Google search engine
புதிதாக பால் வளத்துறை மற்றும் கதர் துறை அமைச்சராக ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பொறுப்பேற்ற பிறகு, அம்பத்தூர், சோளிங்கநல்லூர் பால் பண்ணைகள் மற்றும் பால் உப பொருட்கள் பண்ணையில் நேற்று ஆய்வு செய்தார். அம்பத்தூர் பால் பண்ணையை பொருத்தவரை, தினசரி சுமார் 4.60லட்சம் லிட்டர் பால் தயாரிக்கப்பட்டு அம்பத்தூர், அண்ணாநகர், தி.நகர்,அயனாவரம், ஆவடி, திருவல்லிக் கேணி போன்ற பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இந்த ஆலையில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு, பால் பாக்கெட் தயாரிப்பு மற்றும்...
தமிழகத்தில் 2021-ம் ஆண்டுக்குப் பிறகு 46 புதிய தொழிற்சாலைகள் திறக்கப்பட்டதுடன், 1.39 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தியுள்ளதால், இந்தியாவில் தொழில் வளர்ச்சியில் தமிழகம் தலைசிறந்த மாநிலம் என மத்திய அரசின் புள்ளியியல் துறை ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி தொடங்கிய பிறகு, 2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் பொருளாதார...
தமிழகத்தில் மேலும் 500 டாஸ்மாக் மதுபானக் கடைகளை குறைப்பது உள்ளிட்ட சில முக்கியமான முடிவுகள் குறித்து தமிழக அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அக்.8-ம் தேதி காலை 11மணிக்கு தலைமைச்செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், தமிழக அரசின் நிதி சார்ந்த புதிய மற்றும் பழைய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, முக்கிய முடிவுகள்எடுக்கப்படுகின்றன. தொழில்துறை முதலீடுகள், சலுகைகள் குறித்து விவாதிக்கப்பட்டு ஒப்புதல்கள்...
விண்வெளி அறிவியல் ஆய்வில் சந்திரயான், மங்கள்யான், ஆதித்யா, ஆஸ்ட்ரோசாட் உட்பட பல்வேறு முன்னெடுப்புகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் சூரிய குடும்பத்தில் பூமிக்குமிக அருகில் உள்ள வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்காக வீனஸ் விண்கலத்தை அனுப்புவதற்கு இஸ்ரோ திட்டமிட்டு வந்தது. சமீபத்தில் இந்த திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து ரூ.1,236 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை அடுத்து பணிகளை இஸ்ரோ தொடங்கியுள்ளது. இந்நிலையில்,...
காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, பாமக சார்பில் விடுக்கப்பட்ட அரை நாள் கடையடைப்பு போராட்டத்தால், அரூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று (அக்.4) பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்தி தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் நீர் நிரப்ப வேண்டும் என பாம்க சார்பில் தருமபுரி மாவட்டம் முழுவதும் இன்று அரை நாள் கடை அடைப்புக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. அதன்படி போராட்டத்தினை...
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சென்னையில் கடந்த 2007-ம் ஆண்டில் மெட்ரோ ரயில் திட்டபணிகள் தொடங்கப்பட்டன. கடந்த 2015-ம் ஆண்டில் முதல்கட்ட மெட்ரோரயில் திட்ட சேவைகள் தொடங்கப்பட்டன. தற்போது சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும், விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையும் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம் கடந்த...
தெற்கு ரயில்வேயில் சென்னை ரயில்வே கோட்டம் சார்பில், தூய்மை வாரம் நிறைவு விழா மற்றும் காந்தி ஜெயந்தி விழா ஆகிய நிகழ்ச்சிகள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளில் தெற்குரயில்வே கூடுதல் பொதுமேலாளர் கவுசல் கிஷோர், சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா மற்றும் ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர். மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, ரயில்வே ஊழியர்களின் தேசபக்தி...
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 2 அணு உலைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த அணு உலைகளில் ஆண்டுதோறும் எரிபொருள் நிரப்பவும், பராமரிப்புப் பணிக்காகவும் மின்உற்பத்தி நிறுத்தப்படுவது வழக்கம். மேலும், அவ்வப்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவும் மின் உற்பத்தி நிறுத்தப்படுகிறது. இந்நிலையில், முதலாவது அணு உலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால், 1,000...
விஜய் கட்சி மாநாட்டுக்கான பந்தல்கால் நடும் விழா விக்கிரவாண்டியில் நாளை நடைபெறுகிறது. தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி கட்சி கொடியையும், பாடலையும் அறிமுகம் செய்தார்.தொடர்ந்து, மாநாட்டு நடத்துவதற்கான பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநாட்டுக்கு ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் எத்தனை பேரை அழைத்து வர வேண்டும், அவர்களுக்கான வசதிகள் குறித்து...
கோயம்புத்தூர் வடவள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் காமராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், “ஈஷா யோகாமையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தனது 2 மகள்களை மீட்டுத்தர வேண்டும்” என்று கோரியிருந்தார். இதையடுத்து, ஈஷா யோகா மையம் மீதுள்ள நிலுவை வழக்குகள் குறித்து ஆய்வு செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, கோவை மாவட்ட காவல் மற்றும் சமூகநலத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் ஈஷா மையத்தில் விசாரணை நடத்தினர். இரண்டாவது நாளாகநேற்றும் விசாரணை...