பிஹாரில் இரட்டை இன்ஜின் என்டிஏ அரசு வரும் தேர்தலில் அகற்றப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார். பிஹாரில் தேர்தல் ஆணையத்தின் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, வாக்காளர் அதிகார யாத்திரை மேற்கொண்டார். ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் இதில் இணைந்து கொண்டார்.
ஆகஸ்ட் 18-ம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை 28 மாவட்டங்களில் 1,300 கி.மீ....
தனது தலைமையிலான அரசின் செயல்பாட்டின் மூலம் ஆந்திர மாநிலத்தை ராம ராஜ்ஜியமாக கட்டியெழுப்புவோம் என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை அன்று அன்னமய்யா மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது: முந்தைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியில் ஆந்திராவின் எதிர்காலத்தை அழித்தது. மக்கள் நல திட்டங்களை சீர்குலைத்தது, நிதியை முறைகேடாக கையாண்டது, நீர்ப்பாசன திட்டங்களை முடக்கியது.
ஆந்திர மாநிலத்தை மீண்டும் கட்டமைப்பது...
கொலோன் பல்கலை. நூலகத்தை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்: மூடப்பட்ட தமிழ்க் கல்விப் பிரிவு மீண்டும் திறக்கப்படுமா?
admin - 0
ஜெர்மனியின் கொலோன் நகரில் பழம்பெருமை வாய்ந்த கொலோன் பல்கலைக்கழகம் உள்ளது. இதில் கலை மற்றும் சமூகவியல் கல்விப் புலத்தின் கீழ் இந்தியவியல் மற்றும் தமிழ்க் கல்விப் பிரிவு கடந்த 1963 முதல் செயல்பட்டு வந்தது. இத்துறை நிதிப் பற்றாக்குறையால் கடந்த வருடம் அக்டோபர் 30-ம் தேதியுடன் மூடப்பட்டது. இதற்கு முன்பும் இந்த தமிழ்ப் பிரிவு, 2 முறை மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது.
கடைசியாக கடந்த 2021 ஜுலையில் கிடைத்த நிதியால்...
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஒரு கலந்தாய்வு கூட்டத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: மத்திய அரசு தென்னிந்தியாவில் உள்ள ஹைதராபாத், அமராவதி, சென்னை, பெங்களூரு ஆகிய 4 தலைநகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் திட்டத்துக்கு சர்வே செய்ய உத்தரவு வழங்கி உள்ளது.
இதன் மூலம் 5 கோடி மக்கள் பயனடைவர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முதற்கட்ட ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்....
நாடு முழுவதும் எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டுக்கு எதிராக வழக்கறிஞர் அக் ஷய் மல்ஹோத்ரா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
அவர் தனது மனுவில், “2023-க்கு முன்பு தயாரிக்கப்பட்ட கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் சில பிஎஸ்-6 மாடல் வாகனங்கள் அதிக எத்தனால் கலந்த எரிபொருள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்படவில்லை. பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதால் இயந்திர தேய்மானம், எரிபொருள் இழப்பு மற்றும்...
புதிய குடியேற்ற சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி போலி பாஸ்போர்ட், போலி விசா மூலம் இந்தியாவுக்குள் நுழைந்தால் 7 ஆண்டுகள் சிறை, ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். வெளிநாட்டினர் வருகையை முறைப்படுத்த பாஸ்போர்ட் சட்டம்,வெளிநாட்டினர் பதிவு சட்டம், வெளிநாட்டினர் சட்டம், குடியேற்ற சட்டம் போன்றவை அமலில் இருந்தன. அவை ஒன்றிணைக்கப்பட்டு புதிய குடியேற்ற மசோதா 2025 வரையறுக்கப்பட்டது.
இந்த மசோதா கடந்த ஏப்ரலில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு,...
கருப்பு பணத்தை வெள்ளையாக்க அரசியல் கட்சி: ரூ.271 கோடி பரிவர்த்தனை செய்த ராஜஸ்தான் தொழிலதிபர்
admin - 0
ராஜஸ்தானில் கருப்பு பணத்தை வெள்ளையாக்க அரசியல் கட்சி துவங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.271 கோடி பரிவர்த்தனை செய்த தொழிலதிபர் வருமான வரித்துறையினரிடம் சிக்கினார்.
ராஜஸ்தானின் பில்வாராவில் தொழிலதிபராக இருப்பவர் கமலேஷ் ஆச்சார்யா. இவர், தனது நண்பர்களான வழக்கறிஞர்கள் விகாஸ் வியாஸ் மற்றும் தீபக் ஜோஷி ஆகியோருடன் இணைந்து ஒரு அரசியல் கட்சி துவக்கி உள்ளார்.
சுமார் மூன்று வருடங்களுக்கு முன் துவக்கப்பட்ட இக்கட்சியின் பெயர், ‘தேசிய சர்வ சமாஜ் கட்சி’. இதன் பின்னணியில்...
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், காவிரி, முல்லைப் பெரியாறு மற்றும் மரபணு மாற்று தொழில்நுட்பம் ஆகிய விவகாரங்கள் முன்னிறுத்தப்பட்டன.
இந்த கண்டன ஆர்ப்பாட்டம் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் நேற்று( ஆக. 26) நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் மாநிலத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமை வகித்தார்.
ஆர்பாட்டத்திற்கு பின் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவதற்கு...
2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஏல விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான விளையாட்டு அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பாக மத்திய அமைச்சரவை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2030-ம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடத்துதற்கான ஏல விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான...
புதிய தொழில்நுட்பங்கள் போரின் தன்மையை மாற்றியமைத்துள்ளதால், குறுகிய மற்றும் நீண்ட போர்களுக்கு இந்தியா தயாராக இருக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற ராணுவ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், “வீரர்களின் எண்ணிக்கையும் ஆயுதங்களும் மட்டுமே இனி போதுமானதாக இருக்காது. சைபர் யுத்தம், செயற்கை நுண்ணறிவு, ஆளில்லா வான்வழி ட்ரோன்கள் மற்றும் செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பு ஆகியவையே எதிர்காலப் போர்களை...










