சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட்ட விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது.
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் நேற்று காலை 10.10 மணிக்கு புறப்பட தயாரானது. விமானத்தில் 65 பயணிகள், 5 ஊழியர்கள் என மொத்தம் 70 பேர் இருந்தனர். விமானம் ஓடு பாதையில் ஓட தொடங்கிய போது, திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டுபிடித்தார்.
இதையடுத்து, விமானத்தை ஓடுபாதையில் நிறுத்திய விமானி, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்....
கோயில் திருவிழாக்களில் ஆபாச நடனங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
admin - 0
கோயில் திருவிழாக்களில் ஆடல்,பாடல் வடிவில் ஆபாச நடனங் களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றைவிசாரித்து நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு பல்வேறு கலை, கலாச்சாரம் கொண்ட மாநிலம். இந்த கலை, கலாச்சாரத்தில் இளைஞர்கள் ஆர்வம் கொள்ளாமல், சினிமா பாடல்களை...
ஜெய்ப்பூரில் கோ-ஆப்டெக்ஸ் புதிய விற்பனை நிலையம்: சட்டப்பேரவையில் அமைச்சர் ஆர்.காந்தி தகவல்
admin - 0
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கோ-ஆப்டெக்ஸ் புதிய விற்பனை நிலையத்தை திறக்கவிருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, பிற மாநிலங்களில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் அமைக்கப்படுமா என்று பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ இ.கருணாநிதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமைச்சர் ஆர்.காந்தி பதில் அளித்து பேசியதாவது: இந்தியா முழுவதும் 150 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 106 விற்பனை நிலையங்களும், பிற மாநிலங்களில் 44 நிலையங்களும்...
திண்டிவனம் அருகே பாதிராபுலியூரில் புயலால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், போர்வை, காய்கறி உள்ளிட்டவற்றை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று வழங்கினார். அதேபோல, மயிலம் மற்றும் திண்டிவனத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைப் பார்வையிட்டு, நிவாரணப் பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். எனது குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் உரிய பதில் அளிப்பதில்லை” என்றார்.
பால் முகவர்களிடம் மோசடி செய்யும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை: சென்னை காவல்துறைக்கு நலச்சங்கம் வேண்டுகோள்
admin - 0
சென்னையில் பால் முகவர்களை திட்டமிட்டு ஏமாற்றி, மோசடி செய்யும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு தமிழக பால் முகவர்கள் நலச்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து தமிழக பால் முகவர்கள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பால் முகவர்களின் கடைகளுக்கு அதிகாலை நேரத்தில் டுவீலரில் வரும் மர்மநபர், மாநகராட்சி பணியாளர் என கூறிக் கொண்டு, உங்கள் பகுதியில் மழைநீரில்...
வீட்டு வசதி வாரியத்தால் எடுக்கப்பட்ட இடங்களில் வசிப்பவர்களுக்கு நிலத்தை விடுவிப்பது குறித்து ஆராய 2 பேர் குழு – அமைச்சர் தகவல்
admin - 0
வீட்டு வசதி வாரியத்தால் எடுக்கப்பட்ட நிலங்களின் உண்மை நிலை அறியாமல் அதை வாங்கி குடியிருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அந்த நிலத்தை விடுவிப்பது தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்துள்ளதாகவும், இக்குழு அளிக்கும் பரிந்துரையின்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அமைச்சர் சு.முத்துசாமி நேற்று கூறியதாவது: வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் 40 ஆண்டுகளுக்கு முன் இடங்கள் எடுக்கப்பட்டு, ஆரம்பகட்ட...
ஜே.பி.நட்டா பயணித்த குண்டு துளைக்காத வாகனம் பழுதடைந்தது ஏன்? – டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்
admin - 0
தமிழகம் வந்த மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவின் குண்டு துளைக்காத வாகனம் திடீரென பழுதடைந்தது ஏன் என டிஜிபி விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான ஜே.பி.நட்டா மத்திய பாதுகாப்பு படையினருடன் கூடிய இசட் பிளஸ் (z+) பாதுகாப்பு பிரிவு உடையவர். அவர் 2-ம் தேதி சென்னைக்கு வருகிறார் என்ற தகவல் அறிந்ததும் அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக...
திருப்பூரில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்த போலீஸார் இருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
திருப்பூரில் பாஜக சார்பில் தேசியக்கொடி பேரணி சமீபத்தில் நடைபெற்றது. அதில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். அப்போது, அனுப்பர்பாளையம் மற்றும் திருப்பூர் தெற்கு காவல் நிலையங்களில் காவலர்களாகப் பணியாற்றும் மந்திரம், சின்னச்சாமி ஆகியோர் நயினார் நாகேந்திரனை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். இதையடுத்து, இருவரையும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட...
விஜய்யை ஓரங்கட்டிவிட்டு தன்னை முன்னிலைப்படுத்தும் புஸ்ஸி ஆனந்த்: ஆடியோ கசிந்ததால் தவெகவில் சலசலப்பு
admin - 0
நடிகர் விஜய்யை ஓரங்கட்டிவிட்டு, புஸ்ஸி ஆனந்த் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்கிறார் என ஜான் ஆரோக்கியசாமி பேசியதாக வெளியான ஆடியோவால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் குறித்து, விஜய்யின் ஆலோசகராகவும், தவெக தேர்தல் வியூக வகுப்பாளராகவும் செயல்பட்டு வரும் ஜான் ஆரோக்கியசாமி பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், விஜய்யின் வலதுகரமாக இருந்து வரும் தவெகவின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த்...
“ஆளும் கட்சியினருக்கும் குறைகள் இருக்கின்றன!” – திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்து மாணிக்கம் ஒப்புதல்
admin - 0
திமுக நிகழ்ச்சிகள், முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் என அனைத்திலும் முன்நிற்பவர் திமுக வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம். அவரிடம், நடப்பு அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம்.
2026 தேர்தலில் வணிகர்களின் வாக்கு யாருக்குச்சாதகமாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?
வணிகர்கள் வாக்குகள் 90 சதவீதம் திமுக கூட்டணிக்குத்தான் கிடைக்கும். மத்திய அரசுதான் வரிகளை போட்டு பிழிகிறது. மாநில அரசு வரிச்சுமையை கூட்டாததால் வியாபாரிகள் மகிழ்ச்சியாக, நிம்மதியாக...










