Google search engine
சென்னை உள்​ளிட்ட வட மாவட்​டங்​களில் நில​வும் கடும் குளி​ரால் மக்கள் பாதிப்​புக்​கு உள்ளாகினர். இயல்​புக்கு மாறான வானிலை காரண​மாக கடும் குளிர் நில​வுவ​தாக இந்​திய வானிலை ஆய்வு மையத்​தின் தென் மண்டல தலை​வர் பி.அ​முதா தெரி​வித்​துள்​ளார். கடந்த சில தினங்​களாக சென்​னை, வேலூர், திருப்​பத்​தூர் உள்​ளிட்ட வட மாவட்​டங்​களில் கடும் குளிர் நிலவி வரு​கிறது. பொதுமக்கள் ஸ்வெட்​டர், மஃப்​ளர் சகித​மாக காலை, மாலை வேளை​களில் வலம் வரு​கின்​றனர். விடு​முறை தினத்​தில்​கூட குழந்​தைகள்...
தமிழகத்​தில் பொங்​கல் பண்​டிகையை கொண்​டாட சென்னை போன்ற பெரு நகரங்​களில் வசிப்​பவர்கள் தங்​கள் சொந்த ஊர்​களுக்கு செல்​வது வழக்​கம். இதற்​காக ஆண்​டு​தோறும் தமிழக அரசு சார்​பில் சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படும். அந்த வகை​யில் கடந்த 9-ம் தேதி​ முதல் சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​பட்டு வரு​கின்​றன. அரசுப் பேருந்​துகளில் இடம் கிடைக்​காதவர்​கள் ஆம்னி பேருந்​துகளை தேர்வு செய்​வார்​கள். இந்த சூழ்​நிலையை பயன்​படுத்தி சில ஆம்னி பேருந்துகளில் அதிக கட்​ட​ணம் வசூலிக்​கின்​றனர். சென்​னை​யிலிருந்து மதுரை, கோவை,...
நம்​முடைய மொழியை​யும், கலாச்​சா​ரத்​தை​யும், பண்​பாட்​டை​யும் மறந்​து​விடக் கூடாது என்று அயல​கத் தமிழர்​களை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் கேட்​டுக் கொண்​டார். அயல​கத் தமிழர் நலன் மற்​றும் மறு​வாழ்​வுத் துறை சார்​பில் “தமிழால் இணைவோம் - தரணி​யில் உயர்​வோம்” என்ற தலைப்​பில் 2 நாள் நடை​பெறும் அயல​கத் தமிழர் தினம்​-2026 விழா சென்​னை​யில் நேற்று தொடங்​கியது. இணை​ய​வழி​யில் நடத்​திய பேச்​சு, ஒப்​பு​வித்​தல், மாறு​வேடம், கதை சொல்​லுதல் போட்​டிகளில் வெற்​றி ​பெற்ற 15 பேருக்கு...
பொங்கல் சிறப்பு பேருந்​துகளில் இரண்டு நாட்​களில் 2.47 லட்​சம் பேர் பயணம் செய்​துள்​ள​தாக போக்​கு​வரத்து துறை தெரி​வித்​துள்​ளது. பொங்கல் பண்​டிகையை கொண்​டாட சொந்த ஊர்​களுக்​குச் செல்​லும் மக்​களுக்​காக ஆண்​டு​தோறும் தமிழக அரசு சார்​பில் சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படும். 2,092 பேருந்​துகள் இயக்​கம்: அந்த வகை​யில் கடந்த ஜன.9-ம் தேதி முதல் சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​பட்டு வரு​கிறது. சென்​னை​யில் இருந்து தின​மும் 2,092 பேருந்​துகள் இயக்​கப்​படும் நிலை​யில், கடந்த 9-ம் தேதி கூடு​தலாக...
அரசு மருத்​து​வர்​களின் கோரிக்​கைகளை நிறைவேற்​றாமல் தமிழக அரசு இரட்டை வேடம் போடு​வ​தாக​ பாஜக கண்​டனம் தெரி​வித்​துள்​ளது. பாஜக மாநில துணைத் தலை​வர் கரு.​நாக​ராஜன் வெளியிட்டுள்ள அறிக்​கை: கடந்த 2019-ம் ஆண்டு அரசு மருத்​து​வர்​கள் ஊதிய உயர்வு கோரி போராடிய ​போது, அன்​றைய எதிர்க்​கட்​சித் தலை​வ​ராக இருந்த மு.க.ஸ்​டா​லின் ஆதரவு அளித்​தார். திமுக ஆட்​சிக்கு வந்​தவுடன் அரசாணை 354-ன் படி உரிய ஊதி​யம் வழங்​கப்​படும் என்று மருத்​து​வர்​களிடம் அவர் சத்தி​யம் செய்​தார். ஆனால்...
மாநகர காவல் ஆணை​யர் அருண் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னையில் 2023, 2024 ஆகிய ஆண்​டு​களில் தலா 105 கொலைகள் நடந்​துள்​ளன. 2025-ல் இது 93 ஆக குறைந்​துள்​ளது. திடீரென உணர்ச்சி வசப்​படு​தல், தவறான உறவு, பணம் ஏமாற்​றியது, இடப்​பிரச்​சினை, மது​போதை​யில் சண்டை போன்ற காரணங்​களால் கொலைகள் நிகழ்ந்​துள்​ளன. புதி​தாக தொடங்​கப்​பட்ட ஒருங்​கிணைந்த தொடர் நடவடிக்​கைகளால் ரவுடி கொலைகள் நடக்​காமல் தடுக்​கப்​பட்​டன. கடந்த 2 ஆண்​டு​களை ஒப்​பிடும்​போது, 2025-ம் ஆண்டு சென்னையில் வழிப்​பறி,...
சைதாப்​பேட்டை சட்​டப்​பேர​வைத் தொகு​தியை முன்​மா​திரி தொகு​தி​யாக மாற்​றும் நோக்​கில், சுகாதாரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் பல்​வேறு சமூகநலத் திட்​டங்​களை செயல்​படுத்தி வரு​கிறார். அதன் ஒருபகு​தி​யாக, சைதாப்​பேட்டை தொகு​தி​யில் ‘கலைஞர் கணினி கல்​வியகம்’ தொடங்​கி, தொகு​தி​யில் உள்ள படித்த ஏழை மற்​றும் பொருளா​தா​ரத்​தில் நலிவுற்ற மாணவர்​களுக்​காகப் பல்​வேறு பயிற்​சிகள் இலவச​மாக வழங்​கப்​பட்டு வரு​கின்​றன. இங்கு கடந்த 5 ஆண்​டு​களில் 1,165 மாணவ-​மாணவி​கள் பயிற்சி பெற்​றுள்​ளனர். இந்நிலையில் தென்​னிந்​தி​யா​வில் செயல்​படும் 450 ‘டேலி’ மையங்​களில்,...
பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: ‘ஜனநாயகன்’ படத்துக்கு ‘யுஏ’ சான்றிதழ் வழங்குவதற் காக, சில குறிப்பிட்ட காட்சிகளை நீக்கும்படி படக்குழுவினருக்கு தணிக்கைத் துறைஅறிவுறுத்தி உள்ளது. ஆனால், அந்த மாற்றங்களைச் செய்யபடக்குழுவினர் மறுத்து வருவதாகத் தெரிகிறது. இது தணிக்கைத் துறைக்கும் படக்குழுவுக்கும் இடையிலான நடைமுறைச் சிக்கலாகும். ஆனால், தேர்தலை மனதில்வைத்து, மக்களை திசை திருப்புவதற்காக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் திட்டமிட்டு மத்திய அரசுக்கு...
தேசிய பங்குச் சந்தையில் பசுமை நகராட்சி நிதிப் பத்திரம் வாயிலாக சென்னை மாநகராட்சி ரூ.205.59 கோடி நிதி திரட்டி உள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது: சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி மதிப்புள்ள நகர்புறநிதிப் பத்திரங்கள் கடந்த ஆண்டு மே மாதம் தேசிய பங்குச்சந்தை பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தனது முதல் பசுமை நகராட்சி நிதிப் பத்திரத்தை ஜன.12-ம் தேதி தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிட...
‘மணக்கும்’ தலைவருக்கு இலைக் கூட்டணியில் ஷேர் இல்லை என எடக்கானவர் மீண்டும் சொல்லிவிட்ட நிலையில், இதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு ஆக்டர் கட்சியில் அப்ளிகேஷனைப் போட்டுவைத்திருக்கிறாராம் ‘மணக்கும்’ தலைவர். ஆனால், யாராவது வந்தால் உள்ளே இழுத்துப் போடலாம் என நினைக்கும் அந்தக் கட்சியிலேயே, “அவரெல்லாம் அவ்வளவு பெரிய ஆள் இல்லை. தேவைப்பட்டால் பிப்ரவரியில் பார்த்துக் கொள்ளலாம்” என்று சொல்லி அன்னாரின் அப்ளிகேஷனை வெயிட்டிங்கில் வைத்துவிட்டார்களாம். அதேசமயம், டெல்லி அட்வைஸால் தற்போது மனம்...