ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் மிக கனமழை: தங்கச்சிமடத்தில் 170 மில்லி மீட்டர் மழை பதிவு
admin - 0
வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் நேற்றுமிக கன மழை பெய்தது. அதிகபட்சமாக தங்கச்சி மடத்தில் 170 மி.மீ மழை பதிவானது. ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று பிற்பகல் வரை கன மழை பெய்தது. இதனால் ராமேசுவரம், மண்டபம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே மின்சாரம்...
தேர்தல் ஆதாயத்துக்காக டிஜிபி நியமனத்தை இழுத்தடிப்பதா? – மக்கள் பாதுகாப்போடு முதல்வர் விளையாடுவதாக பழனிசாமி விமர்சனம்
admin - 0
தேர்தல் ஆதாயத்துக்காக முழுநேர டிஜிபி-யை நியமிக்காமல் தமிழக மக்களின் பாதுகாப்போடு முதல்வர் ஸ்டாலின் விளையாடுவதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவு: தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு டிஜிபி-யின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் மாதமே நிறைவடைந்துவிட்டது. இந்நிலையில், தங்களுக்கு ஏற்ற நபரை, தேர்தல் நேரத்தில் தங்களுக்கு உதவியாக இருக்கும் அதிகாரியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், வெறும் தேர்தல் ஆதாயத்துக்காக,...
தீபாவளி விடுமுறை முடிந்து தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்குத் திரும்பிய மக்களால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி ஸ்தம்பித்தது. தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் பேருந்து, ரயில், கார், வேன் மற்றும் இருசக்கர வாகனங்களில் கடந்த 17-ம் தேதி முதல் 19-ம் தேதி நள்ளிரவு வரை சொந்த ஊருக்குச் சென்றனர்.
குறிப்பாக, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி வழியாக சுமார் 1.60 லட்சம் வாகனங்களில் பல...
டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை – 1.30 லட்சம் ஏக்கர் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்
admin - 0
காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்மழை காரணமாக 1.30 லட்சம் ஏக்கர் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியதாலும், அறுவடைக்கு தயாரான குறுவை நெற்கதிர்களை மழைநீர் சூழ்ந்ததாலும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். டெல்டா மாவட்டங்களில் 6 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது.
இதில் 70 சதவீதம் அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளன. இன்னும் 30 சதவீதம் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இதில், அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் நேரடி...
தமிழகத்தை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (அக்.21) ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் கனமழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர்,...
தேனியில் ஏற்பட்ட வெள்ளம் திமுக அரசால் உருவாக்கப்பட்ட மனிதப் பேரிடர் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பதாவது: எழில் கொஞ்சும் தேனி மாவட்டம், தற்போது கடும் வெள்ளத்தில் சிக்கி அவதியுறு வதைக் கண்டு நெஞ்சம் பதைபதைக்கிறது. வரலாறு காணாத தொடர்மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும் இது ஒருவிதத்தில் திமுக அரசால் உருவாக்கப்பட்ட மனிதப் பேரிடரே.
பருவமழை தொடங்கும்...
தமிழகத்தில் அக்.20 முதல் 6 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், "தெற்கு அந்தமான மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அக்.21ம் தேதியில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48...
தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு வெடித்ததில் 89 பேர் காயமடைந்ததாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: "மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (அக்.20ம் தேதி) சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தீபாவளி பண்டிகை பட்டாசு விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மருத்துவ பயனாளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்து, தீ விபத்து சிகிச்சை...
கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் சேலம் மாவட்டம் மேட்டூர் அணை முழு கொள்ளளவு இன்று எட்டியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான தமிழக வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
இதனிடையே, நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக இன்று (அக்.20) சேலம் மாவட்டம் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. நடப்பாண்டில் மட்டும்...
தமிழகம் முழுவதும் வீட்டுவசதி வாரியத்திடம் பெற்ற வீட்டு மனைகளுக்கு தடையில்லாச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி கூறியதாவது: விருகம்பாக்கம் தொகுதி 136-வது வார்டில் அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு கட்டப்பட்டது. அது சேதமடைந்ததால் தற்போது இடிக்கப்பட்டுவிட்டது. அந்த இடம் அரசு புறம்போக்கு என குறிப்பிடப்பட்டுள்ளது. சிஎம்டிஏவில் குடியிருப்பு பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது....










