கடந்த டிசம்பர் 26-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், “கடந்த நான்கரை ஆண்டுகளில் நாங்கள் செய்ததில் 5 சதவீதமாவது அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்ததா..? அவர்களால் இதற்கு பதில் சொல்ல முடியுமா..? இது என்னுடைய ஓபன் சேலஞ்ச்” என்று சவால் விடுத்திருந்தார். இந்த சவாலுக்கு வரும் 5-ம் தேதி பதிலளிக்க தயாராகி வருகிறது கள்ளக்குறிச்சி அதிமுக.
ஸ்டாலின் சேலஞ்ச் வைத்த...
பழனிசாமியுடன் பன்னீர்செல்வம் இணைய வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் வடகரை பகுதியில் பேச்சி ஓடையின் குறுக்கே நபார்டு நிதி உதவியுடன் ரூ.6 கோடியில் அமைய உள்ள பாலத்திற்கு நேற்று அடிக்கல் நாட்டிய அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தினமும் கொலை கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. போதைப் பொருட்கள் புழக்கம் கிராமங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் அதிகரித்துவிட்டது. மாணவர்கள்...
தாம்பரம் காவல் ஆணையராக கடந்த ஜூலை மாதம் பதவியேற்ற அபின் தினேஷ் மோதக் பணிமாற்றம் செய்யப்பட்ட நிலையில், ஏற்கெனவே இங்கு ஆணையராக இருந்த ஏடிஜிபி அமல்ராஜ் மீண்டும் தாம்பரம் மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு காவல் துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதேபோல, ஆவடி காவல் ஆணையராக இருந்த ஏடிஜிபி கி.சங்கர், சிறைத் துறை இயக்குநராகப் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, தென் மண்டல ஐ.ஜி.யாகப்...
“காசியிலும் தமிழ் இலக்கியங்கள் ஓங்கி ஒலிக்கின்றன” – குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பெருமிதம்
admin - 0
காசி ஆன்மிகத் தலைநகராக இருந்தாலும் தமிழ் இலக்கியங்கள் அங்கு ஓங்கி ஒலிக்கின்றன என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் கூறினார். உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் ‘காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி-4.0 டிச. 2 முதல் 15-ம் தேதி வரை நடைபெற்றது.
இதன் நிறைவு விழா ராமேசுவரத்தில் நேற்று நடந்தது. இதில், குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசியதாவது: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை தந்த...
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் கிரசியன் என்பவரது விசைப்படகை சிறைபிடித்து, படகில் இருந்த நாகராஜ் (47), பிரபு (49), ரூபன் (45) ஆகியோரைக் கைது செய்து, காரைநகர் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அவர்களை இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்....
சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையத்துக்கு செல்லும் வழித்தடத்தில் நேற்று காலை 6 மணிக்கு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
அதாவது ஆலந்தூர் - விமான நிலையம் இடையே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து தொழில்நுட்பகோளாறை சரிசெய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டனர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையத்துக்கு நேரடியாக மெட்ரோ ரயில் சேவை இல்லாததால் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். தற்காலிகமாக சேவை ரத்தானதால் பயணிகள் ஆலந்தூரில்...
பொது இடங்களில் கட்டுமானக் கழிவுகளை கொட்டினால் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், டன்னுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மண்டல உதவி ஆணையர்களுக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையின் முக்கிய சாலைகள், தெருக்கள், நடைபாதைகள், நீர்நிலைகள், திறந்த வெளிகள் மற்றும் காலி இடங்களில் கட்டுமானக் கழிவுகளை கொட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருவது மாநகராட்சி கவனத்துக்கு வந்துள்ளது.
இத்தகைய செயல்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் காற்று...
நீதிமன்ற உத்தரவுப்படி, பாரிமுனையில் 500-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பூக்கடை, பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலை நடைபாதையில் 500-க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தன. இதனால் அந்த பகுதியில் அரசு பேருந்துகள், கார் உள்பட அனைத்து விதமான வாகனங்களும் செல்வதில் சிரமம் இருந்தது. இதனால், எப்போதும் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, ஆக்கிரமிப்பு...
புத்தாண்டை முன்னிட்டு சென்னையிலிருந்து 570 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட அறிக்கை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு டிச.30 மற்றும் 31 மற்றும் ஜன.1-ம் தேதிகளில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்தும் தமிழகம் முழுவதும் மக்கள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி...
சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் தொடர்ந்து 4-வது நாளாக போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஓர் ஊதியமும், மறுநாள் ஜூன் 1-ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு வேறு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் சுமார் 20...
