அங்கீகாரமற்ற செவிலியர் பயிற்சி பள்ளியில் சேரவேண்டாம்: எதிர்காலம் கேள்விக்குறியாகும் என நர்சிங் கவுன்சில் எச்சரிக்கை
admin - 0
தமிழகத்தில் புற்றீசல்போல் அதிகரித்து வரும் அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்களில் செவிலியர் படிப்புகளை படித்தால், வாழ்க்கையும் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும் என தமிழக நர்சிங் கவுன்சில் பதிவாளர் எஸ்.ஆனி கிரேஸ் கலைமதி எச்சரித்துள்ளார்.
இந்தியா முழுவதும் 4 ஆண்டுகள் கொண்ட பிஎஸ்சி நர்சிங், 3 ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ நர்சிங், 2 ஆண்டுகள் கொண்ட சான்றிதழ் உதவி செவிலியர் (ANM - Auxiliary Nurse Midwifery)படிப்புகள் உள்ளன. 12-ம் வகுப்பு தேர்ச்சி...
அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் தலமையில், பேரவை தலைவர் தாடி ம.ராசு, பொருளாளர் அப்துல் அமீது ஆகியோர் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டி நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் கமலக்கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசு போக்குவரத்துக் கழகங்களில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இது, 4 ஆண்டுகளுக்கு ஒரு முறையாக மாற்றப்பட்டது. இதை அண்ணா...
புதிதாக அமைச்சரவையில் இணைக்கப்பட்ட அமைச்சர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் பொறுப்பேற்றுக் கொண்டனர். துணை முதல்வருக்கான செயலாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த செப்.28-ம் தேதி மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்துணை முதல்வராக அறிவிக்கப்பட்டார். மேலும் அமைச்சரவையில், வி.செந்தில்பாலாஜி, சா.மு.நாசர், கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். டி.மனோ தங்கராஜ், செஞ்சி கே.எஸ்.மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
இதுதவிர, க.பொன்முடி, தங்கம் தென்னரசு, ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், சிவ.வீ.மெய்யநாதன், மதிவேந்தன்,...
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை புழக்கத்துக்கு வராமல் தடுக்க வேண்டும்: அரசுக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தல்
admin - 0
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை புழக்கத்துக்கு வராமல் அரசு தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறினார்.
புதுக்கோட்டையில் மாவட்ட வர்த்தகக் கழகத்தின் பொன்விழா மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற விக்கிரமராஜா, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இரு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் வசூலிப்பதை தவிர்த்து, மாதந்தோறும் வசூலிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால்...
பட்டியலினத்தவர்கள் முக்கியமான அதிகாரத்துக்கு வர வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னையில் அவரிடம், தமிழகத்தில் துணை முதல்வராக பட்டியலினத்தவரை நியமிக்கும் சூழல் இருக்கிறதா, அதற்கான வாய்ப்புகள் அமையுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:ஆளுங்கட்சியின் சுதந்திரம், உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. திமுகவின் முக்கிய தலைவர்களின் அனுமதியுடன்தான் இந்த முடிவை எடுத்திருக்க முடியும். இதில் நாம் தலையீடு செய்து கோரிக்கைகளை எழுப்ப...
சென்னை சத்தியமூர்த்தி பவனில், இந்திரா தோழமை சக்தி இயக்கத்தின் மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்திரா காந்தி பெயரில் செயல்படும் இந்திரா தோழமை சக்தி இயக்கம் தொடங்கி ஓராண்டு நிறைவுபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள பெண்கள் அரசியலிலும், கட்சியிலும் முன்னேற்றம் பெற வேண்டும் என்ற அடிப்படையில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக செயலாற்றி வருகிறது.தமிழக துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்...
மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 1.82 லட்சம் பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய ஆர்டிஓ-வுக்கு பரிந்துரை
admin - 0
மோட்டார் வாகன விதிகளை மீறிய 1 லட்சத்து 82,375 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய ஆர்டிஓ-வுக்கு பரிந்துரை செய்யப் பட்டிருப்பதாக தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் நடப்பு ஆண்டு ஜூலை மாதம் வரை 10,066 விபத்து வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. இந்த விபத்துக்களில் 10,536 பேர் உயிரிழந்தனர். கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை 10,589விபத்துக்களில் 11,106 பேர்...
ஒரே குடும்பத்தில் பலர் அரசியல் பதவிக்கு வருவது புதிதல்ல என சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் நேற்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த சிவகங்கை எம்.பி.கார்த்தி சிதம்பரம், புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டி கடைவீதியில் செய்தியாளர்களிடம் கூறியது: ஒரு குடும்பத்தில் இருந்து பலர் அரசியல் பதவிக்கு வருவதுபுதிதல்ல. பல மாநிலங்களில், பல கட்சிகளில் நிகழ்ந்துள்ளது. அதுபோல, ஒரே குடும்பத்தில் ஒருவர்...
“தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பழநி, திருச்செந்தூர், ஸ்ரீரங்கம், சமயபுரம் மற்றும் தஞ்சை பெரிய கோயில் போன்ற கோயில்களில் தமிழக அரசு அந்தந்த கோயில்களுக்கென்றே ஒரு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியை நியமித்து பிரசாதங்கள் முறையாக வழங்கப்படுகிறதா? என்பதை தமிழக இந்துசமய அறநிலையத்துறை கண்காணிக்க வேண்டும்,” என்று தமாகா பொதுச் செயலாளர் எம்.யுவராஜா வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமான லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு,...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த கெங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வட்டாட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கு காரணமானோரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த கெங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மோகன்ராஜ், தமது நிலத்தை பறிக்க அரசியல் கட்சி ஆதரவுடன் நடந்த முயற்சிகளால் மனம் உடைந்து, அதற்கு காரணமானோர்...










