கிருஷ்ணகிரியில் 314 சட்டவிரோத குவாரிகளை மூடி இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
admin - 0
கிருஷ்ணகிரியில் செயல்பட்டு வரும் 314 சட்டவிரோத குவாரிகளை மூடி, இயற்கை வளங் களைப் பாதுகாக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் மாணவி களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்தால், பல்வேறு சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும்.தனியார் பள்ளிகளில், சம்பந்தம் இல்லாத அமைப்புகள் பயிற்சி...
சென்னையில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டத்தில், மத்திய பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினருக்கு சலுகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமையகத்தில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் பொதுச் செயலாளர் ஆ.அருணாச்சலம், துணைத் தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, ஆர்.தங்கவேலு மற்றும் நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்து...
டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு. இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் பதவியில் 21 காலியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூலை 12-ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவுகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன. அடுத்த கட்ட தேர்வான முதன்மைத் தேர்வுக்கு 219 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், தமிழ்நாடுபொதுப்பணியில் அடங்கியசுற்றுலா அலுவலர் பதவியில் 3 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு முதன்மைத் தேர்வு கடந்த ஜுன் 6...
புதுவையில் அனைத்து பி மற்றும் சி பிரிவு பணிகளுக்கும் இந்த ஒருமுறை மட்டுமாவது மூன்று ஆண்டுகள் வயதுவரம்பு உயர்வு வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும். வயதுவரம்பு உயர்வை வென்றெடுக்க புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், “புதுவையில் ஆசிரியர்கள், இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை தேர்வு செய்வதற்கான...
26 கிலோவுக்கு மேல் அடைத்து விற்கும் உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்க கூடாது: மத்திய அமைச்சரிடம் விக்கிரமராஜா வலியுறுத்தல்
admin - 0
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா டெல்லி சென்று, பல்வேறு துறை அமைச்சர்களை சந்தித்து, வணிகர் நலன் சார்ந்த கோரிக்கைகளை வைத்துவருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மத்திய நுகர்வோர்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷியை சந்தித்தார். அப்போது, நுகர்வோர் மற்றும் உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்குதல் தொடர்பாக கோரிக்கை மனு அளித்தார்.அப்போதுபேரமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் வெ.கோவிந்த ராஜுலு, தலைமைச் செயலாளர் ஆர்.ராஜ்குமார், மாநிலகூடுதல் செயலாளர்கள்...
பட்டியலினத்தை சேர்ந்த ஊராட்சி தலைவருக்கு அவமதிப்பு: நடவடிக்கை எடுக்க திருமாவளவன் வலியுறுத்தல்
admin - 0
பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்ஊராட்சித் தலைவருக்கு நேர்ந்த அவமதிப்பு தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என விசிக தலைவர்திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
திண்டிவனம் தாலுகா அவ்வையார்குப்பம் ஊராட்சித் தலைவர் மகாலட்சுமி, கடந்த 20-ம் தேதி மாலை விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். தான் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஊராட்சித்தலைவராகத் தேர்ந்தெடுக் கப்பட்ட நாளில்இருந்து அலுவலகத்தில் இருக்கையில் அமரவிடாமல் சிலர் தடுப்பதாகக் குற்றம்சாட்டினார்.மன உளைச்சல்: இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்...
3 ஆண்டுகளில் ஈர்க்கப்பட்ட தொழில் முதலீடுகளின் தற்போதைய நிலை என்ன? – வெள்ளை அறிக்கை கோரும் அன்புமணி
admin - 0
பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கை. தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினர், வரும் 27-ம் தேதி முதல்17 நாட்களுக்கு அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் முதலீடுகளை ஈர்க்க செய்யப்பட்ட முயற்சிகளின் நிலை என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டியது தமிழகஅரசின் கடமையாகும்.
கடந்த 2022-ம் ஆண்டு மார்ச்சில் 4 நாள் பயணமாக துபாய் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள நிறுவனங்களிடம் நடத்தியபேச்சுவார்த்தையின்...
திண்டிவனம் சிப்காட் உணவுப்பூங்காவில் ரூ.400 கோடியில் டாபர் நிறுவன ஆலை: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
admin - 0
திண்டிவனம் சிப்காட் உணவுப்பூங்காவில் ரூ.400 கோடி முதலீட்டில்புதிய உற்பத்தி ஆலை நிறுவுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், டாபர் இந்தியா நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழகத்தை, 2030-ம்ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன்அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் இலக்கை விரைவில் அடைவதற்காக தமிழக அரசின் தொழில்துறை, பல்வேறு முன்னெடுப்புகளை...
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தவறினால் இருண்ட வரலாற்றில் இடம்பெறுவார் ஸ்டாலின்: பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து
admin - 0
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தத் தவறினால், தமிழகத்தின் இருண்டவரலாற்றில் ஸ்டாலின் இடம்பெறுவார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உயரதிகாரிகள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப உள்ளதாக யுபிஎஸ்சி வெளியிட்ட விளம்பரம் சர்ச்சைக்குள்ளானது.தொடர் எதிர்ப்பு காரணமாக இந்த விளம்பரத்தை ரத்து செய்யுமாறு யுபிஎஸ்சி-க்கு மத்திய அரசுஉத்தரவிட்டிருக்கிறது. இது சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி என்று தமிழக...
தமிழகத்தின் மின் நுகர்வோர் எண்ணிக்கை 3.32 கோடியாக உள்ளது. இதில் 24 லட்சம் இலவச விவசாய மின் இணைப்பு தவிர மீதமுள்ளவை குடியிருப்பு, வணிகம் மற்றும் தொழிற்சாலை இணைப்புகளாகும்.
நுகர்வோர் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மத்திய அரசின் உத்தரவுப்படி ரூ.10 ஆயிரத்துக்கு மேலான பரிவர்த்தனையை ரொக்கமாக பெறக் கூடாது. இந்நிலையில், தற்போது 83 சதவீதமாக உள்ள மின்னணு (டிஜிட்டல்) பரிவர்த்தனையை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற...










