“அந்தத் தொகுதிகளை நமக்கு கேட்க வேண்டும்” – திருச்சி அமைச்சர்களுக்கு திகில் கொடுக்கும் தோழர்கள்
admin - 0
திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைக் கேட்போம் என்று இரண்டு கம்யூனிஸ்ட்களும் ஒரே குரலாக ஒலித்திருக்கும் நிலையில் அடுத்த அதிரடியாக, அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஸ் தொகுதிகளை தங்களுக்குக் கேட்க வேண்டும் என தீர்மானமும் நிறைவேற்றி இருக்கிறார்கள் தில்லான தோழர்கள்.
திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கூட்டத்தில் திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளை இம்முறை திமுக-விடம் கேட்டுப் பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பி...
சென்னை மெரினா கடற்கரையில் அமையவுள்ள 300 கடைகளுக்கு குலுக்கல் முறையில் தேர்வு இன்று (பிப்.12) நடைபெறுகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, சென்னை மெரினா கடற்கரையில் அமையவுள்ள 300 கடைகளுக்கான குலுக்கல் முறையிலான தேர்வு சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் இன்று (பிப்.12) காலை 10.00 மணிக்கு நடைபெறுகிறது.
ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.பால் வசந்தகுமார் மேற்பார்வையில் குலுக்கல் நடைபெறுகிறது. சென்னை மெரினா கடற்கரை 4...
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் வழித்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சவுத்ரி மற்றும் அவரது குழுவினர் முதல்கட்ட ஆய்வை நேற்று தொடங்கினர். கட்டுமானப் பணிகள், மின்சாரம், தண்டவாளம் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன.
சென்னையில் 2-ம் கட்டமாக, 3 வழித்தடங்களில், 116.1 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுகின்றன. இதில், கலங்கரைவிளக்கம் - பூந்தமல்லி வரை 26.1 கி.மீ. தொலைவிலான வழித்தடத்தின் ஒருபகுதியாக, பூந்தமல்லி - வடபழனி...
பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் குற்றச் செயல்களை தடுக்க போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு புதன்கிழமையும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை காவல் ஆணையர் அருண் நேரில் பெற்று வருகிறார்.
அந்த வகையில், நேற்று 28 பேரிடம் புகார் மனுக்களை அவர்...
மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி, மாற்றுத் திறனாளிகள் நேற்று 2-வது நாளாக சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட முயன்ற 450-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.
ஆந்திராவில் வழங்குவதை போல, தமிழகத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்கக்கோரி, தமிழக அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், சென்னையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மாநில ஆணையரகம்...
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகப்பேறு மருத்துவர்கள் இடமாறுதல் கலந்தாய்வை நடத்த கோரிக்கை
admin - 0
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றும் மகப்பேறு மருத்துவர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று அரச மகப்பேறு, குழந்தைகள் நல மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் சிறப்பு மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். அதற்காக, ஏற்கெனவே அங்கு பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு கடந்த வாரம் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
ஆனால், மகப்பேறு துறையில்...
மார்ச் 1 முதல் யுடிஎஸ் மொபைல் செயலி நிறுத்தப்படுகிறது – ‘ரயில் ஒன்’ செயலி பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தல்
admin - 0
இந்தியாவில் ரயில் சேவைகளை பெறுவதற்கு பல்வேறு செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் யுடிஎஸ் செயலி (UTS- Unreserved Ticketing System) முக்கியமானதாகும். இது 2014-ம் ஆண்டு டிசம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது.
நடைமேடை டிக்கெட், சீசன் டிக்கெட், முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை இந்த செயலியில் பதிவு செய்து கொள்ளலாம். இந்நிலையில், யுடிஎஸ் செயலி மார்ச் 1-ம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதே நேரத்தில், ரயில் ஒன் (RailOne) செயலியை பயன்படுத்த...
தீ விபத்து ஏற்பட்டால் விரைந்து அணைக்கும் முறை: தமிழகம் முழுவதும் தனியார் காவலர்களுக்கு பயிற்சி
admin - 0
தீ விபத்து ஏற்பட்டால் விரைந்து அணைப்பது எப்படி என தமிழகம் முழுவதும் தனியார் காவலர்களுக்கு தீயணைப்பு துறையினர் பயிற்சி அளித்தனர்.
தீ விபத்து ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்வது, தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு வீரர்கள் விபத்து இடத்துக்கு வருவதற்குள் தீயை கட்டுக்குள் கொண்டு வருவது எப்படி என குடியிருப்புகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், திரையரங்கம், வணிக வளாகங்கள், பள்ளிகள் போன்றவற்றில் பணிபுரியும் தனியார் காவலர்களுக்கு தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி...
ஊராட்சி செயலர்களை புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்
admin - 0
ஊராட்சி செயலர்களை புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் ஊதியக் குழு பரிந்துரைப்படி, ஊராட்சி செயலர்களுக்கு காலமுறை ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. பதிவறை எழுத்தர் பணிக்கு இணையான ரூ.15,900-50,400 காலமுறை ஊதியத்தை ஊராட்சி செயலாளர்கள் பெற்று வருகின்றனர்.
அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி, மருத்துவப் படி போன்றவையும் வழங்கப்படுகிறது....
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர் டி.ராதாகிருஷ்ணன் (73). இவர் கடந்த 1981-ல் தமிழக கேடரில் ஐபிஎஸ் ஆனார். மதுரை காவல் ஆணையர், சென்னை இணை ஆணையர் உட்பட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். பின்னர் கூடுதல் டிஜிபியாக பணி ஓய்வு பெற்று சென்னையை அடுத்த பனையூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், அவர் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது உடலுக்கு குடும்பத்தினர், நண்பர்கள், போலீஸ் அதிகாரிகள் நேரில் அஞ்சலி செலுத்தினர்....
