Google search engine
சாலை விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பவருக்கான பரிசுத் தொகை ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, நடிகர் அனுபம் கேர் உடன் சாலை பாதுகாப்பு குறித்து கலந்துரையாடினார். அப்போது, கட்கரி கூறும்போது, “சாலை விபத்தில் படுகாயமடைந்தவர்களை உடனடியாக (1 மணி நேரத்துக்குள்) மருத்துவமனையில் சேர்ப்பதன் மூலம் அவர்களுடைய உயிரை காப்பற்ற முடியும். இத்தகைய...
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா இன்று தொடங்கியுள்ள நிலையில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட பக்தர்கள் அதிகளவில் திரண்டுள்ளனர். 12 ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் மகா கும்பமேளா விழா உலகின் மிகப்பெரிய மத திருவிழா ஆகும். பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 45 கோடி பேர் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று பவுர்ணமி என்பதால் கங்கை, யமுனை, சரஸ்வதி...
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். நெரிசலில் சிக்கி காயமடைந்த பக்தர்களுக்கு சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து காலையில் நடைபெற்ற தங்க தேர் திருவிழாவில் மலையப்பர் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று அதிகாலை திருப்பாவை சேவை நடைபெற்றது. இதனை தொடர்ந்து மூலவருக்கு வெள்ளிக்கிழமை அபிஷேகம்...
பட்டய கணக்காளர் (சிஏ) மற்றும் ஹவாலா ஆபரேட்டர்கள் இணைந்து ரூ.10,000 கோடி கருப்பு பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது அமலாக்கத் துறை (இடி) சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறும்போது: ஜனவரி 2-ம் தேதி தாணே, மும்பை, வாராணசி பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, டிஜிட்டல் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றை சோதனைக்கு உட்படுத்தியதில் சிஏ மற்றும் ஹவாலா ஏஜெண்டுகள் கூட்டணி அமைத்து கருப்பு...
திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பும் வழங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பிஆர். நாயுடு அறிவித்துள்ளார். திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பிஆர். நாயுடு தலைமையில் அவசர அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. இதில், சமீபத்தில் திருப்பதியில் நடைபெற்ற கூட்ட...
தவறுகள் தவிர்க்க முடியாதவை. ஏனென்றால் நானும் ஒரு மனிதன்தானே. கடவுள் கிடையாது என்று பிரதமர் நரேந்திர மோடி பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கூறியுள்ளார். ஜெரோதா இணை நிறுவனர் நிகில் காமத் தொகுத்து வழங்கும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். பீப்பிள் பை டபிள்யூடிஎஃப் (People by WTF) என்ற தலைப்பில் நிகில் காமத் பாட்காஸ்ட் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்....
நரேந்திர மோடியுடன் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள், செல்ஃபி இணையத்தில் எப்போதுமே வைரலாகும். இந்நிலையில், பாட்காஸ்டில் பேசிய பிரதமர் மோடி இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்துள்ளார். ஜெரோதா இணை நிறுவனர் நிகில் காமத் தொகுத்து வழங்கும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அந்த வகையில் பிரதமரிடம் காமத், “நாம் நிறைய நாடுகளைப் பற்றி...
இடஒதுக்கீடு பயன்களை ஏற்கெனவே பெற்று முன்னேறிய ‘கிரீமி லேயர்’ பிரிவினரை இட ஒதுக்கீடு சலுகையில் இருந்து நீக்கலாமா வேண்டாமா என்ற முடிவை அரசு நிர்வாகம் மற்றும் சட்டமன்றம்தான் எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பட்டியலினத்தவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களுக்குள் உட் பிரிவை வகைப்படுத்த அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு கடந்த 2004-ம் ஆண்டு...
கர்நாடக துணை முதல்வரும், நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே. சிவகுமார் நேற்று முன்தினம் மாலை மத்திய அமைச்சர் சோமண்ணாவுடன் மேல் பத்ரா திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு, தென்பெண்ணை நதி படுகையில் கட்டப்பட உள்ள அணைக்கு தமிழக அரசு எதிர்ப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதித்தார். பின்னர் டி.கே. சிவகுமார் கூறியதாவது: தென்பெண்ணையாறு நீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு கடந்த 2ம் தேதி நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது....
‘‘முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சக்தி வாய்ந்தவராக இருந்தார் என நினைத்தேன். ஆனால், அவர் பலவீனமாக இருந்ததை எனது ஆய்வில் கண்டறிந்தேன்’’ என பாஜக எம்.பி.யும், எமர்ஜென்சி திரைப்படத்தில் நடித்துள்ள கங்கனா ரனாவத் கூறியுள்ளார். பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி தொகுதியில் இருந்து பாஜக எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். இவர் தயாரித்து, இயக்கி நடித்துள்ள படம் எமர்ஜென்சி. கடந்த 1975-ம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக...