உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட காசோலை மோசடி வழக்கு ஒன்றில் நீதிபதிகள் அரவிந்த் குமார், சந்தீப் மேத்தா ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
காசோலை மோசடி வழக்கில் ஒருவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட பிறகு புகார்தாரருடன் சமரசம் செய்து கொண்டால் சிறை தண்டனையை தவிர்க்கலாம். இரு தரப்பினர் இடையே சமரச ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டால், என்ஐ சட்டத்தின் (Negotiable Instruments Act) பிரிவு 138-ன் கீழ் விதிக் கப்பட்ட...
பஞ்சாப் மாநிலத்தில் வெள்ள நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால், கல்வி நிறுவனங்களுக்கு செப்டம்பர் 7-ம் தேதி வரை விடுமுறை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித் துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெய்ன்ஸ் கூறுகையில், “ மாநிலத்தின் வெள்ள நிலைமையை கருத்தில் கொண்டு முதல்வர் பகவந்த் சிங் மான் அறிவுறுத்தலின்படி பஞ்சாப் முழுவதும் உள்ள அனைத்து அரசு உதவி பெறும், அங்கீகரிக்கப்பட்ட மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள்,...
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு எஸ்சிஓ கண்டனம்: ரஷ்யா, சீனாவோடு இணைந்து இந்தியாவும் ஆதரவு
admin - 0
சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாட்டில் ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக எஸ்சிஓ கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:
இப்போதைய சூழலுக்கு ஏற்ப ஐ.நா. சபையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். குறிப்பாக ஐ.நா.வின் ஆட்சி மன்ற அமைப்புகளில் வளரும் நாடுகளுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கொள்கையை எஸ்சிஓ...
கிழக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 6.0 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜலாலாபாத் அருகில் பூமியில் 8 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் குனார் மாகாணம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. இங்கு பெரும்பாலான வீடுகள், மண், பாறைகளை கொண்டு கட்டப்பட்டிருந்ததால், நிலநடுக்கத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் அவை இடிந்து விழுந்தன. பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில்...
பிஆர்எஸ் கட்சியிலிருந்து மேலவை உறுப்பினர் கவிதா சஸ்பெண்ட்: மகள் மீது கே.சந்திரசேகர ராவ் ஒழுங்கு நடவடிக்கை
admin - 0
தெலங்கானா மாநிலத்தில் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சியில் கட்டப்பட்ட காலேஷ்வரம் அணையின் ஒரு தூண் சரிந்ததால், தற்போதைய காங்கிரஸ் அரசு இது தொடர்பாக விசாரணை நடத்தியது.
மேலும், இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. பிஆர்எஸ் ஆட்சியில் கட்டப்பட்ட காலேஷ்வரம் அணை, அப்போதைய ஆட்சியாளர்களால் கமிஷன் பெறப்பட்டு, தரமின்றி கட்டப்பட்டதாக தற்போதைய காங்கிரஸ் அரசு குற்றம் சாட்டி வருவதோடு, இதற்காக சிபிஐ...
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் மிகவும் பிரபலமான மகாராஜா யஷ்வந்த் ராவ் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்ள என்ஐசியூ எனப்படும் நியூநேட்டல் இன்டென்சிவ் கேர் யூனிட்டில்(பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு) பச்சிளம் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இந்தப் பிரிவில் இருந்த 2 பச்சிளம் குழந்தைகளை, எலிகள் கடித்துக் குதறியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த மருத்துவமனைதான் மத்திய பிரதேச மாநிலத்திலேயே மிகப்பெரிய மருத்துவமனை என்று பெயர் பெற்றதாகும்.
அந்த...
கர்நாடகாவில் உள்ள மைசூருவில் அகில இந்திய பேச்சு மற்றும் செவித்திறன் நிறுவனத்தின் வைர விழா நேற்று நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா, மத்திய சுகாதார இணை அமைச்சர் அனுபிரியா படேல், கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ், பாஜக எம்.பி. யதுவீர் வாடியார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் முதல்வர் சித்தராமையா கன்னடத்தில் உரையாற்றினார். அவர் தனது உரையை...
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஆம் ஆத்மி எம்எல்ஏ ஹர்மீத்: துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோட்டம்
admin - 0
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஆம் ஆத்மி எம்எல்ஏ துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். பஞ்சாப் மாநிலம், சனூர் சட்டப் பேரவை தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ ஹர்மீத் பதன்மஜ்ரா மீது, ஒரு பெண் போலீஸில் புகார் கொடுத்திருந்தார். அதில், ‘தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக பொய் சொல்லி எம்எல்ஏ ஹர்மீத் என்னுடன் தொடர்பு வைத்திருந்தார்.
மேலும், என்னை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, மிரட்டல்,...
மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இந்த சமூகத்தில் 96 குலி மராத்தா, குன்பி ஆகிய இரு பிரதான பிரிவுகள் உள்ளன. இதில் 96 குலி மராத்தா முன்னேறிய வகுப்பினராகவும், குன்பி சமுதாயத்தினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும் (ஓபிசி) அங்கீகரிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த சூழலில் 96 குலி மராத்தா பிரிவினரையும் ஓபிசி பிரிவில் சேர்க்க வேண்டும் என்று மராத்தா சமுதாய தலைவர் மனோஜ் ஜாரங்கே பாட்டீல் கோரிக்கை விடுத்துள்ளார். இதை முன்னிறுத்தி...
ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நரசாபுரம், தூர்ப்பு தூள்ளு கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை விநாயகர் சிலைகளை ஏரியில் கரைக்க டிராக்டரில் ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
வழியில் டிராக்டரை டிரைவர் ஓரமாக நிறுத்திவிட்டு தண்ணீர் குடிக்கச் சென்றார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு சிறுவன் டிராக்டரில் ஏறி அதை ஓட்ட முயன்றார். இதில் டிராக்டர் தாறுமாறாக ஓடி 4 பேர் மீது ஏறி இறங்கியதில் நால்வரும் பரிதாபமாக...










