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடவும், அசைவ உணவு பரிமாறவும் தடை விதிக்கக் கோரிய வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் இந்த வழக்குகள் 3-வது நீதிபதி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரித்து வருகிறார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, “திருப்பரங்குன்றம்...
சென்னை அருகே பெரும்பாக்கத்தில் புதிதாக 135 மின்சார ஏசி பேருந்துகள் சேவையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் முதன்முறையாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.208 கோடி மதிப்பில் 120 புதிய தாழ்தள மின்சார பேருந்துகளின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து ரூ.233 கோடி மதிப்பீட்டில் 55 மின்சார...
‘தமிழகத்தில் கஞ்சாவும் உற்பத்தியாகவில்லை, சாராயமும் காய்ச்சவில்லை. வெளி மாநிலங்களில் இருந்து வரும் அவற்றை மத்திய அரசுதான் தடுக்க வேண்டும்’ என அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
இதுதொடர்பாக, புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பிஹார் மாநில வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான பிரச்சினை உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் தவறு செய்தால், உச்ச நீதிமன்றம் செல்வோம்.
தமிழகத்தில் கஞ்சாவும் உற்பத்தியாகவில்லை, சாராயமும் காய்ச்சவில்லை. வெளி...
பருவதமலையில் இருந்து கீழே இறங்கியபோது வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 2 பெண்களின் உடல்கள் மீட்பு
admin - 0
சென்னையில் இருந்து ஆன்மிகச் சுற்றுலா சென்ற குழுவினர் பருவதமலையில் இருந்து கீழே இறங்கியபோது, மழை வெள்ளத்தில் சிக்கி 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவ மங்கலம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மல்லிகார்ஜுனர் மற்றும் பிரம்மாம்பிகை கோயில் 4,560 அடி உயரமுள்ள பருவத மலையில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு நேற்று முன்தினம் அதிகாலை சென்னை திருவேற்காடு பகுதியிலிருந்து 15 பேர் வாகனத்தில் வந்துள்ளனர்.
இவர்கள்,...
கேப்டனின் தொகுதியில் பிரேமலதா போட்டியிட்டால் ஜெயிக்க வைப்பீர்களா? – மகனே கேட்டதால் மகிழ்ந்து நிற்கும் தேமுதிக!
admin - 0
தேமுதிக தலைவர் விஜயகாந்த் 2006-ல் முதன்முதலில் போட்டியிட்டு வென்ற தொகுதி விருத்தாசலம், பாமக-வுக்கு செல்வாக்கான இந்தத் தொகுதியில் கேப்டன் தனித்துப் போட்டியிட்டு வென்றதால் தேர்தலுக்கு தேர்தல் இந்தத் தொகுதி தனித்த கவனத்தைப் பெற்று வருகிறது. அதுபோல இந்தத் தொகுதி மீதான தேர்தல் கணிப்புகள் இந்தத் தேர்தலுக்கும் இப்போதே பரபரக்க ஆரம்பித்துவிட்டன.
தொகுதிப் பங்கீட்டில் மதிமுக-வுடன் மனஸ்தாபம் ஏற்பட்டால் அந்தக் கட்சிக்குப் பதிலாக தேமுதிக-வை திமுக கூட்டணிக்குள் இழுத்துப் போடும் ஆயத்த...









