2 ஆண்டுகள் ஆகியும் திறக்காமல் கிடக்கும் தென்காசி ஆட்சியர் அலுவலகம்! – ஆண்ட கட்சியும் ஆளும் கட்சியும் மாறி மாறி குற்றச்சாட்டு
admin - 0
“அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டிமுடிக்கப்பட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை கத்தரிக்கோலால் ரிப்பன் வெட்டி திறந்து வைக்க ஸ்டாலினுக்கு கை வலிக்கிறதா?” - அண்மையில் தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் இப்படியொரு கேள்வியை எழுப்பினார்.
நெல்லை மாவட்டத்திலிருந்து 2019-ல் தென்காசி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து தென்காசியில் புதிதாக கட்டிமுடிக் கப்பட்ட ஆட்சியர் அலுவலகம் 2 ஆண்டுகளாக திறக்கமுடியாமல் கிடப்பதைத்தான் இப்படி காட்டமாக...
இன்று சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சென்னை நகரின் சிறப்பை போற்றும் வகையில் எக்ஸ் சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
“எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து, வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து, பல பெண்களுக்குப் பறக்கச் சிறகுகளை அளித்து, எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து, சொந்த ஊரில் அடையாளத்தை அளித்து, மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சென்னைக்கு அகவை 386!
சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின்...
மேட்டூர் அணை நடப்பாண்டில் 5-வது முறையாக நிரம்பியது. நீர் வரத்து அதிகமாக இருப்பதால், அணையில் இருந்து விநாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை தொடர்கிறது.
நடப்பாண்டில் முதல்முறையாக, ஜூன் 29-ல் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியை எட்டி, நிரம்பியது. டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி முதல் தொடர்ந்து...
சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், தூய்மைப் பணியாளர்கள் கடைசியாக வாங்கிய சம்பளத்தை குறைக்காமல் வழங்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
சென்னை மாநகராட்சியின் 5, 6-வது மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் வகையில் மாநகராட்சியில் கடந்த ஜூன் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தூய்மைப் பணிக்கான ஒப்பந்தத்தை தனியாருக்கு...
கூத்தாநல்லூர் அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையை கவ்விச் சென்று கடித்துக் குதறிய தெரு நாய், காப்பாற்றச் சென்ற பாட்டி யையும் கடித்தது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகேயுள்ள மேல்கொண்டாழி கிராமத்தைச் சேர்ந்தவர் அபுதாகிர். வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுல்தான்பீவி(26). இவர்களுக்கு அஜ்மல் பாஷா என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது.
சுல்தான் பீவி, தனது தாய் மல்லிகா பீவி(44) மற்றும் குழந்தை அஜ்மல்...
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 1996 காலியிடங்களுக்கு 2 லட்சத்து 36 ஆயிரத்து 390 பேர் போட்டியிடுகின்றனர். இதற்கான எழுத்துத் தேர்வு அக்டோபர் 12-ம் தேதி நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1), கணினி பயிற்றுநர் (கிரேடு-1) ஆகிய பதவிகளில் 1996 காலிப்பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் நிரப்பும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை 10-ம் தேதி அன்று...
திமுக சேர்மனுக்கு ஓட்டுப் போட்ட அதிமுக கவுன்சிலர்கள்! – பேசி வளைத்தார்களா… பேமென்ட் கொடுத்தார்களா?
admin - 0
சுட்டுப் போட்டாலும் திமுக-வினருடன் அதிமுக-வினர் கை கோக்க மாட்டார்கள் என்பார்கள். ஆனால், எழுதப்படாத அந்த விதியை பொய்யாக்கி இருக்கிறார்கள் சங்கரன்கோவில் நகராட்சி அதிமுக கவுன்சிலர்கள்.
சங்கரன்கோவில் நகராட்சியில் தனிப்பெரும் கட்சியாக 12 வார்டுகளை வென்றது அதிமுக. இருந்த போதும், 9 வார்டுகளில் மட்டுமே வென்றிருந்த திமுக, கூட்டணி தோழர்களின் ஆதரவுடன் சேர்மன் பதவியைக் கைப்பற்றியது. உமா மகேஸ்வரி சேர்மனானார். ஆனால், வெகு சீக்கிரத்திலேயே சொந்தக் கட்சியினரே உமா மகேஸ்வரிக்கு எதிராக...
திருச்செந்தூர் நவம்பரில் 1980 சுப்பிரமணிய சுவாமி கோயில் அறநிலையத் துறை அதிகாரியாக இருந்த சுப்பிரமணிய பிள்ளை மர்மமான முறையில் இறந்து போனார். இதை கொலை என்று சொல்லி, 1982 பிப்ரவரியில் மதுரையிலிருந்து திருச்செந்தூருக்கு நீதி கேட்டு நெடும்பயணம் போனார் அன்றைய எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதி. நடைபயணத்தில் அவரது காலில் கொப்புளங்கள் ஏற்பட்டதாகக் கேள்விப்பட்ட அன்றைய முதலமைச்சர் எம்ஜிஆர், கருணாநிதியை போனில் அழைத்து நலம் விசாரித்தார்.
அத்தோடில்லாமல் தனது நண்பருக்கு உதவியாக...
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், மோசமான வானிலை நிலவுவதால், மும்பையில் இருந்து நேற்று மாலை 5.35 மணிக்கு சென்னைக்கு வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது.
அதேபோல், சென்னையில் இருந்து நேற்று மாலை 6.20 மணிக்கு மும்பைக்கு புறப்பட்டு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மும்பை - சென்னை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மும்பை - சென்னை...
மதுரை பாரப்பத்தியில் நாளை நடக்கும் விஜய் கட்சியின் மாநில மாநாட்டுக்கான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. மாநாட்டு திடல் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மதுரை-தூத்துக்குடி சாலையில் உள்ள பாரப்பத்தியில் தவெகவின் 2-வது மாநில மாநாடு நாளை (ஆக.21) நடக்கிறது.
சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் எல்இடி திரைகளுடன் கூடிய டிஜிட்டல் வடிவிலான மேடை, பார்வையாளர் கேலரிகள், வாகன பார்க்கிங், மாநாட்டு திடலை சுற்றிலும் கட்சிக் கொடி, தோரணங்கள், பதாகைகள், தற்காலிக...










