ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பு வைத்திருந்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 12-ம் நாளான இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு தொடர்பு இருந்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்...
அகமதாபாத் விபத்து: விமானி திட்டமிட்டே எரிபொருள் ‘சுவிட்சை’ நிறுத்தியதாக இத்தாலி பத்திரிகை வெளியிட்ட செய்தியால் பரபரப்பு
admin - 0
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து தொழில்நுட்பக் கோளாறால் ஏற்படவில்லை. விமானி திட்டமிட்டு இன்ஜினுக்கு செல்லும் எரிபொருள் ‘சுவிட்சை’ நிறுத்தியுள்ளார் என்று இத்தாலிய பத்திரிகையில் பரபரப்பான செய்தியொன்று வெளியாகியுள்ளது.
இதுகுறித்து இத்தாலியின் கொரியர் டெல்லா செரா நாளிதழில் கூறப்பட்டுள்ளதாவது: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா 171 விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 260 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டுமே உயிர்பிழைத்தார். இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டது. அதில், இந்த...
பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்திய நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தால் பெரும்பாலான இடங்களில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பும் ஏற்படவில்லை.
தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் இணைந்து நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தது. அதன்படி பல்வேறு தொழிற் சங்கங்களின் வேலை...
மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் உரையாற்றினார்.
அதைப் பாராட்டி எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: ”நாட்டின் பொருளாதார மாற்றத்துக்கு இந்தாண்டு பட்ஜெட் எவ்வாறு தனது பங்களிப்பை அளிக்கும் என்பதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவாக விளக்கினார்.
விரைவான சீர்திருத்தங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு, திறன்மேம்பாடு, அடுத்த தலைமுறை கட்டமைபுக்கான நடவடிக்கைகள், சுகாதாரத்துறை மேம்பாட்டுக்கான முயற்சிகள், கல்வி...
நடாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
இந்நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதால் அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் செவ்வாய்க் கிழமை நோட்டீஸ் வழங்கின. அதில் சில பிழைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த நோட்டீஸ் நிராகரிக்கப் பட்டிருக்கலாம்.
இருப்பினும், அந்தப் பிழைகளைச் சரி...
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: ரயில் கட்டணத்தை தீர்மானிக்கும்போது, சேவைக்கான செலவு, சேவையின் மதிப்பு, வழங்கப்படும் சேவையின் வகை மற்றும் வசதிகள், மக்களின் வாங்கும் திறன் ஆகிய அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன.
கடந்த 2019ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவை 82 வழித் தடங்களில் 164 ரயில்கள் இயக்கப்படுகின்றன. 300 முதல் 400 கிலோ...
கேரள பொதுக் கல்வித் துறை அமைச்சர் வி.சிவன்குட்டி திருவனந்தபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”உலகளவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் பிறதுறைகள் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகி வரும் நேரத்தில், 'டிஜிட்டல் அடிக் ஷன்' பிரச்சினைக்கு தீவிர ஆய்வு மற்றும் தேவைப்பட்டால், சட்டமன்ற நடவடிக்கைகள் தேவையா என்பதை ஆராய வேண்டியுள்ளது.
கல்வித் துறைக்கு தொடர்ந்து வரும் புகார்கள் மற்றும் சில சம்பவங்கள், இந்தப் பிரச்சினையை தீவிரமாகக் கையாள வேண்டிய நேரம் வந்துவிட்டதாக காட்டுகின்றன....
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை காங்கிரஸ் எம்.பி.க்கள் திட்டியதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார்.
மக்களவையில் கடந்த 2ம் தேதி, முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம்.நரவனேவின் வெளியிடப்படாத நூலின் பகுதிகளை அடிப்படையாக கொண்ட ஒரு கட்டுரை பற்றி பேச காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். அப்போது முதல், மக்களவையில் அமளி ஏற்பட்டு வருகிறது.
எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக பிப்ரவரி 4ம் தேதி, குடியரசுத...
இந்திய விமானப்படை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாயு சக்தி என்ற பெயரில் பிரம்மாண்ட போர் பயிற்சியை பொக்ரானில் நிகழ்த்துவது வழக்கம். இந்தாண்டு வாயு சக்தி போர் பயிற்சி வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து விமானப்படை துணைத் தளபதி ஏர் மார்ஷல் நாகேஷ் கபூர் கூறியதாவது: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, விமானப்படை வெற்றிகரமாக பங்காற்றியது குறித்து இந்த பயிற்சியின்போது விளக்கப்படும். இந்த போர் பயிற்சி பாகிஸ்தான் எல்லைக்கு...
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது மக்களவையில் பிரதமர் மோடி ஆற்ற வேண்டிய உரை ரத்து செய்யப்பட்டது.
இது குறித்து விளக்கம் அளித்த சபாநாயகர் ஓம் பிர்லா, "காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் சிலர் பிரதமர் இருக்கை அருகே நின்று தகாத செயல்களில் ஈடுபடக் கூடும் என தகவல் கிடைத்ததால், அவைக்கு வரவேண்டாம் என பிரதமரை கேட்டுக்கொண்டேன்" என்றார்.
இதுகுறித்து சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, ஜோதி மணி உள்ளிட்ட காங்கிரஸ்...



