Google search engine
பெங்களூரு புறநகரில் பண்ணை வீட்டில் ரேவ் பார்ட்டியில் ஈடுபட்ட சீன பெண் உட்பட 31 பேர் கைது செய்யப்பட்டனர். பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் ரேவ் பார்ட்டி நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அதிகாலை 3 மணியளவில் சோதனையிடச் சென்றனர். அப்போது 31 பேர் கஞ்சா, போதைப் பொருள், மது வகைகளை அருந்திவிட்டு, நடனமாடி கொண்டிருந்தனர். அதில் 28 வயதான சீனாவை...
ஹரியானாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் காரில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் நகரை சேர்ந்தவர் பிரவீன் மிட்டல் (42). இவர் தனது பெற்றோர், மனைவி, 2 மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் நேற்று முன்தினம் ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள பாகேஸ்வர் கோயிலுக்கு வந்தார். இக்கோயிலில் நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இரவு பஞ்ச்குலா நகரின்...
இந்​தி​யா​வின் பொருளா​தா​ரத்தை வலுப்​படுத்த உள்​நாட்டு பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும் என்று பிரதமர் நரேந்​திர மோடி அழைப்பு விடுத்​துள்​ளார். குஜ​ராத் தலைநகர் காந்தி நகரில் நேற்று நடை​பெற்ற விழா​வில் ரூ.5,536 கோடி மதிப்​பிலான அரசு நலத் திட்​டங்​களை அவர் தொடங்​கி​வைத்​தார். சில திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார். விழா​வில் அவர் பேசி​ய​தாவது: இந்​தி​யா, பாகிஸ்​தான் பிரி​வினை​யின்​போது ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதி ஆக்​கிரமிக்​கப்​பட்​டது. அந்த பகு​தியை மீட்க சர்​தார் படேல் திட்​ட​மிட்​டார்....
கர்நாடகாவில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக 2 பாஜக எம்எல்ஏக்களை கட்சி மேலிடம் 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்துள்ளது. கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டம் எல்லாபுரா சட்டப்பேரவை தொகுதியின் பாஜக எம்எல்ஏ சிவராம் ஹெப்பார் கட்சி மேலிடத்தையும், மாநில தலைவர் விஜயேந்திராவையும் கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக விமர்சித்தார். இதனால் அவர் தனது பழைய கட்சியான காங்கிரஸுக்கே திரும்ப போவதாகவும் தகவல் வெளியானது. இதேபோல பெங்களூருவில் உள்ள யஷ்வந்த்பூர் தொகுதியில் எம்எல்ஏ...
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது 72 பாகிஸ்தான் ராணுவ நிலைகள் முழுமையாக அழிக்கப்பட்டன என்று எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜம்மு பிராந்திய பிஎஸ்எப் ஐஜி சுஷாங்க் ஆனந்த் ஜம்முவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மே 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் இந்திய, பாகிஸ்தான் ராணுவங்களுக்கு இடையே மிகக் கடுமையான சண்டை நடைபெற்றது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில்...
தென்மேற்கு டெல்லி பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்த 92 வங்கதேச நாட்டவரை போலீஸார் கைது செய்துள்ளனர். டெல்லியின் பல்வேறு பகுதிகளில் வங்கதேச நாட்டைச் சேர்ந்த பலர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் முதல் போலீஸார் விசாரணை நடத்தி சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வங்கதேச நாட்டைச் சேர்ந்த நபர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் சட்டவிரோதமாத தங்கியிருக்கும் வங்கதேச மக்களை கைது செய்வதற்காக, போலீஸார் 10...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் ஆபரேஷன் சிந்தூர், சாதிவாரி கணக்கெடுப்பு, மத்திய அரசின் ஓராண்டு ஆட்சி குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. குஜராத், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஒடிசா, கோவா, டெல்லி, ஹரியானா, அசாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக...
ஆபரேஷன் சிந்தூரால் இந்தியர்களின் தலைநிமிர்ந்தது. தீவிரவாதத்துக்கு எதிரான போரில் புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் உரையாற்றி வருகிறார். இதன்படி 122-வது மனதின் குரல் நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூரின்போது நமது எல்லைக்கு அப்பால் உள்ள தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த ராணுவ நடவடிக்கையால்...
தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தானை கிரே பட்டியலில் சேர்க்க உதவ வேண்டும் என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி பஹ்ரைன் அரசிடம் வலியுறுத்தி உள்ளார். பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்து உலக நாடுகளிடம் எடுத்துரைக்க, அனைத்து கட்சி எம்பிக்கள் அடங்கிய 7 குழுக்களை மத்திய அரசு நியமித்து உள்ளது. இக்குழுவினர் தனித்தனியாக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதில், பாஜக எம்.பி. வைஜெயந்த் பாண்டா தலைமையிலான குழு சவுதி அரேபியா,...
‘‘தீவிரவாத தாக்குதல் மீது நடவடிக்கை எடுக்க, பாகிஸ்தானுக்கு கடந்த 2015-ல் இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டது’’ என பதன்கோட் தாக்குதலை அமெரிக்காவில் இந்திய குழுவுக்கு தலைமை தாங்கிய காங்கிரஸ் எம்.பி சசிதரூர் நினைவுபடுத்தினார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மற்றும் விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. 4 நாட்களாக நடைபெற்ற போர் கடந்த 10-ம்...