பெங்களூரு பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா தமிழகத்தை சேர்ந்த பாடகியை மணந்தார்: அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்து
admin - 0
பெங்களூரு பாஜக எம்.பி.யும், பாஜக இளைஞர் அணி தலைவருமான தேஜஸ்வி சூர்யா தமிழகத்தை சேர்ந்த கர்னாடக சங்கீத பாடகி சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத்தை நேற்று திருமணம் செய்துகொண்டார். பெங்களூருவில் நடந்த இந்த திருமணத்தில் பாஜக மூத்த தலைவர் பி.எல்.சந்தோஷ், தமிழக தலைவர் கே.அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பெங்களூருவை சேர்ந்த வழக்கறிஞரான தேஜஸ்வி சூர்யா பாஜக இளைஞர் அணியில் தீவிரமாக செயல்பட்டார். அவர் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில்...
மகா கும்பமேளாவில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவம் ஒன்றுகூட நிகழவில்லை என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26 வரை வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதுகுறித்து உ.பி. சட்டப்பேரவையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று பேசியதாவது: பிரயாக்ராஜில் 45 நாட்கள் நடைபெற்ற மகா கும்பமேளாவுக்கு நாடு மற்றும் உலகம் முழுவதிலும்...
ஒடிசாவில் மூளைச்சாவு அடைந்த 16 மாதக் குழந்தையின் உறுப்புகள் தானம்: 2 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டது
admin - 0
ஒடிசாவில் மூளைச்சாவு அடைந்த 16 மாதக் குழந்தையின் உடல் உறுப்புகள் தானத்தால் 2 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி 16 மாதக் குழந்தையான ஜன்மேஷ் லேன்கா சேர்க்கப்பட்டார். தவறுதலாக அந்த குழந்தை, வாய் வழியாக விழுங்கிய பொருள் ஒன்று மூச்சுக்குழாயை அடைத்தது. இதனால் மூச்சுத்திணறலுடன் சேர்க்கப்பட்ட குழந்தைக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி...
ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் திட்டத்திற்காக எஸ்எல்பிசி சுரங்கம் தோண்டப்பட்டது. ஸ்ரீ சைலம் முதல் நல்கொண்டா வரை செயல்படுத்தப்படும் இக்கால்வாய் திட்டத்தில் 14 கி.மீ சுரங்கம் தோண்டப்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன் சுரங்கத்தில் உள்ள மேற்கூரை திடீரென சரிந்ததால் 8 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கி கொண்டனர். இவர்களை மீட்க இந்திய ராணுவப்படை, பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு படையினர் மற்றும் போலீஸார் என இரவும், பகலுமாக தீவிர மீட்பு...
ஆன்லைன் கேம்ஸ் விளையாடுவதை குடும்பத்தினர் கண்டித்ததால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர் ஒருவர் தனது பெற்றோர் மற்றும் சகோதரியை கற்களால் தாக்கி கொலை செய்தார்.
ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டம், ஜெயபடா சேத்தி சாகி பகுதியை சேர்ந்த பிரசாந்த் சேத்தி என்கிற காளியா (65), அவரது மனைவி கனகலதா (62), மகள் ரோசலின் (25) ஆகிய மூவரும் நேற்று காலையில் தங்கள் வீட்டில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். கிராம மக்கள் அளித்த தகவலின்...
மகா கும்பமேளா பற்றி ஆசியாநெட் சேனலில் விமர்சனம்: தலைமை அதிகாரிக்கு உரிமையாளர் அறிவுறுத்தல்
admin - 0
மகா கும்பமேளா பற்றி விமர்சனம் செய்த ஆசியாநெட் டி.வி. சேனலின் உயர் அதிகாரிக்கு, ‘ஒவ்வொரு இந்துவுக்கும் நம்பிக்கை முக்கியம்’ என்பதை உரிமையாளர் ராஜீவ் சந்திர சேகர் நினைவு படுத்தியுள்ளார்.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி சமீபத்தில் நடந்து முடிந்தது. கோடிக்கணக்கான மக்கள் இதில் புனித நீராடினர். இந்நிலையில் ஆசியாநெட் நியூஸ் என்ற மலையாள செய்தி சேனலில் கடந்த 1-ம் தேதி ‘கவர் ஸ்டோரி’ என்ற தலைப்பில் வெளியான...
இந்திய பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாக குறு, சிறு தொழில் துறை செயல்படுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்டுக்கு பிந்தைய கருத்தரங்கில் காணொலி மூலம் அவர் நேற்று பேசியதாவது: இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதன்மூலம் தொழில்துறையில் புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் 3-வது முறையாக பதவியேற்று உள்ளது. கடந்த பிப்ரவரியில் தாக்கல்...
இந்தியாவிலிருந்து விசா வேண்டி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கடந்த 2024-ம் ஆண்டில் 67.5 லட்சத்தைத் தொட்டுள்ளது. இதையடுத்து, கரோனாவுக்கு முந்தைய விறுவிறுப்பான நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, கரோனாவுக்கு முந்தைய 2019 காலகட்டத்தில் விசா வேண்டி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 65 லட்சமாக இருந்தது. இந்த நிலையில், கடந்த ஆணடில் அந்த எண்ணிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது .
இதுகுறித்து விசா ஆதாரம் மற்றும் தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனமான விஎப்எஸ் குளோபலின் தலைமை செயல்பாட்டு அதிகாரியான...
தரவுப் பாதுகாப்பு என்ற பெயரில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை மத்திய அரசு பலவீனப்படுத்துகிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து 'எக்ஸ்' தளத்தில் கார்கே நேற்று வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஒருபுறம், தவறான தகவல்களை அளிப்பதில் இந்தியா கடந்த பல ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது. மறுபுறம், காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டு வந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தை (ஆர்டிஐ) தரவுப் பாதுகாப்பு என்ற...
இந்தியா வளர்ந்த நாடாக மாற வாராணசியை முன்மாதிரியாக கொண்டு திட்டங்கள் அமல்படுத்தப்படும்: நிதி ஆயோக் துணைத் தலைவர் தகவல்
admin - 0
உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் பழம்பெரும் கல்வி நிறுவனமான பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உள்ளது. இதன் வளாகத்தில் இந்திய பொருளாதார அளவீட்டு சங்கத்தின் 59-வது மாநாடு நடைபெற்றது.
இதில் முக்கிய விருந்தினராக பங்கேற்ற மத்திய அரசின் நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி பேசியதாவது: நாடு முழுவதும் உள்ள நகரங்களில் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்து நவீன வளர்ச்சியை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு வாராணசியின் வளர்ச்சி ஒரு முன்மாதிரியாக...










