Google search engine
தேர்தல் கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் கட்சி வளர்ச்சிப் பணிகளை கவனியுங்கள் என்று அதிமுக மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கடந்த நவ.4-ம் தேதி தொடங்கியது. இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதே நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் ஆதரித்து...
தமிழக அரசியலில் அடுத்த சில வாரங்களில் பெரிய மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தருமபுரியில் தெரிவித்தார். தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் ஈச்சம்பாடி பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஈச்சம்பாடி அணையில் இருந்து உபரிநீர் நீரேற்றும் திட்டத்தை செயல் படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி தலைமையில் நேற்று ஈச்சம்பாடி அணை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின்போது, ‘விவசாயிகளுக்கு பயனளிக்கும் எந்த திட்டத்தையும் திமுக அரசு...
எஸ்​ஐஆர் விவ​காரத்​தில் தேவையற்ற வேலை​யைச் செய்​யும் பாஜக, பதற்​ற​மாகவே வைத்​திருக்க நினைப்​ப​தாக நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் தெரி​வித்​தார். இது குறித்து நேற்று திருச்​சி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறியது: பெண்​களுக்கு எதி​ரான பாலியல் துன்​புறுத்​தல் என்​பது கோவை​யில் நடந்த இது ஒரு நிகழ்​வல்ல. பல நிகழ்​வு​கள் வெளியே தெரி​யாமல் உள்​ளது. தமி​ழ​கத்​தில் பெண்​களுக்கு எதி​ரான பாலியல் குற்​றங்​கள் தொடர்ந்து அதி​கரித்து வரு​கிறது. 6 வயது குழந்​தையை வன்​புணர்வு செய்து எரித்​துக்...
மாளிகைக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட அந்த ’கோட்டை’ எக்ஸ் மாண்புமிகுவுக்கு, செய்தி சொல்லும் துறையில் இருந்து ஓய்வுபெற்ற உதவி இயக்குநர் (ஏடி) அந்தஸ்திலான ஒருவர் தான் இப்போது முக்கிய அரசியல் ஆலோசனைகளை வழங்கி வருகிறாராம். அவரது ஆலோசனைகளை தட்டாமல் ஏற்றுக் கொள்ளும் எக்ஸ் மாண்புமிகு, பசும்பொன்னுக்கு ‘பலே’ பங்காளிகளுடன் சேர்ந்து பயணப்படுவதற்கு முன்னதாகவும் ஏடியிடம் ஆலோசனை கேட்டாராம். “இப்போதைக்கு இது வேண்டாமே” என ஏடி ஏர்பிரேக் போட்டாராம். ஆனால், “டெல்லி சொல்லாத...
ஓபிஎஸ்ஸை நம்பி இபிஎஸ்ஸை பகைத்​துக் கொண்ட மனோஜ் பாண்​டியன், ஓபிஎஸ்​ஸின் நிலைமை மதில் மேல் பூனை கணக்​காக இருப்​ப​தால் தனக்​கான வழியைத் தேடிப் புறப்​பட்டு திமுக​வில் கலந்​து​விட்​டார். மனோஜ் பாண்​டிய​னுக்கு தேர்​தலில் சீட் உறுதி என்று உத்​தர​வாதம் அளித்​துத்​தான் அவரை திமுக​வுக்கு அழைத்து வந்​தா​ராம் அமைச்​சர் சேகர் பாபு. இந்த நிலை​யில், ஏற்​கெனவே ஆலங்​குளத்​தில் வெற்​றி​பெற்ற மனோஜ் பாண்​டிய​னுக்கு இந்த முறை அந்​தத் தொகு​திக்​குப் பதிலாக அம்பாசமுத்திரத்தை ஒதுக்க திமுக...
தமி​ழ​கத்​தில் 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கு, முன்​னெப்​போதும் இல்​லாத வகை​யில் கிட்​டத்​தட்ட ஓராண்​டுக்கு முன்​பிருந்தே முக்​கிய கட்​சிகள் ஆயத்​தப் பணி​களை தொடங்​கி​விட்​டன. தற்​போது, சமூக வலை​தளங்​கள் வழியே பிரச்​சா​ரம் செய்​ய​வும், செய்​தி​களை பரப்​ப​வும், விவாதங்​களில் ஈடு​பட​வும் அனைத்​துக் கட்​சி​களின் ஐடி விங்​கு​களும் பரபரப்​பாக செயல்​பட்டு வரு​கின்​றன. திமுக, அதி​முக, பாஜக உள்​ளிட்ட பிர​தானக் கட்​சிகள் ஐடி விங் ஆலோ​சனைக் கூட்​டங்​களை அடிக்​கடி நடத்​துகின்​றன. ‘தமிழ்​நாட்டை தலை​குனிய விட​மாட்​டேன்’, ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ என...
‘கூட்​டணி கட்​சி​களின் ஆக பெரிய பலம்​தான் திமுக​வின் பலம்’ - இதை அக்​கட்​சி​யின் கூட்​ட​ணி​யில் உள்ள தலை​வர்​கள் நன்​றாகவே உணர்ந்​து, இந்​தத் தேர்​தலில் கூடு​தல் தொகு​தி​களைக் கேட்டு வரு​கின்​ற​னர். யாருக்கு எத்​தனை சீட் என்​ப​தைக் காட்​டிலும், யாருக்கு எந்​தத் தொகுதி என்​ப​தில் பெரும் போட்டி தற்​போதே நடந்து வரு​கிறது. கடலூர் மாவட்​டத்​தில் உள்ள சிதம்​பரம் தொகு​தியை தங்​கள் வசம் பெற்று விட வேண்​டும் என்று திமுக கூட்​ட​ணிக் கட்​சிகள் தற்​போதே...
பாஜக மாநிலச் செயலாளர் அமர்பிரசாத் ரெட்டி தமிழகத்தின் அரசியல் கள நிலவரத்தை நன்கு அறிந்தவர். பெயரைக் கேட்டதும் வெளியூர்காரர் என்று நினைப்பவர்கள் ஏமாந்து போகும் அளவுக்கு நன்கு தமிழ் பேசக் கூடியவர். அவரிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம். வலுவான கூட்டணியை அமைப்போம் என பாஜக திரும்பத் திரும்பச் சொன்னாலும் யாருமே பாஜக அணி பக்கம் திரும்புவதாகத் தெரியவில்லையே? கடந்த காலங்களில் வேட்புமனு தாக்கலுக்கு முந்தைய நாள் கூட கூட்டணிகள் இறுதியாகி...
வாக்கு அரசியலுக்காக தமிழகத்தில் பிஹார் மக்கள் துன்புறுத்தப்படுவதாக பிரதமர் மோடி பேசுகிறார். தமிழகம் வந்து இவ்வாறு பேச அவருக்கு தைரியம் உள்ளதா? என்று முதல்வர் ஸ்டாலின் ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார். தருமபுரி மக்களவை உறுப்பினர் மணி இல்ல திருமண விழா தருமபுரியில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மங்கல நாணை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் விழாவில் அவர் பேசியதாவது: அனைத்துக் கட்சிக்...
திமுகவில் இருப்பவர்களை குறி வைத்து அடிப்பதற்கு பாஜக தயாராகிவிட்டது. அதற்கு நான் முதல் பலியாகி விட்டேன் என அமைச்சர் கே.என்.நேரு பேசினார். திருவாரூர் மாவட்ட திமுக சார்பில், ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ பாக நிலை முகவர்களுக்கான கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கட்சியின் முதன்மைச் செயலாளரும், திருச்சி மண்டல பொறுப்பாளருமான அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியது:...