தெற்கு ரயில்வேயில் சென்னை ரயில்வே கோட்டம் சார்பில், தூய்மை வாரம் நிறைவு விழா மற்றும் காந்தி ஜெயந்தி விழா ஆகிய நிகழ்ச்சிகள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளில் தெற்குரயில்வே கூடுதல் பொதுமேலாளர் கவுசல் கிஷோர், சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா மற்றும் ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர். மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, ரயில்வே ஊழியர்களின் தேசபக்தி...
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 2 அணு உலைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த அணு உலைகளில் ஆண்டுதோறும் எரிபொருள் நிரப்பவும், பராமரிப்புப் பணிக்காகவும் மின்உற்பத்தி நிறுத்தப்படுவது வழக்கம். மேலும், அவ்வப்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவும் மின் உற்பத்தி நிறுத்தப்படுகிறது. இந்நிலையில், முதலாவது அணு உலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால், 1,000...
விஜய் கட்சி மாநாட்டுக்கான பந்தல்கால் நடும் விழா விக்கிரவாண்டியில் நாளை நடைபெறுகிறது. தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி கட்சி கொடியையும், பாடலையும் அறிமுகம் செய்தார்.தொடர்ந்து, மாநாட்டு நடத்துவதற்கான பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநாட்டுக்கு ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் எத்தனை பேரை அழைத்து வர வேண்டும், அவர்களுக்கான வசதிகள் குறித்து...
கோயம்புத்தூர் வடவள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் காமராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், “ஈஷா யோகாமையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தனது 2 மகள்களை மீட்டுத்தர வேண்டும்” என்று கோரியிருந்தார். இதையடுத்து, ஈஷா யோகா மையம் மீதுள்ள நிலுவை வழக்குகள் குறித்து ஆய்வு செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, கோவை மாவட்ட காவல் மற்றும் சமூகநலத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் ஈஷா மையத்தில் விசாரணை நடத்தினர். இரண்டாவது நாளாகநேற்றும் விசாரணை...
இலங்கை சிறைகளில் உள்ள 162 மீனவர்களை, அவர்களின் படகுகளுடன் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி வரும் 8-ம் தேதி பாமக சார்பில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் ராமேஸ்சுவரம் முதல் நாகப்பட்டினம் வரையிலான இந்திய எல்லைக்கும், இலங்கை எல்லைக்கும் இடைப்பட்ட கடல் பரப்பு மிகவும் குறுகியது ஆகும்.அதனால்,...
 ராகுல்காந்திக்கு எதிராக வெறுப்பு அரசியல், பொய் பிரச்சாரம் செய்யும் ஆர்எஸ்எஸ், பாஜகவைக் கண்டித்து, சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் சென்னையில் நேற்று தேசிய விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக வெறுப்பு அரசியல், பொய் பிரச்சாரம் செய்யும் ஆர்எஸ்எஸ்., பாஜகவை கண்டிக்கும் வகையில் சென்னை மாவட்ட காங்கிரஸ்...
மகாத்மா காந்தியடிகளின் 156-வதுபிறந்த நாளை ஒட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் காந்தியின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மகாத்மா காந்தியடிகளின் 156-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆளுநர் மாளிகையில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு கீழே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கும் கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள காந்தி சிலைக்கும்...
இலங்கை தலைமன்னாரைச் சேர்ந்த சரவணபவன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல்செய்த மனுவில் கூறியிருப்பதாவது: இலங்கையை சேர்ந்த நான், கடந்த மார்ச் மாதம் சுற்றுலா விசாவில் இந்தியா வந்தபோது, ராமநாதபுரம் சிவசக்தியை திருமணம்செய்ய முடிவு செய்தேன். ஆனால், நான் இலங்கை குடியுரிமை பெற்றவன் என்பதால், எனது திருமணத்தை பதிவு செய்யமுடியவில்லை. எனினும், சிவசக்தியை இந்து முறைப்படி கோயிலில் திருமணம் செய்து கொண்டேன். இந்நிலையில், எனது 3 மாத விசாகாலம் முடிவடைந்ததால்,...
தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: அமைச்சரவை மாற்றம் தற்போது அடிக்கடி நடப்பதில்லை.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாஆட்சியில், எந்த அமைச்சர் பதவியில் இருக்கிறார், யார் இல்லை என்பதை செய்தியைப் பார்த்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த அளவுக்கு அமைச்சர்கள் அச்சத்துடன் இருந்தனர். ஆனால், திமுக ஆட்சியில் அமைச்சர்கள் சுதந்திரமாக செயல்படும் சூழலை முதல்வர் உருவாக்கியுள்ளார். மது ஒழிப்பை நாடு முழுவதும் கொண்டுவந்தால், தமிழகத்திலும் அதை...
 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் பார்களை மூட மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: காந்தி ஜெயந்தி தினத்தில் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் கீழ், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (எப்எல்-1) மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அதைச் சார்ந்த பார்கள், எப்எல்-2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சேர்ந்த பார்கள், எப்எல்-3 உரிமம்...