162 மீனவர்களை விடுவிக்க கோரி இலங்கை துணை தூதரகம் 8-ம் தேதி முற்றுகை: பாமக தலைவர் அன்புமணி தகவல்
admin - 0
இலங்கை சிறைகளில் உள்ள 162 மீனவர்களை, அவர்களின் படகுகளுடன் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி வரும் 8-ம் தேதி பாமக சார்பில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் ராமேஸ்சுவரம் முதல் நாகப்பட்டினம் வரையிலான இந்திய எல்லைக்கும், இலங்கை எல்லைக்கும் இடைப்பட்ட கடல் பரப்பு மிகவும் குறுகியது ஆகும்.அதனால்,...
ராகுல்காந்திக்கு எதிராக வெறுப்பு அரசியல், பொய் பிரச்சாரம் செய்யும் ஆர்எஸ்எஸ், பாஜகவைக் கண்டித்து, சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் சென்னையில் நேற்று தேசிய விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக வெறுப்பு அரசியல், பொய் பிரச்சாரம் செய்யும் ஆர்எஸ்எஸ்., பாஜகவை கண்டிக்கும் வகையில் சென்னை மாவட்ட காங்கிரஸ்...
மகாத்மா காந்தியடிகளின் 156-வதுபிறந்த நாளை ஒட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் காந்தியின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்தியடிகளின் 156-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆளுநர் மாளிகையில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு கீழே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கும் கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள காந்தி சிலைக்கும்...
இலங்கை தலைமன்னாரைச் சேர்ந்த சரவணபவன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல்செய்த மனுவில் கூறியிருப்பதாவது: இலங்கையை சேர்ந்த நான், கடந்த மார்ச் மாதம் சுற்றுலா விசாவில் இந்தியா வந்தபோது, ராமநாதபுரம் சிவசக்தியை திருமணம்செய்ய முடிவு செய்தேன்.
ஆனால், நான் இலங்கை குடியுரிமை பெற்றவன் என்பதால், எனது திருமணத்தை பதிவு செய்யமுடியவில்லை. எனினும், சிவசக்தியை இந்து முறைப்படி கோயிலில் திருமணம் செய்து கொண்டேன். இந்நிலையில், எனது 3 மாத விசாகாலம் முடிவடைந்ததால்,...
தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
அமைச்சரவை மாற்றம் தற்போது அடிக்கடி நடப்பதில்லை.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாஆட்சியில், எந்த அமைச்சர் பதவியில் இருக்கிறார், யார் இல்லை என்பதை செய்தியைப் பார்த்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த அளவுக்கு அமைச்சர்கள் அச்சத்துடன் இருந்தனர். ஆனால், திமுக ஆட்சியில் அமைச்சர்கள் சுதந்திரமாக செயல்படும் சூழலை முதல்வர் உருவாக்கியுள்ளார்.
மது ஒழிப்பை நாடு முழுவதும் கொண்டுவந்தால், தமிழகத்திலும் அதை...
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் பார்களை மூட மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: காந்தி ஜெயந்தி தினத்தில் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் கீழ், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (எப்எல்-1) மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அதைச் சார்ந்த பார்கள், எப்எல்-2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சேர்ந்த பார்கள், எப்எல்-3 உரிமம்...
கடந்த 2011-15 அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துக்கழகத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 47 பேர்மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2015, 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் 3 மோசடி வழக்குகளை பதிவு செய்திருந்தனர்.
இந்த...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த சின்ராஜ், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தஞ்சை பெருவுடையார் கோயிலின் கிழக்குப் பகுதியில் உள்ள இந்திரன் கோயில் கடந்த40 ஆண்டுகளுக்கு மேலாக மூடப்பட்டும், பூஜைகள் நடைபெறாமலும் உள்ளது.
மேலும், பராமரிப்புக் குறைபாடு காரணமாக கோயில் சேதமடைந்துள்ளது. எனவே, இந்திரன் கோயிலை திறந்து தினமும் பூஜைகள்...
தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள் கொண்டாட்டம்: மொழிபெயர்ப்பாளர்களுக்கு பாராட்டு
admin - 0
தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள் சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பல்வேறு மொழிபெயர்ப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திசைதோறும் திராவிடம் (தமிழ் இலக்கிய மற்றும் தமிழக வரலாற்று நூல்கள் மொழிபெயர்ப்பு), முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்பு திட்டம் (மருத்துவ மற்றும் தொழில்நுட்ப நூல்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்பு), இளந்தளிர் இலக்கிய திட்டம் (குழந்தைகளுக்கான இலக்கியங்களை தமிழ் எழுத்தாளர்களைக் கொண்டு...
பொதுமக்கள் பார்வையில் படும்படி தினமும் ரோந்து செல்லும் போலீஸார்: காவல் வாகன விளக்குகளை எரியவிட்டவாறு செல்லவும் உத்தரவு
admin - 0
குற்றச் செயல்களை தடுக்கும் வகையில், சென்னை போலீஸார் பொதுமக்கள் பார்வையில் படும்படி தினமும் ரோந்து சுற்றி வருகின்றனர். பகுஜன் சமாஜ்வாதி கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ம்தேதி பெரம்பூரில் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இதையடுத்து, சென்னையில் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கையை போலீஸார் முடுக்கிவிட்டனர். குறிப்பாக ரவுடிகளை ஏ, ஏ-பிளஸ், பி, சி என 4 பிரிவாக வகைப்படுத்தி,...










