டெல்லியில் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்காக இறந்த பெண்ணின் உடலில் ரத்த ஓட்டம் கொண்டு வந்த டாக்டர்கள்
admin - 0
டெல்லியில் உறுப்புகளை தானம் செய்வதற்காக இறந்த பெண்ணின் உடலில் மீண்டும் ரத்த ஓட்டத்தை கொண்டு வந்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
டெல்லி துவாரகா பகுதியை சேர்ந்தவர் கீதா சாவ்லா (55). நரம்பியல் கோளாறு காரணமாக பக்கவாதம் ஏற்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார். கடந்த 5-ம் தேதி அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து துவாரகாவின் எச்சிஎம்சிடி மணிப்பால் மருத்துவமனையில் கீதாவை சேர்த்தனர். அங்கு அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அவர்...
பிஹார் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 60 சதவீதத்துக்கும் மேல் உள்ளனர். ஆனால், பாஜக போட்டியிடும் 101 தொகுதிகளில், 49 வேட்பாளர்கள் முற்பட்ட வகுப்பினர்.
இதை ஈடுசெய்ய தே.ஜ. கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தள கட்சி, பிசி, எம்பிசி பிரிவைச் சேர்ந்த வேட்பாளர்களை அதிகம் நிறுத்தியுள்ளது. இக்கட்சியில் 22 வேட்பாளர்கள் மட்டுமே முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். இங்கு காங்கிரஸ் கட்சியில் 33, ஆர்ஜேடியில் 16...
உத்தராகண்ட் மாநிலம் உதயமாகி 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, அங்கு ரூ.8,260 கோடிக்கும் மேற்பட்ட வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
உத்தராகண்ட் மாநிலம் உதயமாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதன் வெள்ளி விழாவை முன்னிட்டு அங்கு அவர் ரூ.930 கோடிக்கும் மேற்பட்ட திட்டங்களை தொடங்கி வைத்தார். ரூ.7,210 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இவற்றில் குடிநீர் , நீர்ப்பாசனம், தொழில்நுட்பக் கல்வி, எரிசக்தி, நகர்ப்புற...
மத்திய பிரதேசத்தின் பச்மரி நகரில் காங்கிரஸ் நிர்வாகிகளின் பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. இதில் அந்த கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். முன்னதாக பச்மரி சரணாலயத்தை அவர் பார்வையிட்டார். திறந்த ஜீப்பில் சரணாலயம் முழுவதும் சபாரி சென்றார்.
இதுகுறித்து பச்மரி சரணாலய துணை இயக்குநர் சஞ்சீவ் சர்மா கூறும்போது, “ராகுல் காந்தி பட்டாம்பூச்சி பூங்காவில் சிறிது நேரம் தங்கியிருந்தார். ஜீப்பில் சென்றபோது சில வகை மான்களை அவர்...
ம.பி.யில் போலீஸ் பயிற்சி காவலர்களுக்கு, ராம்சரிதமானஸை தொடர்ந்து பகவத் கீதை வகுப்பு நடத்த கூடுதல் டிஜிபி ராஜா பாபு சிங் உத்தரவிட்டுள்ளார்.
ம.பி.யில் போலீஸ் காவலர் பணிக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 4,000 இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு கடந்த ஜூலை முதல் பயிற்சி அளிக்கப்படுகிறது. ம.பி.யின் 8 பயிற்சிக் கல்லூரிகளில் 9 மாதங்களுக்கான இந்தப் பயிற்சியை கூடுதல் டிஜிபி (பயிற்சி) ராஜா பாபு சிங் கடந்த ஜூலையில் தொடங்கி வைத்தார்.
அப்போது...
கர்நாடகாவில் கரும்புக்கு வழங்கப்படும் ஆதரவு விலையை ரூ.3,500 ஆக உயர்த்தக்கோரி கடந்த 8 நாட்களாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பெலகாவி மாவட்டத்தில் நேற்று ஆயிரக்கணக்கான விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸார் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறியதால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே விவசாயிகளில் சிலர் அங்கிருந்த போலீஸாரின் மீதும், வாகனங்களின் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீஸார்...
வந்தே மாதரம் தேசிய பாடலின் 150-வது ஆண்டு நிறைவை ஒட்டி சிறப்பு அஞ்சல் தலை, நாணயத்தை பிரதமர் மோடி டெல்லியில் நேற்று வெளியிட்டார்.
வங்கமொழி கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி கடந்த 1875-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி வந்தே மாதரம் பாடலை எழுதினார். “பாரத அன்னையே நான் உனக்கு தலைவணங்குகிறேன்” என்ற பொருளில் பாடல் எழுதப்பட்டு உள்ளது. இந்த பாடலுக்கு ரவீந்திரநாத் தாகூர் இசையமைத்தார்.
சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு வந்தே...
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் தினமும் 1,550-க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகைகள் மற்றும் புறப்பாடுகளை கையாண்டு வருவதால் அதிக போக்குவரத்துள்ள விமான நிலையமாக உள்ளது.
இந்நிலையில் நேற்று டெல்லி விமான நிலையத்தில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாடு மையத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் 700-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
மேற்கு வங்கத்தில் வங்கி கணக்கில் இருந்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யின் ரூ.56 லட்சம் மோசடி
admin - 0
திரிணமூல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜியின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.56 லட்சம் மோசடி செய்யப்பட்டு உள்ளது.
மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு ஆட்சி நடத்தி வருகிறது. அந்த கட்சியின் மூத்த தலைவர் கல்யாண் பானர்ஜி. இவர் கடந்த 2001-ம் ஆண்டில் அசன்சோல் தெற்கு தொகுதி எம்எல்ஏவாக பதவி வகித்தார். கல்யாண் பானர்ஜியின் ஊதியம், படிகள் இந்த வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டன.
தற்போது ஸ்ரீராம்பூர் தொகுதி...
காங்கிரஸ் தலைவர் கார்கே சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேசியவாதத்தின் பாதுகாவலர்கள் என்று அழைத்து கொள்ளும் ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதத்தை புறக்கணித்தன. கடந்த 1925-ம் ஆண்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கப்பட்டது. அப்போது முதல் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலோ, தேசிய கீதமோ இசைக்கப்பட்டது கிடையாது.
ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் சுமார் 52 ஆண்டுகள் தேசிய கொடியும் ஏற்றப்படவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஆர்எஸ்எஸ்...










