Google search engine
கட்சியின் கீழ்மட்டத்தில் நடக்கும் உள்ளடிகள் அவ்வளவாக தலைமைக் கழகங்களை எட்டிவிடாது. அதனால் மாவட்டச் செயலாளர்கள், மாண்புமிகுக்களால் பாதிக்கப்பட்டுக் கிடப்பவர்கள் 'என்னத்த சொல்ல... எங்க போய்ச் சொல்ல' என்று மனக்குமுறலைக் கொட்டி பரிகாரம் தேட வழிதெரியாமல் உட்கார்ந்திருப்பார்கள். அப்படி இருப்பவர்களை ஆறுதல்படுத்துவதற்காகவே 'கழக' கட்சி தரப்பில் மாவட்ட வாரியாக, 'உடன்பிறவா' சகோதரர்களை அழைத்துப் பேசிக் கொண்டிருக்கிறார் தலைவர். இதுவரை சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட தொகுதிகளைச் சார்ந்த சகோக்களிடம் ஆராய்ச்சி மணி கட்டாத...
கரூர் சம்பவத்தில் இத்தனை நாளும் விஜய் மீது பழி சுமத்தாமல் பொதுவாகப் பேசி வந்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திடீரென விஜய் மீது பாய ஆரம்பித்திருக்கிறார். கூடவே, இபிஎஸ்ஸையும் சேர்த்துச் சாடுகிறார். அவரது இந்த திடீர் பாய்ச்சலுக்கும் காரணம், தவெக உடனான தனது கூட்டணிக் கனவு சிதைந்து விடுமோ என்ற ஆதங்கம் தான் என்கிறார்கள். "கரூர் சம்பவத்துக்கு விஜய் தார்மிக பொறுப்பேற்றிருக்க வேண்டும். அது குற்றத்தை ஏற்பது ஆகாது. இதில்...
சென்னையில் 6 வயது சிறுமி ஹாசினி எரித்​துக் கொல்​லப்​பட்ட வழக்​கில் குற்​ற​வாளி தஷ்வந்​துக்கு விதிக்​கப்​பட்ட தூக்கு தண்​டனையை ரத்து செய்​தும், அவரை விடு​வித்​தும் தீர்ப்​பளித்​துள்ள உச்ச நீதி​மன்​றம் இந்த வழக்​கில் அரசு தரப்பு குற்​றச்​சாட்டை சந்​தேகத்​துக்​கிட​மின்றி நிரூபிக்க தவறி​யுள்​ள​தாக கருத்து தெரி​வித்​துள்​ளது. சென்னை போரூரை அடுத்த மதனந்​த​புரம் பகு​தி​யைச் சேர்ந்த பாபு மற்​றும் ஸ்ரீதேவி தம்​ப​தி​யின் 6 வயது மகள் ஹாசினி. இவர் கடந்த 2017 பி்ப்​.5-ம் தேதி திடீரென...
தமிழகத்தை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்பதற்காக அதிமுக துணையுடன், தற்போது புதிய கட்சிகளை பாஜக தேடிக் கொண்டிருக்கிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி திமுக நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம், திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்தார். கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாது: மத்திய பாஜக அரசு திமுகவை வீழ்த்த பல்வேறு...
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தவெக தலைவர் விஜய்யை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக தலைவர் விஜய் கடந்த செப்.27-ம் தேதி கரூரில் மேற்கொண்ட பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்வம் தொடர்பாக விசாரிக்க முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை முதல்வர் ஸ்டாலின் அமைத்துள்ளார். உயிரிழந்தோர் அனைவருக்கும் அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி...
மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்து சாப்பிட்டதால் குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், அந்த இரு​மல் மருந்தை தயாரித்த தனியார் மருந்து ஆலையின் உரிமையாளரான ரங்கநாதன் கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரம் அருகே சுங்குவார்ச்சத்திரத்தில் அவரது மருந்து ஆலை உள்ளது. தமிழக போலீஸாரின் உதவியுடன் மத்திய பிரதேச மாநில போலீஸார் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். தற்போது, ரங்கநாதனிடம் மத்தியப் பிரதேச போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, தமிழக அரசு...
முதல்வருக்கு தெரியாமலேயே அவருக்குப் பக்கத்தில் இருக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆர்எஸ்எஸ் தொடர்புடன் விஜய்யை வளர்த்துவிட நினைக்கிறார்கள். முதல்வர் இதிலுள்ள சதியைப் புரிந்துகொண்டு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்றெல்லாம் விஜய்க்கு எதிராக வீரிய விமர்சனங்களை எடுத்துவைத்திருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் ‘இந்து தமிழ் திசைக்கு’ அளித்த பிரத்யேகப் பேட்டி. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்ச்சி எப்படி இருக்கிறது? தினமும் தமிழகத்தின் பல முனைகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் எங்கள் கட்சியில்...
வெளி​மாநிலக் குழந்​தைகள் உயி​ரிழந்த விவ​காரம் தொடர்​பாக சுங்​கு​வார் சத்​திரம் மருந்து ஆலைக்கு நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது. காஞ்​சிபுரம் மாவட்​டம், ஸ்ரீபெரும்​புதூர் அருகே சுங்​கு​வார்​சத்​திரத்​தில் இயங்கி வரும் தனி​யார் மருந்து உற்பத்தி ஆலையில் தயாரிக்​கப்​பட்ட இரு​மல் மருந்தை உட்​கொண்​ட​தால் வெளி​மாநிலக் குழந்​தைகள் உயி​ரிழந்​த​தாகக் குற்​றச்​சாட்​டு​கள் எழுந்த நிலை​யில், இந்த நிறு​வனத்​தின் செயல்​பாடு​கள் குறித்து விளக்​கம் கேட்டு வாயி​லில் நோட்​டீஸ் ஒட்​டப்​பட்​டது. ஆலை பூட்​டப்​பட்​டிருந்​த​தால் ஆலைக் கதவில் ஒட்​டப்​பட்​டது. இந்த ஆலை​யில் தயாரிக்​கப்பட்ட கோல்ட்​ரிப்...
தமிழகத்​தில் 3,170 யானை​கள் உள்​ள​தாக வனத் துறை அமைச்​சர் ஆர்​.எஸ்​.​ராஜகண்​ணப்​பன் தெரி​வித்​துள்​ளார். யானை​கள் பாது​காப்​பில் தமிழகம் நீண்​ட​கால​மாகவே முன்​னணி வகிக்​கிறது. இந்​நிலை​யில், கர்​நாடகா​வுடன் இணைந்து கடந்த மே 23 முதல் 25-ம் தேதி வரை 3-வது ஒருங்​கிணைந்த யானை​கள் கணக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது. தமிழகத்​தில் புலிகள் காப்​பகங்​கள், வனவிலங்கு சரணால​யங்​கள், பிராந்​திய வனப் பிரிவு​கள் மற்​றும் ஒரு தேசி​யப் பூங்​கா​வில் நடத்​தப்​பட்ட கணக்​கெடுப்​பில் 2,043 வனத் துறைப் பணி​யாளர்​கள் மற்​றும் தன்​னார்​வலர்​கள்...
‘பிரஸ் மீட் நாயகன்’ என்று பத்திரிகையாளர்களே பட்டம் கொடுக்குமளவுக்கு, எந்தக் கேள்வி கேட்டாலும் தனக்கே உரிய டிரேட் மார்க் சிரிப்புடன் பதில் சொல்வதுடன், “வேற கேள்வி ஏதும் இருக்கா?” என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டு கிளம்புபவர் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். சமீபத்திய அரசியல் நிகழ்வுகள், எதிர்காலத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ‘இந்து தமிழ் திசை’க்கு அவரளித்த பேட்டி: கரூர் சம்பவத்தில் அரசு மீது தவறில்லை. எந்த சதியும்...