வயோதிகம் காரணமாக, பல சமயங்களில் சொந்தக் கட்சி தலைமைக்கு எதிராகவே எக்குத்தப்பாக பேசி வைரல் ஆகுபவர் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன்.
திண்டுக்கல் தொகுதியில் கடந்த இரண்டு தேர்தல்களாக தொடர் வெற்றியைப் பெற்று வரும் இவர் இம்முறை ஹாட்ரிக் வெற்றிக்காக காத்திருக்கிறார். ஆனால், அதை நடக்கவிடாமல் செய்ய திமுக சிறப்புத் திட்டங்களை வகுத்து வருகிறது. கடந்த 1996-க்குப் பிறகு திண்டுக்கல்லில் நேரடியாக போட்டியிட்டு வெற்றிபெறாத திமுக, இம்முறை திண்டுக்கல்லாரை தோற்கடித்தே...
மாணவர்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு விஜய் மாநாட்டுக்குப் போனார்களா? – திமுகவுக்கு புளியை கரைக்கும் புள்ளிவிவரம்!
admin - 0
தமிழகத்தின் கல்வி வளர்ச்சி, அதற்காக அரசு மேற்கொண்ட சிறப்பு முயற்சிகள் உள்ளிட்டவை குறித்து விளக்கவும், கல்வியில் சிறந்த சாதனையாளர்களை அழைத்து கவுரவிக்கவும் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற நிகழ்ச்சியை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 25-ம் தேதி நடத்தியது தமிழக அரசு. அதற்கு ஒரு மாதம் முன்னதாகத்தான் (ஆகஸ்ட் 21) மதுரையில் தனது கட்சியின் 2-வது மாநில மாநாட்டை நடத்தினார் நடிகர் விஜய். இப்போது இந்த இரண்டு...
தேசியக் கட்சிக்கு தமிழகத்தில் தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காக நியமிக்கப்பட்ட வடபுல தலைவர் அண்மையில் சென்னைக்கு விஜயம் செய்தார். கூட்டணி தலைகளை சந்தித்துப் பேசிய தலைவர், அப்படியே சொந்தக் கட்சியின் பூத் கமிட்டி புள்ளியையும் அழைத்து, “எலெக்ஷன் வேலை எல்லாம் எப்படிப் போயிட்டு இருக்கு?” என்று விசாரித்தாராம்.
அவருக்கு, என்னவெல்லாம் செய்திருக்கிறோம், என்னவெல்லாம் செய்யப் போகிறோம் என்று பவர் பாயின்ட்டில் செயல்விளக்கம் கொடுத்த பூத் கமிட்டி புள்ளி, அதற்கு முன்னதாக அந்த...
இன்னும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையே தொடங்கப்படாத நிலையில், ராஜபாளையத்துக்கு அதிமுக - பாஜக கூட்டணி வேட்பாளராக கிட்டத்தட்ட முடிவாகிவிட்ட பாஜக மாநில துணைத் தலைவர் கோபால்சாமி அதை அறிவிக்கும் முன்பாகவே தொகுதிக்குள் ஆதரவு திரட்ட ஆரம்பித்துவிட்டார்.
கடந்த 2011-ல் ராஜபாளையம் தொகுதி அதிமுக எம்எல்ஏ.வாக இருந்த கோபால்சாமி இப்போது பாஜகவில் இருக்கிறார்.நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கமான இவருக்கு, அவரது சிபாரிசிலேயே பாஜக மாநிலத் துணைத் தலைவர் பதவி வாய்த்ததாகச் சொல்வார்கள். இந்த...
பொதுவாக பக்கா திமுக காரர்கள் தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்லி பழகமாட்டார்கள். ஆனால், தேர்தல் வருகிறது என்பதால் இந்தத் தீபாவளிக்கு அமைச்சர் சி.வெ.கணேசன் தனது திட்டக்குடி தொகுதி பெண்களுக்கு புடவையை தீபாவளி பரிசாகத் தந்து மறைமுகமாக வாழ்த்துச் சொல்லி வருகிறார்.
கடந்த சில தினங்களாக தனது தொகுதிக்கு உட்பட்ட மங்களூர் ஒன்றியம் மாங்குளம், கீழ் ஒரத்தூர், ஆக்கனூர், பாளையம், கீழ்செருவாய், இடைச்செருவாய், கோடங்குடி, பட்டூர் என கிராமங்களைச் சுற்றி வரும் கணேசன்,...
பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வீடு திரும்பி இருக்கும் நிலையில், ராமதாஸுக்கு ஏதாவது ஆனால் சும்மா விடமாட்டேன் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கட்சியின் தலைவர் அன்புமணி தலைமையில் சென்னையை அடுத்த உத்தண்டியில் நேற்று நடந்தது. இதில், நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் இருந்த பாமக இளைஞர் அணி தலைவர் பொறுப்புக்கு செஞ்சி சட்டப்பேரவை தொகுதி முன்னாள் உறுப்பினர்...
“கூட்டம் வெற்றி தராது… கூட்டணிதான் வெற்றி தரும்!” – தேர்தல் களத்தை அலசும் ஜான் பாண்டியன் நேர்காணல்
admin - 0
தேர்தல் வந்துவிட்டால் மற்ற கட்சிகளால் தேடப்படும் நபராகிவிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியனை 'இந்து தமிழ் திசை' பேட்டிக்காக தொடர்பு கொண்டோம். "நான் மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டேன்... சரி என்று பட்டதை தடாலடியாகச் சொல்லி விடுவேன். அதனால் நான் பேசியதில் தேவையில்லாததை வெளியிட்டு சர்ச்சையாக்கி விடாதீர்கள்” என்ற நிபந்தனையுடன் பேச ஆரம்பித்தார்.
திமுக ஆட்சியில் சாதிய மோதல்கள் கட்டுக்குள் உள்ளதா... சட்டம் -ஒழுங்கு எப்படி...
‘கூடுதல் தொகுதிகள் தராவிட்டால்…’ – செல்வப்பெருந்தகைக்கு செக் வைக்கும் காங்கிரஸ் எம்.பி-க்கள்
admin - 0
“இம்முறை கூடுதல் தொகுதிகளைக் கேட்போம்” என தேர்தலுக்குத் தேர்தல் கொளுத்திப் போடுவதும் கடைசியில், முந்தைய தேர்தலைவிட குறைவாகவே வாங்கிக் கொண்டு அமைதி ஆகிவிடுவதும் தமிழக காங்கிரஸாருக்கு பழகிப்போன சமாச்சாரம். ஆனால், இம்முறை அதிக தொகுதிகள் என்பதோடு ஆட்சியில் பங்கு என்ற முழக்கமும் காங்கிரஸ் வட்டாரத்தில் சத்தமாகக் கேட்க ஆரம்பித்திருக்கிறது. அதற்குக் காரணம், 'அதிகாரத்தில் பங்கு' வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக தலைவர் விஜய்.
ஆட்சியில் பங்கு தருவோம் என விஜய் சொன்னதிலிருந்தே...
‘அனுமதி பெற்றுத்தான் கரூர் செல்ல வேண்டும் என்ற நிலை இல்லை. கரூர் பாதுகாப்பான ஊர். விஜய் தைரியமாக வரலாம்’ என அண்ணாமலை தெரிவித்தார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தாயார் மறைவையொட்டி, சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று அஞ்சலி செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் எல்லோருக்கும் எந்த இடத்துக்கு செல்லவும் உரிமை உண்டு. என்னைப் பொறுத்தவரை...
தேர்தலை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பில் அடுத்த 2 மாதங்களில் 4 மண்டல மாநாடுகளை நடத்தத் திட்டமிட்டிருக்கும் உதயநிதி ஸ்டாலின், இளைஞரணிக்கு கூடுதலாக 5 லட்சம் பொறுப்பாளர்களை நியமிக்கவும் முடிவு செய்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
'வெல்வோம் 200... படைப்போம் வரலாறு என்ற முழக்கத்துடன் சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகி வருகிறது ஆளும் கட்சியான திமுக. அதன் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொகுதி வாரியாக நிர்வாகிகளை அழைத்துப் பேசி உட்கட்சி பிரச்சினைகளை சரிசெய்து வருகிறார்....










