போலி ஆவணங்கள் மூலம், 10 கோடியே 54 லட்சம் ரூபாய் வங்கிக் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில், ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையில் ஜி.வி.பிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தவர் ஜி.வெங்கடேஸ்வரன். இவர், இயக்குனர் மணி ரத்னத்தின் சகோதரர். கடந்த 1988 முதல் 1992ம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில்...
ரசிகரை பவுன்சர்கள் தூக்கி வீசிய விவகாரம்: விஜய் மீதான வழக்கு மதுரை கூடக்கோவில் காவல் நிலையத்துக்கு மாற்றம்
admin - 0
விஜய் கட்சி மாநாட்டில் ரசிகரை பவுன்சர்கள் தூக்கி வீசிய விவகாரத்தில் விஜய் உள்ளிட்டோர் மீது குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு மதுரை கூட கோவில் காவல் நிலையத்திற்கு மாற்றப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் கடந்த 21-ம் தேதி நடந்தது. இந்த மாநாட்டில் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய்யை பார்க்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் மதுரை வந்தனர். இந்த...
நடிகை ஸ்ரீதேவியின் சொத்துக்கு மோசடி வாரிசு சான்றிதழ் மூலமாக 3 பேர் உரிமை கோருவதாக போனி கபூர் வழக்கு
admin - 0
நடிகை ஸ்ரீதேவி வாங்கிய சொத்துக்கு மோசடியான வாரிசு சான்றிதழ் மூலமாக 3 பேர் உரிமை கோருவதாக திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தாம்பரம் வட்டாட்சியர் விசாரித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் போனி கபூர் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது மனைவியும், நடிகையுமான மறைந்த ஸ்ரீதேவி, கடந்த...
விஜய்க்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மோடிக்கு கொடுக்காத ரங்கசாமி! – தத்தளிப்பில் புதுச்சேரி என்டிஏ கூட்டணி
admin - 0
தமிழகத்தில் தேர்தல் கூட்டணிகள் தொடர்பாக பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வரும் நிலையில், பக்கத்தில் உள்ள புதுச்சேரியில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து எந்த அரவமும் இல்லாமல் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக, ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முதல்வருமான ரங்கசாமி எந்தப் பக்கம் போவது என்று தெரியாமல் வழக்கமான ‘மவுனத்தில்’ இருக்கிறார்.
ரங்கசாமியை கைக்குள் வைத்துக் கொண்டு இம்முறையும் புதுச்சேரியில் கூட்டணி ஆட்சியை தக்கவைத்துவிட வேண்டும் என கணக்குப் போடுகிறது...
புதுக்கோட்டை மாவட்ட திமுக-வில் அமைச்சர்கள் ரகுபதியும் சிவ.வீ.மெய்யநாதனும் அசைக்கமுடியாத சக்தியாக இருப்பவர்கள். இதில், ரகுபதி புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருப்பதால் கூடுதல் அதிகாரத்துடன் கோலோச்சி வருகிறார். இதனால் அவரது மாவட்டத்துக்கு உட்பட்ட ஆலங்குடி தொகுதியின் எம்எல்ஏ-வான அமைச்சர் மெய்யநாதனை ரகுபதி தரப்பு திட்டமிட்டு புறக்கணித்து வருவதாகச் சொல்கிறார்கள்.
மாவட்ட திமுக சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் மெய்யநாதனின் பெயரும் படமும் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்படுவதாக நீண்ட காலமாகவே புகைச்சல்...
முதல்வரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முன்னிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.26) தொடங்கி வைத்தார்.
சென்னை - மயிலாப்பூர், புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர்...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு இரவில் திடீரென மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால், நந்தனம் தனியார் மருத்துவமனையிலிருந்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். மருத்துவர்கள் குழுவினர் அவரது உடல்நிலையைக் கண்காணித்து தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு. கடந்த 22-ம் தேதி வீட்டில் தவறி கீழே விழுந்ததில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்...
நாமக்கல் சிறுநீரக திருட்டு புகார் எதிரொலி: உடல் உறுப்பு மாற்று ஒப்புதல் குழுவை கலைக்க தமிழக அரசு முடிவு
admin - 0
நாமக்கல் சிறுநீரக திருட்டு புகாரையடுத்து, தற்போதுள்ள உடல் உறுப்பு மாற்று ஒப்புதல் குழுவை கலைத்துவிட்டு, புதிய குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. பரமக்குடியைச் சேர்ந்த சத்தீஸ்வரன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் விசைத்தறித் தொழிலாளர்கள், ஏழை தொழிலாளர்களின் சிறுநீரகங்கள் திருடப்பட்டுள்ளன.
இருப்பினும் சிறுநீரகத் திருட்டு தொடர்பாக தமிழக அரசு இதுவரை எந்த...
சாலைகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர தடுப்புகளை அகற்றக் கோரி வழக்கு: நெடுஞ்சாலை துறை பதில் அளிக்க உத்தரவு
admin - 0
தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் தனியார் விளம்பரங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்புகளை (பேரிகேட்) அகற்றக் கோரிய வழக்கில், மத்திய, மாநில நெடுஞ்சாலைத் துறைகள் பதில் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த அழகேசன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகி உள்ளது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய எந்த...
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை பரவலாக நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பதிவானது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
இன்று அதிகாலை முதல் இடி மின்னலுடன் சென்னையில் மழை தொடங்கியது. வடபழனி, பல்லாவரம், அண்ணா நகர், மந்தைவெளி, ஆதம்பாக்கம், அசோக் நகர், தியாகராய நகர், கிண்டி, நுங்கம்பாக்கம், அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர், நங்கநல்லூர், ஆலந்தூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பதிவானது.
இதில் பெரும்பாலான இடங்களில்...










